Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வாடிப்பட்டியில் தென்னிந்திய அளவிலான ஆக்கி போட்டி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

Print PDF
தினத்தந்தி              26.05.2013

வாடிப்பட்டியில் தென்னிந்திய அளவிலான ஆக்கி போட்டி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்


வாடிப்பட்டியில் தென்னிந்திய அளவில் ஆக்கி போட்டியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

தென்னிந்திய அளவில் ஆக்கி போட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கி கிளப் சார்பாக தென்னிந்திய அளவிலான கோதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 16வது ஆண்டு ஆடவர் ஆக்கி போட்டி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5நாட்கள் நடக்கிறது.

இதன் தொடக்க விழாவிற்கு பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ரத்தினஜோதி, பெற்றோர்– ஆசிரியர் கழக தலைவர் போஸ்பாப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கி கிளப் தலைவர் ராமானுஜம் வரவேற்றார்.

முதலாவது ஆட்டத்தில் மதுரை தென்மண்டல போலீஸ் அணி, கோவில்பட்டி ராஜீவ்காந்தி ஆக்கி கிளப் அணியை 3க்கு 0 என்ற கோல்கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில சென்னை சிட்டி போலீஸ் அணி, கோவை கல்லாறு ஆக்கி கிளப் அணியை 5க்கு 0 என்ற கோல்கணக்கில் வென்றது.

இன்றைய போட்டிகள்

மாலையில் நடந்த முதலாவது போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி அணி 2க்கு 1என்ற அடிப்படையில் பாளை நண்பர்கள் ஆக்கி அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கி கிளப் அணி கோவில்பட்டி தாமஸ் நகர் ஆக்கி கிளப் அணியை 4க்கு 0 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.

இரண்டாம் நாள் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி அணியும், சென்னை மாநகர காவல்துறை ஆக்கி அணியும், மதுரை ஜி.கே. மோட்டார் அணியும், வேலூர் லெவன்தண்டர்ஸ் அணியும், மதியம் மதுரை தென்மண்டல காவல்துறை அணியும், சென்னை எப்.சி.ஐ. அணியும் விளையாடுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை எவர்கிரேட் ஆக்கி கிளப் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

வேலூரில் அமையவிருக்கும் 10 அம்மா உணவகங்களில் வருகிற 1–ந் தேதி முதல் உணவு வழங்கப்படும் அதிகாரி தகவல்

Print PDF
தினத்தந்தி        25.05.2013

வேலூரில் அமையவிருக்கும் 10 அம்மா உணவகங்களில் வருகிற 1–ந் தேதி முதல் உணவு வழங்கப்படும் அதிகாரி தகவல்

வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களில் தொடங்கப்பட உள்ள மலிவு விலை அம்மா உணவகங்களில் வருகிற 1–ந் தேதி முதல் உணவு வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

அம்மா உணவகம்

மலிவு விலை அம்மா உணவகங்கள் சென்னையில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ்நாட்டில் இதர 9 நகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் என்றும், அங்கு முதற்கட்டமாக தலா 10 உணவகங்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மும்முரம்

அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் 10 இடம் தேர்வு செய்யப்பட்டது. அதில் 4 இடங்களில் ஏற்கனவே கட்டிட வசதியுள்ளது. மீதம் உள்ள 6 இடங்களில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைய உள்ள அம்மா உணவகத்திற்கு மேற்கூரை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

இதற்கிடையே அம்மா உணவகங்களில் பணியாற்ற 140 மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல நிர்வாக பணிக்காக துப்புரவு ஆய்வாளர்களும், வருவாய் ஆய்வாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சமையல் பயிற்சி

அவர்களில் சுமார் 28 பேர் சென்னை அம்பத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு செயல்படும் அம்மா உணவகத்தில் பயிற்சி பெற்று திரும்பினார்கள்.

அத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ள 140 பேருக்கும் நேற்று முன்தினம் வேலூர் திருமண மண்டபத்தில் சமையல் கலை நிபுணர் மூலம் இட்லி, சாம்பார், சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரிக்க நேரடி பயிற்சி மேயர் கார்த்தியாயினி தலைமையில் அளிக்கப்பட்டது.

1–ந்தேதி முதல்


அம்மா உணவகங்கள் எப்போது திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

வருகிற 30 அல்லது 31–ந் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 90 அம்மா உணவகங்களும் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட உள்ளது. அதுபோல 1–ந் தேதி முதல் அனைத்து உணவகங்களிலும் உணவு வழங்கப்படும்.

வேலூரைப் பொருத்தவரை 4 உணவகங்களுக்கு கட்டிடப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஒருவேளை அந்த கட்டிடப் பணிகள் முடிய தாமதம் ஆனாலும் கூட அருகாமையில் உள்ள வேறு உணவகங்களில் இட்லி, சாம்பார், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவைகளை தயாரித்து கட்டிடப்பணிகள் நிறைவு பெறாத இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு வினியோகிக்கப்படும்.

மொத்தத்தில் வருகிற 1–ந்தேதி வேலூரில் 10 உணவகங்களிலும் காலை டிபன் மற்றும் பகலில் சாதமும் வழங்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

முன்னாள் அமைச்சர்

வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே கட்டப்படும் அம்மா உணவக கட்டிடப்பணியை நேற்று முன்னாள் அமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் நகரமைப்பு அலுவலர் கண்ணன் கட்டிடப்பணிகள் குறித்து விளக்கி கூறினார்.
 

"அம்மா' உணவகங்களில் பொங்கலுக்கு வரவேற்பு :விரைவில் விற்பனையை துவக்க மக்கள் விருப்பம்

Print PDF
தினமலர்          25.05.2013

"அம்மா' உணவகங்களில் பொங்கலுக்கு வரவேற்பு :விரைவில் விற்பனையை துவக்க மக்கள் விருப்பம்


சென்னை : "அம்மா உணவகங்களில் பொங்கல், கருவேப்பிலை, எலுமிச்சை சாத விற்பனையை விரைவில் துவக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.சென்னை மாநகராட்சி நடத்தி வரும், "அம்மா' உணவகங்களில், தினமும் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக, பொங்கல், கருவேப்பிலை, எலுமிச்சை சாதமும் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். இதற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, மலிவு விலை உணவகங்களில் நேற்று, சோதனை ரீதியாக மகளிர் சுய உதவிக்குழுவினர் பொங்கல் தயாரித்தனர்.

ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சிறு பருப்பு, மிளகு கொண்டு தயாரான பொங்கலை, பொறுப்பாளர் மற்றும் குழுவினர் ருசி பார்த்து, தரத்தை உறுதி செய்தனர். பின், இட்லி வாங்க வந்தவர்களுக்கு, சிறிதளவு பொங்கலைக் கொடுத்து, கருத்து கேட்டனர்."பொங்கல் நன்றாக இருக்கிறது; எப்போது விற்பனைக்கு தருவீர்கள்' என, பலரும் ஆர்வமுடன் கேட்டனர். இதுபற்றிய அறிவிப்பு வரும் என, கூறி சமாளித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "பயிற்சி பெற்ற மகளிர், ஆர்வ மிகுதியில் பொங்கல் தயாரித்து பார்த்துள்ளனர். முதல்வர் அறிவிக்கும் நாளில், பொங்கல், கருவேப்பிலை, எலுமிச்சை சாதம் விற்பனை துவங்கும். அதற்கு ஓரிரு நாள் முன், முறைப்படியாக, சோதனை ரீதியான தயாரிப்பை துவங்குவோம்' என்றனர்.ஒரே நாளில், சாம்பார் சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் என, எல்லாம் கிடைக்குமா என, கேட்டபோது, "தயிர் சாதம் தினமும் இருக்கும். மற்றவை தினமும் ஒன்று என்ற வகையில் கிடைக்கும்' என, அதிகாரிகள் கூறினர்.
 


Page 182 of 841