Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோவை மாநகராட்சியில் மூலிகை உணவகம் திறக்க முடிவு நான்கு பேர் குழுவுக்கு சென்னையில் இரண்டு நாள் பயிற்சி

Print PDF
தினமலர்            10.05.2013

கோவை மாநகராட்சியில் மூலிகை உணவகம் திறக்க முடிவு நான்கு பேர் குழுவுக்கு சென்னையில் இரண்டு நாள் பயிற்சி


சென்னை:கோவை மாநகராட்சி அலுவலகத்தில், மூலிகை உணவகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், நான்கு பேர் கொண்ட குழுவினருக்கு, சென்னை மாநகராட்சி மூலிகை உணவகத்தில், இரண்டு நாள் பயிற்சி நேற்று துவங்கியது. ரூ.15க்கு அளவு சாப்பாடு: சென்னை மாநகராட்சியில், மூலிகை உணவகம் இயங்கி வருகிறது.

இங்கு காலை முதல் மாலை வரை, 2 ரூபாய்க்கு மூலிகை டீ, மூலிகை இட்லி, தோசை, பச்சை பயிறு பொங்கல், கேழ்வரகு புட்டு, மூலிகை அல்வா ஆகியவையும், ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், கீரை கூட்டு, பிரண்டை துவையலுடன், 15 ரூபாய்க்கு அளவு சாப்பாடும் வழங்கப்படுகின்றன.இங்கு தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவருந்தி செல்கின்றனர்.

கோவையில் திறக்க முடிவு: இந்த மூலிகை உணவகம் குறித்து அறிந்த கோவை மாநகராட்சி கமிஷனர், கோவை மாநகராட்சி அலுவலகத்திலும் மூலிகை உணவகத்தை திறக்க முடிவு செய்துள்ளார்.இதற்காக சித்த மருத்துவர் பூமிகா, ஆயுர்வேத மருத்துவர் செண்பகம், சமுதாய அமைப்பாளர்கள் சாவித்ரி, சந்திரா ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவினரை, சென் னையில் உள்ள மூலிகை உணவகத்தில் சிறப்பு பயிற்சி பெற, கோவை மாநகராட்சி கமிஷனர் அனுப்பி வைத்துள்ளார்.அறிக்கை தாக்கல்இந்த குழுவினர், நேற்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் சைதை துரைசாமியை சந்தித்தனர்.

மாநகராட்சி மூலிகை உணவகத்தின் செயல்பாடுகள், உணவுகள் தயாரிக்கும் முறை, செலவினம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மூலிகை உணவக அமைப்பாளரும், சித்த மருத்துவருமான வீரபாபுவிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.இன்று பயிற்சியை நிறைவு செய்யும் இந்த குழுவினர், ஒரு வாரகாலத்தில் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்வர். வெகு விரைவில், கோவை மாநகராட்சியில், மூலிகை உணவகம் திறக்கப்பட உள்ளது.
 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

Print PDF
தினமணி       09.05.2013

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்


செங்கம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வேலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மலையமான்திருமுடிகாரி தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் சென்னம்மாள் முருகன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில், பேரூராட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மலையமான்திருமுடிகாரி, பிளாஸ்டிக் பொருள்களை முழுமையாக தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் உடனே அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து, செங்கம் வளையாம்பட்டு சாலையில் உள்ள தாமரைக்குளத்தை அவர் பார்வையிட்டார். குளத்தை ரூ.35 லட்சம் செலவில் தூர்வாரி அழகுபடுத்துவது குறித்து அவர் ஆய்வு செய்தார்.

செங்கம் ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கிருஷ்ணகுமார், இந்தின் வங்கி மேலாளர் ராஜசேகர், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் ரமேஷ் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

சரவணம்பட்டியில், அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல், தொழிற்சங்கம் பெயர் பலகை திறப்பு மேயர் செ.ம.வேலுசாமி திறந்து வைத்தார்

Print PDF
தினத்தந்தி                  08.05.2013

சரவணம்பட்டியில், அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல், தொழிற்சங்கம் பெயர் பலகை திறப்பு மேயர் செ.ம.வேலுசாமி திறந்து வைத்தார்


கோவை மாநகராட்சி 28–வது வார்டு சரவணம்பட்டி பகுதியில் நீர்மோர் பந்தல் மற்றும் ஆட்டோ தொழிற்சங்க பெயர் பலகை திறப்புவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் எஸ்.ஆர்.அர்ஜுனன் தலைமை தாங்கினார், கோவை மாநகர மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான செ.ம.வேலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து சரவணம்பட்டி துடியலூர் சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க பெயர் பலகையை அவர் திறந்து வைத்தார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க தலைவர் சிவகுமார், செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் 40 ஆட்டோ ஓட்டுனர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராம், சுப்பையன். கே.பி.ராஜ், சாரமேடு பெருமாள், ராமசாமி, துரைசாமி, பழனிசாமி, சுபாஷ், ரவி, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 192 of 841