Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி பல் மருத்துவமனைகளில் சிகிச்சை நேரம் மாற்றம்

Print PDF

தினகரன்                20.04.2013

மாநகராட்சி பல் மருத்துவமனைகளில் சிகிச்சை நேரம் மாற்றம்


சென்னை: ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சியின் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தில் புதிய பல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை மேயர் துரைசாமி நேற்று திறந்து வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் பயனடையும் வகையில் மாநகராட்சி சார்பில் புதிதாக 11 பல் மருத்துவமனை திறக்கப்படும் என உத்தரவிட்டார். அதன்படி, பல் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அண்ணாநகர், நெற்குன்றம், நங்கநல்லூர், பெசன்ட்நகர், கந்தன்சாவடியில் பல் மருத்துவமனை வரும் 22ம் தேதி திறக்கப்படும்.

வியாசர்பாடி, செம்பியம், அம்பத்தூரில் 23ம் தேதியும், கத்திவாக்கம், மாதவரம் ஆகிய பகுதியில் 25ம் தேதியும் பல் மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன. மாநகராட்சியில் ஏற்கனவே 4 பல் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் 4 பல் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிதாக 26 பல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக பல் மருத்துவமனையின் சிகிச்சை நேரம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மண்டல துணை ஆணையர் மகேஸ்வரி, கூடுதல் நல அலுவலர் டாக்டர் தங்கராஜ், தேனாம்பேட்டை மண்டலக்குழு தலைவர் சக்தி, கவுன்சிலர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேட்டூரில் பயோமெட்ரிக் பதிவு தொடக்கம்

Print PDF
தினமணி       19.04.2013

மேட்டூரில் பயோமெட்ரிக் பதிவு தொடக்கம்


சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் மக்கள் தொகை பதிவேட்டின்படி, தேசிய அடையாள அட்டைக்கான புகைப் படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தப் பணியை, மேட்டூர் நகர்மன்ற ஆணையர் (பொறுப்பு) சுகுமார் முன்னிலையில் மேட்டூர் நகர்மன்றத் தலைவர் லலிதா சரவணன் தொடங்கி வைத்தார். நகராட்சியின் முதல் மற்றும் இரண்டாவது வார்டுகளில் உள்ளவர்கள் வைதீஸ்வரா மேல்நிலைப் பள்ளியிலும், 3,4-ஆவது வார்களில் உள்ளவர்கள் தங்கமாபுரிபட்டணம் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 5 முதல் 9 வார்டு வரை உள்ளவர்கள் சேலம் கேம்ப் புனித பிலோமினா நடுநிலைப் பள்ளியிலும் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெறுகிறது.
 

தேசிய அடையாள அட்டைக்குபோட்டோ எடுக்க சிறப்பு முகாம்

Print PDF
தினமலர்         19.04.2013

தேசிய அடையாள அட்டைக்குபோட்டோ எடுக்க சிறப்பு முகாம்


சிவகங்கை:""சிவகங்கையில், தேசிய அடையாள அட்டைக்கு (ஆதார்) புகைப்படம் எடுக்காதவர்களுக்கு, இன்று முதல் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும்,'' என, நகராட்சி தலைவர் அர்ச்சுனன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை நகரில், தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம், கண், புருவம் எடுத்தல், கைரேகை சேகரித்தல் போன்ற பணிகள், ஒவ்வொரு வார்டு வாரியாக நடத்தப்பட்டன. போட்டோ எடுக்காதவர்களுக்கு, இரண்டாவது தவணையாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இது வரை, அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்காதோருக்கு, இன்றும், (ஏப்.,20, 21) நாளையும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்நகர் ஆக்ஸ்வர்டு நர்சரி பள்ளி, தொண்டி ரோடு அங்கன்வாடி மையம், நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி, மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி ஆகிய மையங்களில் தேசிய அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும், என்றார்.
Last Updated on Saturday, 20 April 2013 10:43
 


Page 201 of 841