Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கும் பணி தீவிரம்

Print PDF
தினமணி       27.05.2013

மாநகராட்சியில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கும் பணி தீவிரம்


சேலம் மாநகராட்சியில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவங்கள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, வெங்கடப்பசாலை மாநகராட்சி கட்டடம், சத்திரம் மேம்பாலம் அருகில் மாநகராட்சி கட்டடம்,சூரமங்கலம் காவல் நிலையம் அருகில், பழைய சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம், குமாரசாமிபட்டி அரசு கலைக்கல்லூரி அருகில், முதல் அக்ரஹாரம் காய்கறி சந்தைப்பகுதி, அம்மாப்பேட்டை ஜோதிதிரையரங்கு அருகில், கொண்டலாம்பட்டி, மணியனூர் ஆகிய இடங்களில் மலிவு விலை உணவகத்திற்கான கட்டமைப்புகள் அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கட்டமைப்பு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ள நிலையில், அவற்றை மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு மலிவு விலை உணவகத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 இடங்களிலும் நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள மலிவு விலை உணவகங்கள் அனைத்தும் வரும் வாரத்தில் திறக்கப்படலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

அம்மா உணவகம்:மகளிருக்கு உணவு தயாரிக்கும் பயிற்சி

Print PDF
தினமணி       26.05.2013

அம்மா உணவகம்:மகளிருக்கு உணவு தயாரிக்கும் பயிற்சி


திருப்பூரில் அம்மா உணவகத்தில் வேலை செய்யும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மாநகராட்சி சார்பில் உணவு தயாரிக்கும் பயிற்சி சனிக்கிழமை முதல் அளிக்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் பழைய பேருந்து நிலையம், குமரன் வணிக வளாகம், முதல் மண்டல அலுவலகம் உள்பட மொத்தம் 10 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட உள்ளது. இதற்காக தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 10 இடங்களிலும் புதிதாகக் கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது.

அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்கும் பொறுப்பு மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஒரு மகளிர் சுய உதவிக்குழுக்கு ஒரு உணவகம் என 10 குழுக்களிடம் பொறுப்பு அளிக்கப்பட உள்ளது. ஒரு குழுவில் உள்ள 12 மகளிர் இடம்பெறுவர். ஒருவருக்கு தினமும் ரூ.300 வீதம் சம்பளம் வழங்கப்படும். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் மாநகராட்சி மூலமாக விநியோகம் செய்யப்படும்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உணவு தயாரிக்கும் பயிற்சியில் சுயஉதவிக் குழுவினர்

ஈடுபட்டனர். நகர்நல அலுவலர் செல்வக்குமார் மேற்பார்வையில், 3 மகளிர் குழுக்களைச் சேர்ந்த மகளிர் சாம்பார் சாதம் தயாரித்தனர். ஒருவார காலத்துக்கு மகளிர் குழுக்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

கோத்தகிரியில் அம்மா உணவகம்?

Print PDF
தினமணி       26.05.2013

கோத்தகிரியில் அம்மா உணவகம்?

கோத்தகிரியில் உள்ள உணவகங்களில் கடும் விலை உயர்வால் அதிருப்தி அடைந்துள்ள பொதுமக்கள், விலை குறைவான அம்மா உணவகம் வருமா என எதிர்பார்க்கின்றனர்.

கோத்தகிரியில் காய்கறிகள் மற்றும் இதரப் பொருள்கள் விலை உயர்வு எனக் கூறி, உணவகங்களில் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.12 முதல் 15 வரை விற்கப்பட்ட புரோட்டா, தற்போது ரூ.20 முதல் 25 வரையும், அளவு சாப்பாடு ரூ.60, சிக்கன் ரூ.75, மீன் ரூ.70 என அதிக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மலிவு விலை அரிசியில் உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். சில சிற்றுண்டியகங்களில் மட்டும் விலை குறைவாக இருக்கிறது.    இந்த விலையேற்றத்தால் உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோத்தகிரியில் விரைவில் அம்மா உணவகம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 


Page 181 of 841