Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கூடலூர் பேரூராட்சியில் "அம்மா' திட்ட முகாம்

Print PDF
தினமணி       10.04.2013

கூடலூர் பேரூராட்சியில் "அம்மா' திட்ட முகாம்


கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் பொதுமக்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்பேரூராட்சியில் கூடலூர் தெற்கு கிராமத்திற்குட்பட்ட முகாம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திலும், கூடலூர் வடக்கு கிராமத்திற்குட்பட்ட முகாம் திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை கூடலூர் பேரூராட்சித் தலைவர் அ.அறிவரசு தொடங்கி வைத்தார்.இதில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 23 பேருக்கு சாதிச் சான்றிதழ்கள், 14 பேருக்கு வருமானச் சான்றிதழ்கள், 9 பேருக்கு இருப்பிடச் சான்றிதழ்கள், 8 பேருக்கு வாரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 

தேவகோட்டை நகராட்சி கூட்டுறவு சங்கத் தேர்தலில் 10 பேர் வெற்ற

Print PDF
தினமணி       10.04.2013

தேவகோட்டை நகராட்சி கூட்டுறவு சங்கத் தேர்தலில் 10 பேர் வெற்ற


தேவகோட்டை நகராட்சி மற்றும் அனைத்து தொடக்க நடுநிலை  மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு நாணய சங்கத் தேர்தலில் நகராட்சி சார்பாகப்  போட்டியிட்ட 10 பேர் வெற்றி பெற்றனர்.

இதில் நகராட்சி மற்றும் தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒரு அணியாகவும், ஆசிரியர்களை மட்டும் உள்ளடக்கிய குழுவினர் ஓர் அணியாகவும் போட்டியிட்டனர்.    இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை ஆறாவது தொகுதி பள்ளியில் நடைபெற்றது.

இதில் ஆசிரியர் ராமராஜ் 69 வாக்குகளும், வேலுச்சாமி 63 வாக்குகளும், சுரேஷ்குமார் 61 வாக்குகளும், ஆசிரியை வணக்கம் 60 வாக்குகளும், செல்வக்குமார் 59 வாக்குகளும், ராமகிருஷ்ணன் 58 வாக்குகளும், ஆசிரியை அன்புக்கரசி 60 வாக்குகளும், ஆசிரியை விமலா 59 வாக்குகளும், ஆசிரியை ராணி 57 வாக்குகளும், சண்முகவேல் 65 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றனர்.
 

மாநகராட்சி சமுதாய கூடங்களில் அமைகிறது 15 மலிவு விலை உணவகங்கள்; மேயர் ஆய்வு

Print PDF

தினகரன்                09.04.2013

மாநகராட்சி சமுதாய கூடங்களில் அமைகிறது 15 மலிவு விலை உணவகங்கள்; மேயர் ஆய்வு


மதுரை: மாநகராட்சி சமுதாய கூடங்களில் 15 மலிவு விலை உணவங்கள் திறக்கப்படுகின்றன. இதில் 8 இடங்களை நேற்று மேயர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

சென்னையில் அரசு மானியத்துடன் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு இட்லி ரூ. 1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவகங்கள் மற்ற மாநகராட்சிகளிலும் படிப்படியாக திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

இதன்படி மதுரையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் (அம்மா உணவகம்) விரைவில் திறக்கப்பட உள்ளன.

இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 8 இடங்களை மேயர் ராஜன்செல்லப்பா நேற்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அந்த இடங்கள் வருமாறு:-

வடக்கு மண்டலம்: 35வது வார்டு ராமராயர் மண்டபம் அருகிலுள்ள சமுதாய கூடம். 45வது வார்டு புதூர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அருகிலுள்ள சமுதாய கூடம். 47வது வார்டு ஜவகர்புரம் மாநகராட்சி சமுதாய கூடம் அருகில். 46வது வார்டு காந்திபுரம் சுகாதாரமையம் அருகில்.

தெற்கு மண்டலம்: 87வது வார்டு சுப்பிரமணியபுரம் மாநகராட்சி சமுதாய கூடம். 77வது வார்டு சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி சமுதாய கூடம். 96வது வார்டு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம். 94வது வார்டு அவனியாபுரம் மாநகராட்சி வார்டு ஆபீஸ் அருகில். ஆய்வில் மண்டல தலைவர்கள் ஜெயவேல், சாலைமுத்து, நகர பொறியாளர் மதுரம், உதவி நகர்நல அதிகாரி பிரியாராஜ் பங்கேற்றனர்.

கிழக்கு மண்டலத்தில் 4 இடங்களிலும், மேற்கு மண்டலத்தில் 3 இடங்களிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள சமுதாய கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 


Page 209 of 841