Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கூடலூர் நகராட்சிப் பகுதியில் தீ தொண்டு நாள் விழா விழிப்புணர்வு

Print PDF
தினமணி        21.04.2013

கூடலூர் நகராட்சிப் பகுதியில் தீ தொண்டு நாள் விழா விழிப்புணர்வு


தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீ தொண்டு நாள் விழா சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூடலூரில் தீ தொண்டு  நாள் விழா சிறப்பு முகாமில், நகர்மன்றத் தலைவர் அருண்குமார், ஆணையர் மு. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கம்பம் தீயணைப்பு மீட்புத் துறை நிலைய அலுவலர் சோணை தலைமையில், 6 பேர் கொண்ட குழுவினர் தீயை எப்படி அணைப்பது மற்றும் பாதுகாத்துக் கொள்ளும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

ரூ.20க்கு அரிசி திட்டம்துவக்கம்

Print PDF

தினமலர்                    20.04.2013

ரூ.20க்கு அரிசி திட்டம்துவக்கம்


வேலூர்: வேலூர் கற்பகம் சூப்பர் மார்க்கெட்டில், ஒரு கிலோ அரிசி, 20 ரூபாக்கு வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.டி.ஆர்.ஓ., பலராமன் தலைமை வகித்தார். கலெக்டர் சங்கர் துவக்கி வைத்தார். மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் தர்மலிங்கம், வேலூர் கிழக்கு புற நகர் மாவட்ட செயலாளர் அப்பு, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் வெங்கடேசன், மண்டல தலைவர் குமார், கவுன்சிலர்கள் துரையரசன், உஷா நந்தினி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெய ஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேட்டூர் நகராட்சியில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

Print PDF
தினகரன்         20.04.2013

மேட்டூர் நகராட்சியில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி


மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது.

மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக 1 வது வார்டு முதல் 9வது வார்டு வரை புகைப்படம் எடுக்கும் பணியை, மேட்டூர் நகர்மன்ற தலைவர் லலிதா சரவணன், நகர்மன்ற ஆணையர் (பொ) சுகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

1 மற்றும் 2வது வார்டு பகுதி மக்கள் வைத்தீஸ்வரா மேல்நிலைப்பள்ளியிலும், 3 மற்றும் 4வது வார்டு பொதுமக்கள் தங்கமாபுரி பட்டணத்தில் உள்ள நகராட்சி பள்ளியிலும், 5 மற்றும் 9 வது வார்டு வரை சேலம் கேம்ப் பகுதியில் உள்ள புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியிலும் புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.

நாளை (21ம்தேதி) வரை தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடக்கும் என்று ஆணையாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
 


Page 200 of 841