Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

போடி நகராட்சியில் உலக மகளிர் தின விழா

Print PDF
தினமணி       02.04.2013

போடி நகராட்சியில் உலக மகளிர் தின விழா


போடி நகராட்சி சார்பில் உலக மகளிர் தினவிழா நிறைவு நிகழ்ச்சியில் பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போடி நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா தொடர் கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் நிறைவு தின நிகழ்ச்சிகள் நகராட்சி ஆணையாளர் எஸ்.சசிகலா தலைமையில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் வி.ஆர்.பழனிராஜ் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பேச்சுப்போட்டி, கோலப்போட்டி, இசை நாற்காலி, பொட்டு வைத்தல், கட்டம் விளையாட்டு போட்டி போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மேலாளர் ப.பிச்சைமணி, நகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் தனிக்கொடி, தமிழ்மணி மற்றும் குழு உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
 

அம்மா உணவகம்: தினமும் 1 லட்சம் இட்லிகள் விற்பனை

Print PDF
தினமணி                  02.04.2013

அம்மா உணவகம்: தினமும் 1 லட்சம் இட்லிகள் விற்பனை


சென்னையில் தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகம் மூலம் தினமும் ஒரு லட்சம் இட்லிகள் விற்பனை செய்யப்படுவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அவர் தாக்கல் செய்த நகராட்சி நிர்வாகம் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:-

அடித்தட்டு மக்களின் நலனுக்காக கடந்த மார்ச் 19-ம் தேதி சென்னையில் மலிவு விலை அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இங்கு ரூ.1-க்கு இட்லி, ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது.

இதுவரை 73 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 127 உணவகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த உணவகங்கள் மூலம் தினமும் சராசரியாக ஒரு லட்சம் இட்லிகள், 25 ஆயிரம் சாம்பார் சாதம், 15 ஆயிரம் தயிர் சாதம் விற்பனைசெய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
 

மழைநீர் கால்வாய் அமைப்பு பணி 80% முடிந்தது

Print PDF
தினகரன்                 01.04.2013

மழைநீர் கால்வாய் அமைப்பு பணி 80% முடிந்தது


சென்னை: அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 179வது வார்டில் 11 ஆயிரம் பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை மேயர் சைதை துரைசாமி நேற்று வழங்கினார். அவர் பேசுகையில், வேளச்சேரி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க ரூ23.5 கோடி ஒதுக்கப்பட்டு, 80 சதவீதம் பணிகள்  முடிவடைந்துள்ளது. விரைவில் முடிக்கப்படும் என்றார். அசோக் எம்.எல்.ஏ., மண்டலக் குழு தலைவர் எஸ்.முருகன், கவுன்சிலர் சரவணன் பங்கேற்றனர்.
 


Page 216 of 841