Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சி பஸ் நிலையக் கடைகள்: 2ஆவது முறையும் ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை

Print PDF
தினமணி       27.04.2013

நகராட்சி பஸ் நிலையக் கடைகள்: 2ஆவது முறையும் ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை


ஒட்டன்சத்திரம் நகராட்சிக் கடைகளை 2ஆவது முறையாகவும் ஏலம் கேட்க யாரும் முன்வராததால் மீண்டும் ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் 26 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மாத வாடகைக்கு 2010ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். அதிகபட்சமாக மாத வாடகை ரூ.7500 இருந்து ரூ.24 ஆயிரம் வரை ஏலம் போனது. கடைகளை ஏலம் எடுத்தவர்கள் ஒரு சில மாதங்கள் மட்டுமே கடையை நடத்தினர். அதன் பின்னர் கடைகளை நடத்த

முடியாமல் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். 26 கடைகளில் தற்போது 7 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அதே போல உணவு விடுதி மற்றும் கட்டண கழிப்பறை போன்றவற்றையும் ஏலம் எடுத்தவர்கள் அவற்றை நடத்த முடியாமல் நகராட்சியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் மறுஏலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் உள்ள 19 கடைகள் மற்றும் உணவு விடுதி, கட்டணக் கழிப்பறை ஆகியவற்றை மாத வாடகைக்கு விட ஏலம் விடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன் பேரில் நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. அரசாங்கம் நிர்ணயித்த மாத வாடகை அதிகமாக இருப்பதாகக் கூறி

2ஆவது முறையாகவும் ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. எனவே விரைவில் மீண்டும் ஏலம் நடத்தப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

முதல்வரை பாராட்டி சென்னை மாநகராட்சி தீர்மானம்

Print PDF

தினபூமி               27.04.2013

முதல்வரை பாராட்டி சென்னை மாநகராட்சி தீர்மானம்

சென்னை, ஏப்.27 - இலங்கை தமிழர் பிரச்சனை, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்க கடும் முயற்சி, பசிபோக்கும் திட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக நிறைவேற்றிவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நேற்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. மன்றக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக  வரலாற்றில் இந்த நூற்றாண்டு கண்டிராத வகையில் ஒரு இன அழிப்பு கொடூரத்தை இலங்கை தமிழர்கள் மீது ஏவி விட்ட சிங்கள இனவாத அரசை தட்டிக் கேட்கவும், போர்க்குற்றம் விசாரிப்பும், பொருளாதார தடையையும், இலங்கைக்கு எதிராக கொண்டுவர வேண்டும் எனும் கம்பீர குரல் எழுப்பி, உலகத் தமிழினத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கும்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தொடர்ந்து இலங்கை அரசு ஒரு சார்பு நிலையோடு மீள் குடியேற்றம் எனும் பேரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்துவதையும்,

தமிழனத்தின் மீதான ஒரு இன சிதைவை நடத்தி வருவதையும்,  கடுமையாக கண்டிக்கும் விதமாக,  இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தமிழர்களின்  கருத்தை அறிந்து அதற்கேற்ப தனி ஈழம் குறித்தான முடிவுகளை ஐநாவும், சர்வதேச சமூகமும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், இதற்கு இந்திய துணைக் கண்டம் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் புனிதமிக்க சட்டமன்ற பேரவையில் ஒரு புரட்சிகர தீர்மானத்தை இயற்றிய உலகத் தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் மனதார வாழ்த்தி உளமார வரவேற்று, இத்தகைய சுழைலில் மனித உரிமைகளை காலில் போட்டு நசுக்குகிற இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீரர்கள்  தமிழக  ஐபிஎல்  விளையாட்டுகளில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என்று திடத்தோடு அறிவித்தும், இதற்கு முன்பே இலங்கை பங்கேற்கும் தெற்காசிய தடகள விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில்  நடத்த முடியாது என ஆண்மை திறத்தோடு அறிவித்தும், தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி அத்துமீறி தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் உடமைக்கு சேதம்  விளைவித்து இதுவரை சுமார் 700 மீனவர்களை படுகொலை செய்திருக்கும் இலங்கை கடற்படை ராணுவத்தினருக்கு  இந்தியாவில் ராணுவப் பயிற்சி அளிப்பது, கடைந்தெடுத்த கோழைத்தனம், கடும் கண்டனத்திற்கு உரியது என்பதையெல்லாம், வன்மையாக கண்டித்து, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கும் தமிழகத்தின் கம்பீர முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு வாழ்த்துகிறது.

வான்மழை பொய்த்தாலும், வாஞ்சை கொண்ட தாய் மனம்   பொய்க்காது எனும் விதமாக தொடர்ந்து பருவகாலம் பொய்த்து விட்ட நிலையில் தமிழகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சியால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் விவசாய பெருமக்களுக்கு, உதவிக்கரம் நீட்டும் உன்னத நோக்கோடு  காவிரி படுகை மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த  தமிழகத்து  விவசாய பெருங்குடி மக்களும், இதுவரை இந்திய தேசத்தில் எந்த மாநிலமும் வழங்கிடாத அளவில் வறட்சி  நிவாரணம் வழங்க ஆணையிட்டிருக்கும், கனிவுமிகு தாயின்  வள்ளல் மனத்தையும், வாரி வழங்கும் தயாள மனத்தையும், இந்த மாமன்றம் வரவேற்று போற்றுகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் போதிய கவனம் செலுத்தாததால் மிகை மின் உற்பத்தி மாநிலமாக இருந்த தமிழகம், மின் பற்றாக்குறை மாநிலம் என்கிற நெருக்கடியை எதிர்கொண்டு அறிவிக்கப்பட்டடிஅறிவிக்கப்படாத மின் வெட்டுகளை கடந்த 5 ஆண்டு காலமாக எதிர்கொண்டு வருகிறது.  இந்த நிலையிலிருந்து மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தைப் போலவே  மிகைமின் உற்பத்தி மாநிலமாக தமிழகத்தை மீட்டெடுக்க கண் துஞ்சாது  கடமையாற்றிவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு  இந்த மாமன்றம் நெஞ்சார நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மின் பற்றாக்குறையை போக்கிட புதிய மின் உற்பத்தி நிலையங்களை துவக்கவும், மின் பற்றாக்குறையை நீக்கிட நீண்ட கால அடிப்படையில்  மின் கொள்முதல் செய்திட திட்டமிட்டும், மாற்று முறை மின்சார உற்பத்தியை பெருமளவில் ஊக்குவிக்கும் விதமாக, சுரிைய ஒளி மின்சார உற்பத்தியை மக்கள் இயக்கமாக மாற்றிட மானியம் வழங்கி மக்களை ஊக்குவித்திட மதி நுட்ப முடிவுகளை மேற்கொண்டுவரும்  புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு வாழ்த்துகிறது.

வயிறார சோறிடுதல் வேண்டும்  இங்கு வாழும் மக்களுக்கெல்லாம்  என்று பாடிய பாரதியின்  கூற்றைப் போன்று, அதனை வாழும்போதும், வாழ்ந்த  காலத்திற்கு பிறகும் மேற்கொண்டு வரும் வள்ளலாராகவும்,   பசியைப் போக்கும் திட்டங்களை பள்ளிகளில் சத்துணவாக பகவான் உறையும் ஆயைங்களில் அன்னதானமாக, இல்லங்கள்  அனைத்திற்கும் 20 கிலோஅரிசியை விலையில்லாது வழங்கிவரும் அன்னலெட்சுமியாம், முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு வாழ்த்துகிறது.

ஏழைஎளிய பாட்டாளி மக்களும், நடுத்தர வர்க்கமும், பெருமளவில் பசியாறி பயனுறும் வண்ணம் சென்னை பெருநகரெங்கும் அனைத்து வார்டுகளிலும், 200   அம்மா மலிவு விலை உணவகங்களை தமது பொற்கரங்களால் தொடங்கி வைத்து பசியெனும் பிணி தமிழகத்தில் எல்லைக்குள்அறவே இல்லை என்பதை தலைநகர் சென்னையின் வாயிலாக இத்தரணிக்கே எடுத்துரைத்து வரலாற்றில் யுக புரட்சி வடித்திருக்கும்  முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் களிப்போடு பாராட்டுகிறது.

நாடெங்கும், வாட்டி வதைக்கும் வறட்சி ஒரு பக்கம், வான்மழை பொய்த்ததால் அல்லல் உறும் உழவுத் தொழில் மறுபக்கம், பெட்ரோல், டீசல், எரிவாயு, ரயில்வே  பயணக்கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணம் என மத்திய அரசின், தொடர்ந்த விலையேற்றங்களால் நடுத்தர ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டு வரும் இன்னல்களை, வாழ்க்கை போராட்டங்களை கனிவோடு கருத்தில் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விலிருந்து அடித்தட்டு மக்ளை காப்பாற்றும் நோக்கோடு, அமுதம் கூட்டுறவு உணவுப்பொருள் வினியோக அங்காடிகளில் தரமான அரசி  ஒரு கிலோ ரூ.20டி க்கு வழங்கிட ஆணையிட்டிருக்கும் அம்மா அவர்களை இல்லங்கள் அனைத்தும் உள்ளம் குளிர வாழ்த்துகின்றன.

அந்த வாழ்த்தொலிகளோடு இந்த மாமன்ற உறுப்பினர்களின் கரவொலிகளும் நன்றிப் பெருக்கோடு கைகோர்க்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பதை தன் வாழ்வியல்  அரிச்சுவடியாய் கொண்டு பற்றற்ற துறவியாய், தூய தொண்டுள்ளத்தோடு   பொது வாழ்க்கை புனிதத்துக்கு இலக்கணமாக துருதுருத்த பணிகளால் தூங்காத விழிகள் கொண்டு தமிழகத்தை வழிநடத்தியும், தாய்நாட்டில் தமிழ் நாட்டை தலைநாடாய் ஆக்குவதற்கு தன்னை மெய் வருத்தி உழைக்கும் நம் அன்னைத் திருமகளாம் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு பாராட்டி வாழ்த்துகிறது.

அம்மாவின் லட்சியங்கள் அனைத்திற்கும் உறுதுணையாய் நின்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாத தடத்தில் தூய்மையோடு பணியாற்றிட,   சென்னை பெருநகர  மாநகராட்சி உளமாற உறுதி ஏற்கிறது என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

 

பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம்

Print PDF
தினமணி        26.04.2013

பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம்


ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் முதல்நிலை பேரூராட்சி மற்றும் அமைதி அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாக அலுவலர் வசந்தா தலைமை தாங்கினார். அமைதி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ராஜாராம் வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் கோவர்த்தனன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பேசினார்.

போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயவேல், வியாபாரிகள் குமரன், பெருமாள்ராஜா, மூர்த்தி, சையத்இப்ராஹிம், வார்டு கவுன்சிலர்கள் பச்சைமுத்து, ரேவதி, சுரேஷ்பாபு, சாரங்கபாணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 


Page 198 of 841