Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காட்பாடியில் உலக புத்தக தின விழா மேயர் பங்கேற்பு

Print PDF

தினத்தந்தி              29.04.2013

காட்பாடியில் உலக புத்தக தின விழா மேயர் பங்கேற்பு 

காட்பாடி காந்திநகரில் உள்ள அறிஞர் அண்ணா கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புதிய உறுப்பினர், புரவலர் சேர்க்கை, மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விழா காங்கேயநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்தது.

வாசகர் வட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் கோவிந்தசாமி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு புதிய புரவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். கவுன்சிலர் ரமேஷ், தலைமை ஆசிரியைகள் மஞ்சுளா, ராஜலட்சுமி, உமாமகேஸ்வரி ஆகியோர் பேசினர். செயற்குழு உறுப்பினர்கள் வீரராகவன், பழனி, சேட்டு, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளை நூலகர் மஞ்சுளா நன்றி கூறினார்.

 

திருப்பூரில் 5 இடங்களில் அம்மா உணவகம்

Print PDF
தினமணி       27.04.2013

திருப்பூரில் 5 இடங்களில் அம்மா உணவகம்


சென்னையை போல திருப்பூரிலும் 5 இடங்களில் மலிவு விலை அம்மா உணவகம் திறக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

இதில் மலிவு விலையில் உணவு வழங்கக்கூடிய அம்மா உணவகம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம்: திருப்பூர் மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டு, 159.35 ச.கி.மீ., பரப்பளவுடன் 60 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8.77 லட்சம் மக்கள் நகரில் வசிக்கின்றனர்.

பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூருக்கு தினமும் 1.5 லட்சம் மக்கள் வெளியூர்களிலிருந்து தொழில் நிமித்தமாக வந்து செல்கின்றனர்.

தொழிலாளர்கள் நிறைந்த இம்மாநகரில் அவர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதில்லை. முதல்வர் ஆணைப்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும் சலுகை விலையில் தரமான உணவு வழங்கக் கூடிய அம்மா உணவகம் 5 இடங்களில் முதற்கட்டமாகத் தொடங்கப்படும்.

15 வேலம்பாளையம் மண்டல அலுவலக வளாகம், கொங்கு நகர் (சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளி அருகில்), காமராஜர் சாலை பழைய பேருந்து நிலையம், குமரன் வணிக வளாகம்,  நல்லூர் மண்டல அலுவலக வளாகம் என 5 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அம்மா உணவங்களில் உணவு தயாரிப்புக்கான செலவு ரூ.1.5 கோடி, விற்பனை மூலமாக கிடைக்கும் வருவாய் ரூ.65.7 லட்சம். இதில் பற்றாக்குறை தொகை ரூ.84.92 லட்சம் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து வழங்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து கிலோ ரூ.1-க்கு அரிசி வாங்கப்படும். உளுந்து, பருப்பு, சமையல் எண்ணெய் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்படும் விலைக்கு வாங்கப்படும்.

மிளகாய், புளி உள்ளிட்ட பொருள்கள் வளர்மதி கூட்டு சிறப்பு அங்காடியில் இருந்தும், காய்கறிகள் வெளிச் சந்தையிலும், தயிர் ஆவின் நிறுவனத்தில் இருந்தும் கொள்முதல் செய்யப்படும்.

அம்மா உணவகம் கட்டடம்: அம்மா உணவகம் அமைப்பதற்காக மேற்கண்ட 5 இடங்களிலும் தலா ரூ.25 லட்சம் செலவில் புதிதாகக் கட்டடம் கட்டடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானங்கள் அனைத்து கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
 

துப்புரவுப் பணியில் சுய உதவிக்குழுவினரை நியமிக்க கோரிக்கை

Print PDF
தினமணி       27.04.2013

துப்புரவுப் பணியில் சுய உதவிக்குழுவினரை நியமிக்க கோரிக்கை


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் இடங்களில் சுயஉதவிக் குழுவினரை நியமனம் செய்ய வேண்டும் என பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு மன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

 மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவதாகத் தெரியவில்லை. ஏற்கனவே பேரூராட்சியில் சுய உதவிக்குழு மூலம் 35 நபர்கள் தினக்கூலி அடிப்படையில்  பணிபுரிகின்றனர். தற்போது புதிதாக துப்புரவுப் பணியாளர்கள் தேர்வு  செய்யப்படுகின்றனர். பேரூராட்சியின் நிர்வாக செலவை குறைக்கும் வகையில், துப்புரவுப் பணியாளர் தேர்வை ரத்து செய்துவிட்டு இப்பணியில் சுய உதவிக் குழுவினரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் பேரூராட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
 


Page 197 of 841