Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஓட்டல்கள் ஸ்டிரைக்: அம்மா உணவகங்களில் கூட்டம்

Print PDF

தினபூமி                 30.04.2013

ஓட்டல்கள் ஸ்டிரைக்: அம்மா உணவகங்களில் கூட்டம்

http://www.thinaboomi.com/sites/default/files/Amma-Mess(C).jpg

சென்னை, ஏப்.30  - மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இந்தியா முழுவதும் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய அகில இந்திய ஓட்டல்கள் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று ஓட்டல்கள் மூடப்பட்டன. குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்களுக்கு மத்திய அரசு 12.36 சதவீதம் சேவை வரி புதிதாக விதித்துள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

ஏ.சி. வசதியுள்ள சிறிய பெரிய ஓட்டல்களும், நட்சத்திர ஓட்டல்களும் சேவை வரி விதிப்பால் பாதிக்கப்பட்டன. ஏற்கனவே வாட் வரி அமலில் உள்ள நிலையில் தற்போது சேவை வரி சுமையும் பொதுமக்கள் மீது விழுந்துள்ளது. இதனால் ஏ.சி. ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலை உயர்ந்து விற்பனையை வெகுவாக பாதித்தது. இந்த ஒரு மாதத்தில் 20 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இந்தியா முழுவதும் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய அகில இந்திய ஓட்டல்கள் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று ஓட்டல்கள் மூடப்பட்டன. குளிர்சாதன வசதியுள்ள ஓட்டல்களும், குளிர்சாதன வசதி அல்லாத ஓட்டல்களும் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் சுமார் 50 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

சென்னையில் சுமார் 7 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தன. சைவ-அசைவ உணவகங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. சென்ட்ரல், எழும்புர்ை ரெயில் நிலையங்களுக்கு எதிரில் உள்ள எல்லா ஓட்டல்களும் திறக்கப்படவில்லை.

ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஓட்டல்கள் மட்டுமே திறந்திருந்தன. இதேபோல கோயம்பேடு பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஓட்டல்களும் அடைக்கப்பட்டு இருந்தன. வடபழனி, கோடம்பாக்கம், அடையாறு, பாரிமுனை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மற்றும் வெளியுர்ை பயணிகள் அவதி அடைந்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வந்தவர்கள் காலை மற்றும் மதிய உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டனர்.

சாலையோரங்களில் உள்ள சிறு சிறு டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டல்கள் மூடப்படுவதால் சென்னையில் தங்கி பணி புரியும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஓட்டல்கள் வேலை நிறுத்தம் குறித்து சென்னை ஓட்டல்கள் சங்கத்தலைவர் கே.சி. சீனிவாசராஜா கூறியதாவது:-

உணவு பொருட்கள் விலை உயர்வால் ஏற்கனவே இத்தொழில் நலிவடைந்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறை, நிர்வாக செலவு உள்ளிட்ட பல காரணங்களால் ஓட்டல் தொழில் நடத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. சில்லறை தட்டுப்பாடு ஒருபுறம் பெரும் சிக்கலாக இருக்கிறது. நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய் சில்லறை வாங்க வேண்டும் என்றால் ரூ.25 கமிஷன் கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே விற்பனை வரி உள்ளிட்ட பல வரிகள் ஓட்டல் தொழிலுக்கு விதிக்கப்படுகிறது. தற்போது சேவை வரியை மத்திய அரசு விதித்து இருப்பது உணவு பண்டங்கள் விலை மேலும் உயர்த்த வேண்டி உள்ளது. இதனால் வியாபாரம் குறைந்து விட்டது. ஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

ஒருவர் ஏ.சி. ஓட்டலில் ரூ.100-க்கு சாப்பிட்டால் அதில் 35 ரூபாய் வரியாக அரசுக்கு செலுத்த வேண்டி இருக்கிறது. அதில் சேவை வரியும் தற்போது விதிக்கப்படுவதால் கூடுதலாக ரூ.5 வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் ஓட்டல்களை இழுத்து மூடவேண்டியது தவிர வேறு வழியில்லை. எனவே பொதுமக்கள் பாதிக்காத வகையில் உணவகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தண்டனையை குறைக்க வேண்டும். சில்லறை தட்டுப்பாட்டை போக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டல்கள் வேலை நிறுத்தம் நடக்கிறது. சென்னையில் சுமார் 7 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. அவை அனைத்தும் இந்த போராட்டத்தில் ்டுபட்டுள்ளன. இதில் 2 ஆயிரம் ஏ.சி. ஓட்டல்களும் அடங்கும். பொதுமக்கள் நலன் கருதி இந்த வேலை நிறுத்தத்தில் ்டுபட்டுள்ளோம். இந்த ஒருநாள் ஸ்டிரைக் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.500 கோடி அளவிற்கு உணவு பண்டங்கள் விற்பனை பாதிக்கப்படும். சென்னையில் மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நேற்று ஓட்டல்கள் மூடப்பட்டன. 

அம்மா உணவகங்களில் கூடுதலாக 30 ஆயிரம் இட்லிகள் விற்பனை

சென்னை நகரில் ஓட்டல்கள் ஸ்டிரைக்கால் அம்மா உணவகங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் 200 வார்டுகளிலும் 200 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த 200 உணவகங்களிலும் நேற்று   வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இட்லி டோக்கன் வாங்க நீண்ட கியுவிைல் ஏராளமானோர் காத்திருந்தனர். ஸ்டிரைக்கையொட்டி கூடுதல் இட்லிகள் விற்பனைக்கு மாநகராட்சி ஏற்பாடு செய்து இருந்தது.வழக்கமாக காலை 10 மணி வரை இட்லி விற்பனை நடைபெறும். பெரும்பாலான அம்மா உணவகங்களில் முன்கூட்டியே விற்று தீர்ந்து விட்டன.வழக்கமாக 200 அம்மா உணவகங்களிலும் 2 லட்சத்து 90 ஆயிரம் இட்லிகள் விற்பனையாகும். நேற்று  கூடுதலாக 30 ஆயிரம் இட்லிகள் விற்கப்பட்டன. மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரம் இடலிகள் விற்பனையானது. இதே போல் மதியம் தயிர் சாதம், சாம்பார் சாதமும் கூடுதலாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அம்மா உணவகத்தில் மலிவு விலையில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், தயிர் சாதம் ரூ 3-க்கும், சாம்பார் சாதம் ரூ 5- க்கும் விற்கப்படுகிறது குறிப்படத்தக்கது.

 

அம்மா உணவகத்தில் அலைமோதும் கூட்டம்

Print PDF

தினமலர்               29.04.2013

அம்மா உணவகத்தில் அலைமோதும் கூட்டம்

சென்னை: ஏசி ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியைக் கண்டித்து, நாடு முழுவதும் ஓட்டல் உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் துவக்கப்பட்டுள்ள அம்மா மலிவு விலை உணவகங்களில் உணவருந்த கூட்டம் அலைமோதி வருகிறது.

 

முதலில் நல்ல மனிதர் அப்புறம்தான் இன்ஜினியர் மாநகராட்சி கமிஷனர் பேச்சு

Print PDF

தினமலர்               29.04.2013

முதலில் நல்ல மனிதர் அப்புறம்தான் இன்ஜினியர் மாநகராட்சி கமிஷனர் பேச்சு

கோவை:""சமூகத்தில் டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் போன்ற அங்கீகாரம் பெறுவதற்கு முன், "நல்ல மனிதர்' என்ற பெயரை எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என்று கோவை மாநகராட்சி கமிஷனர் லதா பேசினார்.கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கான விளக்கேற்றும் நிகழ்ச்சி மற்றும் பிரிவுபச்சார விழா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. மனையியல் முதன்மையர் வரவேற்றார். பல்கலை வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

கோவை மாநகராட்சி கமிஷனர் லதா, நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:

சுயஒழுக்கத்துக்கு ஒவ்வொருவரும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். சுயஒழுக்கத்தின் மூலமே முன்னேற்றத்தை அடையமுடியும். நாம் நமது உடல் மொழிகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். நாம் கேட்கும் விஷயங்கள் நேர்மறையாக இருந்தாலும், எதிர்மறையாக இருந்தாலும், ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தை திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது, இறுதியாண்டை முடித்து செல்லும் மாணவ மாணவியர், இன்ஜினியர், டாக்டர், கலெக்டர் போன்ற பணிகளில் இருப்பதை காட்டிலும் நல்ல மனிதர்களாக இருக்கவேண்டும். அதையே இச்சமூகம் விரும்புகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.மாணவியர் அனைவரும் விளக்கேற்றி, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பல்கலை துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன், பதிவாளர் கவுரி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 


Page 196 of 841