Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இணைய வழியில் நில ஆவணங்கள்:ஆட்சியர் வேண்டுகோள்

Print PDF
தினமணி        12.04.2013

இணைய வழியில் நில ஆவணங்கள்:ஆட்சியர் வேண்டுகோள்


இணைய வழியில் நில ஆவணங்களை பராமரிப்பதற்குரிய மென்பொருளை முன்னோடித் திட்டமாக செயல்படுத்திட கமுதி வட்டம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை  தெரிவித்துள்ளார்.

இணைய வழியில் நில ஆவணங்களை பராமரிப்பதற்குரிய மென்பொருளை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கமுதி வட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

 எனவே கமுதி வட்டத்தை சேர்ந்த நில உடமைதாரர்கள் தமது நில ஆவணங்களில் மாற்றம் செய்யவோ அல்லது பிழைகளை நீக்கம் செய்யவோ விரும்பினால் தமது விண்ணப்பங்களை நில உரிமைப் பத்திரங்களின் நகல்களுடன் வரும் 10.5.2013 அல்லது அதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் வட்டாட்சியர் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
 

"சிவகாசி நகராட்சியை தரம் உயர்த்தியது வரவேற்கத்தக்கது'

Print PDF
தினமணி        12.04.2013

"சிவகாசி நகராட்சியை தரம் உயர்த்தியது வரவேற்கத்தக்கது'

சிவகாசி நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: வருமானத்தின் படி, நகராட்சியை தரம் உயர்த்தலாம் என அரசு அறிவித்துள்ளது. நகராட்சியின் வருமானம் ஆண்டுக்கு 4 கோடிக்கு கீழ் இருந்தால் இரண்டாம்நிலை நகராட்சி எனவும், ரூ. 4 கோடி முதல் 6 கோடி வரை வருமானம் இருந்தால் முதல்நிலையாகவும், ரூ. 6 கோடிக்கு மேல் 10 கோடி வரை தேர்வுநிலையாகவும், ரூ. 10 கோடிக்கு மேல் சிறப்பு நிலையாகவும் நகராட்சியைத் தரம் உயர்த்தலாம் என அரசு உத்திரவிட்டுள்ளது.

2011-2012ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் சிவகாசி நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 10 கோடிக்கு மேல் இருந்ததால், இந்த நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என 31.7.2012-ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக முதல்வர் சிவகாசி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளார்.

இதனை சிவகாசியில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
 

சுயஉதவிக் குழுக்களின் பெயர்ப்பலகை திறப்பு

Print PDF
தினமணி        12.04.2013

சுயஉதவிக் குழுக்களின் பெயர்ப்பலகை திறப்பு


புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெயர்ப்பலகை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

உருளையன்பேட்டை கோவிந்தசாலை பகுதியில் செயல்படும் வசந்தம் நேயம் சுபதினம் மகளிர் சுய உதவிக்குழு, வசந்தம் தீப ஒளி சிக்கனம் மற்றும் கடன் நாணயச்சங்கம் மகளிர் குழு, வசந்தம் ஓம் சரணம் மகளிர் சுய உதவிக்குழு ஆகியவற்றின் பெயர்ப்பலகைகளை அரசுக் கொறடா ஜி.நேரு திறந்து வைத்தார்.

புதுச்சேரி நகராட்சி மகளிர் குழுக்களின் திட்ட அதிகாரி இரிசன், தொகுதி மகளிர் குழுப் பொறுப்பாளர் விஜயலட்சுமி, குழுத் தலைவியர் திலகவதி, சுஜாதா, இந்திரா, செயலர்கள் சாவித்திரி, பிரீத்தி, பெண்ணரசி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 


Page 205 of 841