Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வேலூரில் 3 கல்லூரிகளில் 2,219 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் மேயர் கார்த்தியாயினி வழங்கினார்

Print PDF
தினத்தந்தி        19.04.2013

வேலூரில் 3 கல்லூரிகளில் 2,219 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் மேயர் கார்த்தியாயினி வழங்கினார்


வேலூரில் 3 கல்லூரிகளை சேர்ந்த 2,219 மாணவ–மாணவிகளுக்கு மேயர் கார்த்தியாயினி விலையில்லா லேப்–டாப் வழங்கினார்.

லேப்–டாப்


வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படிக்கும் 742 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பலராமன் தலைமை தாங்கினார். கலையரசு எம்.எல்.ஏ., துணை மேயர் வி.டி.தருமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மாலதி வரவேற்றார்.

ஊரிசு கல்லூரியில் நடந்த விழாவில் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் சதாசிவம் முன்னிலை வகித்தார். முதல்வர் அருளப்பன் வரவேற்றார்.

டி.கே.எம். கல்லூரியில் நடந்த விழாவில் செயலாளர் மணிநாதன் தலைமை தாங்கினார். முதல்வர் ரேவதி வரவேற்றார்.

3 கல்லூரிகளிலும் மேயர் கார்த்தியாயினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மொத்தம் 2,219 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நடைபாதை


உங்களின் நடைபாதை, சரியான பாதையாக சிறப்பாக இருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் உங்களின் நட்பு வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும். உயர்கல்வி, படிப்பு, திருமணம் என்று எங்கு சென்றாலும் ஆசிரியர்களை நினைத்து அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற வேண்டும்.

லேப்–டாப் வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்று உள்ளீர்கள். முதல்–அமைச்சர் சட்டசபையில் கூறும்போது, அனைத்து மாணவர்களுக்கும் லேப்–டாப் வழங்க தயாராக இருப்பதாகவும், ஆனால் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் தான் வழங்கமுடியவில்லை என்று கூறினார். நேற்று இரவு லேப்–டாப் வந்தது. உடனே உங்களுக்கு இன்று லேப்–டாப் வழங்கப்படுகிறது.

உயர்ந்த அரசு என்பதில், வறுமை இருக்க கூடாது, தரமான பொருளாதாரம் இருக்க வேண்டும். அழியாத கல்விச் செல்வம் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடல்நிலை இருக்க வேண்டும் என்பது தான். அதனை முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.

தனித்திறமை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது. உங்களின் தனித்திறமையை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். இந்த தனித்திறமை தான் உங்களின் வாழ்க்கைக்கு உதவும். ஏழைகளுக்கும் கல்வித் தரம் கிடைக்க வேண்டும் என்று லேப்–டாப் வழங்கப்படுகிறது. லேப்–டாப்பை பயன்படுத்தி தரமான கல்வி கற்று நமது மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும். வ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிகளில் கல்லூரி பேராசிரியர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
Last Updated on Saturday, 20 April 2013 10:43
 

20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: கோவையில், குறைந்த விலை அரிசி வாங்க பொது மக்கள் ஆர்வம்

Print PDF
தினத்தந்தி        19.04.2013

20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: கோவையில், குறைந்த விலை அரிசி வாங்க பொது மக்கள் ஆர்வம்


கோவையில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை பொது மக்கள் ஆர்வத்துடன் வங்கி வருகிறார்கள்.

குறைந்தவிலை அரிசி திட்டம்

தமிழ்நாட்டில் வெளி மார்க்கெட்டில் அரிசி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கி வைத்தார். குறைந்த விலை அரிசி திட்டத்துக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரிசி சப்ளை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் 800 கிலோ விற்பனை


கோவையில் குறைந்தவிலை அரிசி கோவை மாநகரில் சிந்தாமணி தலைமை மையம், டவுன்ஹால் பகுதியில் நூலக கட்டிடத்தில் உள்ள சிந்தாமணி மையம், வால்பாறையில் உள்ள சிந்தாமணி மையம் ஆகிய 3 இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தொடக்க நாளில் ஒரே நாளில் 800 கிலோ பச்சை அரிசி மற்றும் புழுங்கல் அரிசி விற்பனை செய்யப்பட்டது.

குறைந்த விலை அரிசியை வாங்குவதற்காக நேற்று முன்தினம் காலை முதலே நீண்ட வரிசையில் பொது மக்கள் நின்று அரிசியை வாங்கினார்கள். இதற்காக 4 ஆயிரம் டன் அரிசி வாங்கி 3 மையங்களில் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. அரிசி தீர தீர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடமிருந்து அரிசி வாங்கப்படும். குறைந்தவிலை அரிசி திட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்பட நகராட்சி பகுதிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். பொது மக்கள் ஒரு கிலோ அரிசி கேட்டால் கூட விற்பனை செய்யப்படும். மேலும் 5 கிலோ, 10 கிலோ பைகளிலும் விற்கப்படும்.

மேற்கண்ட தகவலை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
Last Updated on Saturday, 20 April 2013 10:43
 

நெல்லை மீனாட்சிபுரம் பள்ளியில் 750 மாணவிகளுக்கு இலவச புத்தக பைகள் துணை மேயர் ஜெகநாதன் வழங்கினா

Print PDF
தினத்தந்தி       19.04.2013

நெல்லை மீனாட்சிபுரம் பள்ளியில் 750 மாணவிகளுக்கு இலவச புத்தக பைகள் துணை மேயர் ஜெகநாதன் வழங்கினா


நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, தமிழக அரசு திட்டத்தின் கீழ் நேற்று இலவச புத்தக பை வழங்கும் விழா நடந்தது.

விழாவுக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை நாராயண சுந்தரி தலைமை தாங்கினார். தச்சை மண்டல தலைவர் தச்சை மாதவன் முன்னிலை வகித்தார். துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன் கலந்து கொண்டு, 750 மாணவிகளுக்கு இலவச புத்தக பைகளை வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
 


Page 202 of 841