Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

"தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்' நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

Print PDF
தினமலர்       06.05.2013

"தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்' நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை


தாம்பரம்:"தாம்பரம் நகராட்சி உருவாகி, 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து, தாம்பரத்தை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்' என்று, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.தாம்பரம் நகராட்சி கூட்டம், தலைவர், கரிகாலன் தலைமையில் சமீபத்தில் நடந்தது.
 
இதில், கமிஷனர் சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:தற்போது, தாம்பரம் நகராட்சி, 49 ஆண்டுகளை கடந்து, 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நகராட்சியின் பரப்பளவு 20.72 சதுர கி.மீ., தற்போதைய மக்கள் தொகை 1,73,051.நகராட்சியின் சாதாரண வருவாய் 44.52 கோடி ரூபாய். மூலதன வருமானம் 126.77 கோடி ரூபாய். இதனால், தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அதற்கான அனைத்து தகுதியும் உள்ளது.
 
அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, "மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து, முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, நகராட்சி தலைவர் கரிகாலன் பதிலளித்தார்.
 

கலசலிங்கம் மாணவர்களின் காற்றாலை மின் உற்பத்தி வடிவமைப்புக்கு மத்திய அரசு காப்புரிமை

Print PDF
தினமணி        06.05.2013

கலசலிங்கம் மாணவர்களின் காற்றாலை மின் உற்பத்தி வடிவமைப்புக்கு மத்திய அரசு காப்புரிமை


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் மாணவர்கள் வடிவமைத்துள்ள மினி காற்றாலைக்கு மத்திய அரசின் காப்புரிமை கிடைத்துள்ளது. மேலும் மாணவர்களின் வடிவமைப்பைப் பாராட்டி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இயந்திரவியல் படிக்கும் மாணவர்கள் பி.அழகு ராஜேஸ்வரன், பி.ஆனந்த்குமார், என்.அனீஸ் சிவராம், ஏ.ராஜகோபால்  ஆகியோர் பேராசிரியர் எஸ். ராஜகருணாகரன் தலைமையில், பேராசிரியர் மோதிலால் ஆலோசனையின் பேரில் எலெக்ட்ரிக் காரில் மேல்கூரையில் மினி காற்றாலை (ரண்ய்க் ம்ண்ப்ப்) ஒன்றை உருவாக்கி, பேட்டரி சார்ஜ் குறைந்தவுடன் காருக்கு மின்சாரத்தை  மின் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து அதில் செலுத்தி காரின் பேட்டரி மின்சாரம் குறையாமல், கார் தங்கு தடையின்றி செல்லும் வகையில் வடிவமைப்பு செய்திருந்தனர். இந்த மினி காற்றாலை 120 வோல்ட் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கு பயன்படுத்தலாம். காற்றின் வேகம், கார் செல்லும்போதே கிடைக்கும். கார் வேகம் மணிக்கு 30 கி.மீ. இருக்கும் போது மினி காற்றாலை இயங்கி மின்சார உற்பத்தி ஏற்படுத்தி பேட்டரிக்குச் செலுத்தும். இதை செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவு  ஆகியுள்ளது.

இந்த வடிவமைப்பு தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பக் கழகம் நடத்திய  போட்டிக்கு அனுப்பப்பட்டது. இப் போட்டியில் பங்கு பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், கலசலிங்கம் மாணவர்களின் இந்த வடிவமைப்புக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் பாராட்டு சான்றிதழும் கிடைத்துள்ளது.

மேலும் இந்த வடிவமைப்புக்கு மத்திய அரசு வணிகவியல், தொழிற்துறை சார்பில் காப்புரிமையும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மத்திய அரசின் காப்புரிமை மற்றும் மாநில அரசின் பாராட்டு பெற்ற மாணவர்களை பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் துறைத் தலைவர் டீன் எஸ்.ராஜகருணாகரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

புதிய நீர் இறைப்பான் கண்டுபிடிப்பு:அரசூர் கல்லூரி மாணவர்கள் சாதனை

Print PDF
தினமணி        06.05.2013

புதிய நீர் இறைப்பான் கண்டுபிடிப்பு:அரசூர் கல்லூரி மாணவர்கள் சாதனை

அரசூர் வி.ஆர்.எஸ் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி மாணவர்கள், மிதிபெடல் மற்றும் சைக்கிள் சட்டத்துடன் கூடிய புதிய நீர் இறைப்பானை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். மின் தேவை இல்லாத, இக்கருவியை பயன்படுத்தி நீர் நிலைகளில் 10 மீட்டர் ஆழம் வரை நீர் இறைக்கமுடியும்.

வி.ஆர்.எஸ். கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல் பிரிவு மாணவர்கள் ர.ரியாஸ், பா.தட்சணாமூர்த்தி மற்றும் பு.மூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து இணை பேராசிரியர் பா.செல்வபாரதியின் மேற்பார்வையில் இந்த நீர் இறைப்பானை வடிவமைத்துள்ளனர்.

சாதாரண சைக்கிள் சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள மிதிபெடலை சைக்கிள் இயக்குவதுபோல இயக்கினால் போதும், நீர்நிலைகளில் எளிதாக நீர் இறைக்கமுடியும்.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ள வேளையில் இந்த நீர் இறைப்பானை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கருவியை மலைப்பிரதேசம், பாலைவனச்சோலை, கிராமங்கள் என எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளுக்கும், தோட்டங்களுக்கும் நீர் இறைக்க இக்கருவியை பயன்படுத்த முடியும். இக்கருவிக்கான உற்பத்திச்செலவு மற்றும் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு என மாணவர்கள் தெரிவித்தனர்.

 


Page 193 of 841