Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பிப்.17-இல் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்

Print PDF

தினமணி             11.02.2014

பிப்.17-இல் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்

பெங்களூரு மாநகராட்சியின் 2014-15-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 17-ஆம் தேதி மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மாநகராட்சி மேயர் சத்தியநாராயணா தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

2014-15-ஆம் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் வருகிற 17-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும். இதைத் தொடர்ந்து பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிகழாண்டு நடைமுறை சாத்தியமான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்.20,21 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.

"நமது பெங்களூரு, எனது பங்களிப்பு' என்ற திட்டத்தில் பங்கெடுக்க மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் ஆர்வம் காட்டியுள்ளன. இந்தக் கல்லூரிகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வெகுவிரைவில் நடத்தப்படும்.

மாநகராட்சியின் மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளும், மாநகராட்சியின் பள்ளிகளை பொறியியல் கல்லூரிகளும் மேம்படுத்த அறிவுறுத்தப்படும். இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொள்வார் என்றார் அவர்.

 

மாநகராட்சி சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் இன்று தொடக்கம்

Print PDF

தினமணி             11.02.2014

மாநகராட்சி சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் இன்று தொடக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்களை செவ்வாய்க்கிழமை (பிப். 11) முதல் மாநகராட்சி நடத்துகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக முதல்வரின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு, 66 ஆயிரம் பேருக்கு சிறப்பு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.

இந்த முகாம்களை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி திரு.வி.க. மண்டலம் கேசவப்பிள்ளை பூங்காவில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) தொடங்கி வைக்கிறார்.

இந்த முகாம்களுக்கு சென்னை மாநகராட்சி பொது சுகாதாதத்துறையும், டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிப்ரவரி 21-ஆம் தேதி வரை குடிசைப்பகுதிகளில் இந்த முகாம்கள் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வீடு, மாடி தோட்டங்களுக்கு மாநகராட்சி பரிசு

Print PDF

தினகரன்             08.02.2014 

வீடு, மாடி தோட்டங்களுக்கு மாநகராட்சி பரிசு

சென்னை, : சென்னை மாநகராட்சி எல்லையில் வீட்டு தோட்டம், மொட்டை மாடியில், பால்கனியில் உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், தென்னை குலைகள் ஆகியவற்றின் கண்காட்சி வரும் 14, 15ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.

காய்கறி, பழங்கள், கீரைகள் மற்றும் தென்னங் குலைகள் ஆகியவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு வழங்கப்படவுள்ளது. சென்னை மாநகரை, பசுமை மாநகராக உருவாக்க வீட்டுத் தோட்டம் வைத்திருப்போருக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விலையில்லா தென்னங்கன்று வழங்கப்பட உள்ளது.

இதில் பங்குபெற விருப் பம் உள்ளோர் வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

 


Page 22 of 841