Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

"ஜூனில் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கும்'

Print PDF
தினமணி         22.05.2013

"ஜூனில் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கும்'


ஜூன் முதல் வாரத்தில் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கும் என மேயர் அ.விசாலாட்சி கூறினார்.

அம்மா உணவகம் அமைக்கும் திட்டத்தின்கீழ், திருப்பூர் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சென்னை அம்மா உணவகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் செவ்வாய்க்கிழமை சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

திருப்பூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் புதிதாகக் கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந் நிலையில், அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கும் பொறுப்பு மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 10 மகளிர் உதவிக் குழுக்களில் இருந்து தலா இருவர் வீதம் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களுக்கு முதல் கட்டமாக மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

நகர்நல அலுவலர் ஆர்.செல்வக்குமார் தலைமையில் சமையல் கலை நிபுணர்கள் இருவர் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து மேயர் அ.விசாலாட்சி கூறியது: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை நேரில் சென்று பார்த்து, அங்கு பயிற்சி பெறும் வகையில் இந்த மகளிர் குழுக்களைச் சேர்ந்த 20 பேர் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அங்கிருந்து வந்தபின் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு உணவு தயாரிப்பது குறித்து சமையல்கலை நிபுணர்கள் மூலமாக 5 நாள்களுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு ஒரு இட்லி, சாம்பார், ரூ.3-க்கு தயிர்சாதம், ரூ.5-க்கு சாம்பார் சாதம் விற்பனை செய்யப்படும். 7 நாளைக்கு 7 விதமாக சாம்பார் தயாரித்து வழங்கப்படும். வரும் ஜூன் முதல் வாரத்தில் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கும் என்றார்.
 

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

Print PDF
தினமணி         22.05.2013

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்


சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம், ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமையன்று (மே 22) நடைபெறுகிறது.

மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகங்களில், சப்பாத்தி, கறிவேப்பிலை சாதம், எழுமிச்சை சாதம் மற்றும் பொங்கல் ஆகியவை மலிவு விலையில் வழங்கப்படும் என முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, முதல்வரின் அறிவிப்புகள் அம்மா உணவகங்களில் அமல்படுத்தப்படும் தேதி குறித்த தீர்மானங்கள் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் பாதுகாவலர்களை நியமிப்பது குறித்த அறிவுப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

திருப்பூரில் மலிவு விலை உணவகம்: பயிற்சிக்காக, சுயஉதவி குழு பெண்கள் இன்று சென்னை பயணம்

Print PDF
தினத்தந்தி               21.05.2013

திருப்பூரில் மலிவு விலை உணவகம்: பயிற்சிக்காக, சுயஉதவி குழு பெண்கள் இன்று சென்னை பயணம்


திருப்பூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் அமைக் கப்பட உள்ளது. இதை நடத்த உள்ள சுயஉதவி குழு பெண்கள் 20 பேர் பயிற்சிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை செல்கிறார் கள்.

மலிவு விலை உணவகம்


தமிழகத்தில் திருப்பூர் உள்பட 9 மாநகராட்சிகளில் மலிவு விலை உணவகம் திறக்க முதல்அமைச்சர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் மாநகராட் சியில் 1வது மண்டல அலு வலகம், அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், பழைய பஸ்நிலையம், பாண்டியன் நகர், சிறு பூலுவபட்டி ரிங் ரோடு, செவந்தாம் பாளையம், நல்லூர், குமரன் வணிக வளா கம், சந்தைபேட்டை ஆகிய 10 இடங்களில் மலிவு விலை உணவகம் அமைக்கப் பட உள்ளன. இந்த உணவகங்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்பட உள்ளன. இதற் காக சமையல் கலையில் முன் அனுபவம் கொண்ட குழுக்க ளுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டது. முதற்கட்ட மாக அதில் 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.

ஆலோசனைக்கூட்டம்

தேர்வு செய்யப்பட்ட குழுக் களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாந கர் நல அதிகாரி டாக்டர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 மகளிர் குழுக்களின் தலைவி கள் மற்றும் அவர்களின் உதவி யாளர்கள் கலந்து கொண் டனர். இவர்களுக்கு நவீன முறையில் சுகாதாரமாக சமை யல் செய்வது எப்படி? உண வகத்தை எப்படி பாராமரிக்க வேண்டும்? என்பது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட் டது.

சென்னை பயணம்

இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 10 மகளிர் குழுக்களின் தலைவிகள் மற் றும் அவர்களின் உதவியாளர் கள் 20 பேருக்கும் நாளை (புதன்கிழமை) சென்னையில் ஒரு நாள் செயல் முறை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் மலிவு விலை உணவகத் துக்கு இவர்களை அழைத்து சென்று செயல் விளக்கம் காண்பிக்கப்படுகிறது.

இதற்காக இன்று (செவ் வாய்க்கிழமை) மதியம் மகளிர் சுய உதவிகுழு பெண்கள் 20 பேரும் திருப்பூரில் இருந்து 2 வேன்களில் சென்னை புறப் பட்டு செல்கிறார்கள். இவர் களுடன் மாநகர் நல அதிகாரி டாக்டர் செல்வகுமார் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்களும் சென்னை செல்கிறார்கள்.
 


Page 187 of 841