Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ: பரிசீலிக்கும் மாநகராட்சி நிர்வாகம்

Print PDF
தினபூமி           02.05.2013

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ: பரிசீலிக்கும் மாநகராட்சி நிர்வாகம்

http://www.thinaboomi.com/sites/default/files/Tea-300.jpg

சென்னை: மே, - 2 - சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒன்று என்று மொத்தம் 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ரூ.1க்கு விற்கப்படும் இட்லி சென்னைவாசிகளிடையே மிகவும் பிரபலம். இட்லி தவிர ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதமும் விற்பனை செய்யப்படுகிறது. அம்மா உணவகங்களில் கொஞ்சம் ஊறுகாய் அல்லது துவையல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று பரிசீலிக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்று ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated on Thursday, 02 May 2013 09:52
 

அரசின் திட்டங்களை வழங்க விவசாயிகளை தேடி, அலுவலர்கள் செல்கிறார்கள் உழவர் பெருவிழாவில், மேயர் பேச்சு

Print PDF
தினத்தந்தி         02.05.2013

அரசின் திட்டங்களை வழங்க விவசாயிகளை தேடி, அலுவலர்கள் செல்கிறார்கள் உழவர் பெருவிழாவில், மேயர் பேச்சு


அரசின் திட்டங்களை விளக்கிக்கூற விவசாயிகளை தேடி அலுவலர்கள் செல்கிறார்கள் என்று மேயர் கூறினார்.

விவசாயிகளைத் தேடி...

வேலூர் மாநகராட்சியில் அடங்கிய ஆவாரம்பாளையத்தில் உழவர்பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துறை உதவி இயக்குனர் சிவக்குமார் சிங் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த காலங்களில் அரசின் திட்டங்கள் மற்றும் பயன்பாடுகளை தெரிந்து கொள்ள விவசாயிகள் வேளாண்மை அலுவலகங்களுக்கு சென்று வந்தனர். அப்போது அவர்கள் சிரமங்களுக்கும் ஆளானார்கள். எனவே இந்த அரசு அந்த நிலைமையை மாற்றியுள்ளது.

அதாவது விவசாயிகளைத் தேடி வேளாண்மை அலுவலர்கள் செல்கிறார்கள். அப்போது அவர்கள் விவசாயிகளிடம் விவசாய கடன் பெறுவதற்கான வழிமுறைகள், புதிய பயிர் திட்டம், திருந்திய நெல் சாகுபடி திட்டம், உரமானியம் மற்றும் அரசின் நலத்திட்டங்களை விவசாயிகளிடம் விளக்கி கூறுவதுடன் அந்த திட்டங்களில் பயன் பெறவும் உதவி செய்து வருகிறார்கள்.

நலத்திட்ட உதவிகள்

அதைத்தொடர்ந்து மேயர், திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில் சாகுபடி செய்த 2 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கினார். ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேட்டை 3 பேருக்கு வழங்கியதுடன் மரக்கன்றுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவர் ராகவன் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால் நடைத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 2 நவீன பூங்காக்கள் அமைச்சர் ஆனந்தன் திறந்து வைத்தார்

Print PDF
தினத்தந்தி                01.05.2013

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 2 நவீன பூங்காக்கள் அமைச்சர் ஆனந்தன் திறந்து வைத்தார்


திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 நவீன பூங்காக்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.

2 பூங்காக்கள்

திருப்பூர் திருமுருகன்பூண்டி பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பாலாஜி நகரில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாடு மற்றும் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் பரப் பளவில் ரூ.30 லட்சம் மதிப் பிலும், இதேபோல் 1-வது வார்டு தேவராயம்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத் தின் கீழ் 38 சென்டில் ரூ.15 லட்சம் மதிப்பில் 2 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் பயன் பாட்டுக்காக இந்த 2 பூங் காக்களின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். அவினாசி எம்.எல்.ஏ. கருப்பசாமி, பேரூ ராட்சிகளின் உதவி இயக்குனர் கலைவாணன், பூண்டி பேரூராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூண்டி பேரூராட்சி செயல் அதிகாரி நந்தகோபால் வர வேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், முதலாவது மண்டல தலைவர் ராதா கிருஷ்ணன், அவினாசி பேரூ ராட்சி தலைவர் ஜெகதாம் பாள் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந் தினராக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் கலந்து கொண்டு 2 பூங்காக் களையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பூங்காக் களில் உள்ள புல் தரைகள், பூச்செடிகள், விளையாட்டு உபகரணங்களை நன்கு பரா மரிக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

விழாவில் அவினாசி தாசில் தார் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. மகாலிங்கம், பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் கோபால், ராம சாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிச்சாமி, கணேஷ், ராஜேந் திரன், சேகர் கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சண்முகம், கார்த்திகேயன், அய்யப்பன், நடராஜன் உள்பட திரளான வர்கள் கலந்து கொண்டனர்.
 


Page 195 of 841