Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உணவகம் திறப்பு

Print PDF

தினத்தந்தி                13.02.2014

உணவகம் திறப்பு

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் நேற்று திறக்கப்பட்டது. உணவகத்தை மேயர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி கமிஷனர் கிரன்குராலா ஆகியோர் பொதுமக்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

Last Updated on Thursday, 13 February 2014 06:06
 

நகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா

Print PDF

தினமணி             12.02.2014

நகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா

பணி மாறுதலாகிச் செல்லும் திருவண்ணாமலை நகராட்சி ஆணையருக்கு, நகராட்சி ஊழியர்கள் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் பெ.விஜயலட்சுமி. இவர், காரைக்குடி நகராட்சி ஆணையராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் சார்பில் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு, அலுவலக மேலாளர் பழனி தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர் ஜெயவேல், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நகராட்சி அலுவலக ஊழியர்கள் மாறுதலாகிச் செல்லும் ஆணையரைப் பாராட்டிப் பேசினர். ஆணையர் பெ.விஜயலட்சுமி ஏற்புரை வழங்கினார். ஆணையருக்கு அலுவலக ஊழியர் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில், நகராட்சிப் பொறியாளர் ஜோதிமணி, சுகாதார ஆய்வாளர் வினோத் கண்ணா, நகர் நல அலுவலர் அஜந்தா, சமூக ஒருங்கிணைப்பாளர்கள் இந்திரா, செல்வராணி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பல் மருத்துவ முகாம்

Print PDF

மாலை மலர்              12.02.2014

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பல் மருத்துவ முகாம்
 
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பல் மருத்துவ முகாம்
சென்னை, பிப்.12 - சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பல் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, பல்மருத்துவ தொடக்க முகாம் அண்ணாநகர், கோட்டம் 102-ல் அமைந்துள்ள டி.பி.சத்திரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 8.00 மணியளவில் மேயர் சைதை துரைசாமி தலைமையில் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.கோகுலஇந்திரா தொடங்கி வைக்க உள்ளார்.

சிறப்பு பல்மருத்துவ முகாம் 5 நாட்கள் (பிப்ரவரி-12, 13, 14, 17 மற்றும் 18) தொடர்ந்து நடைபெற உள்ளது. இம்முகாம்களில் பல் சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் உள்ள 6,600 நபர்களுக்கு பல் பரிசோதனையும் தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சைகளும் வழங்கப்படும். மேலும் புகையிலை விழிப்புணர்வு மற்றும் வாய் புற்று நோய் கண்டறிதல் ஆகிய சேவைகளும் வழங்கப்படும்.
 


Page 21 of 841