Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அம்மா உணவகங்களில் இந்த மாதம் சப்பாத்தி அறிமுகம்: ஏற்பாடுகள் தீவிரம்

Print PDF

மாலை மலர்              07.02.2014

அம்மா உணவகங்களில் இந்த மாதம் சப்பாத்தி அறிமுகம்: ஏற்பாடுகள் தீவிரம்
 
அம்மா உணவகங்களில் இந்த மாதம் சப்பாத்தி அறிமுகம்: ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, பிப். 7 - சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 வார்டுகள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் சப்பாத்தி வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்போது சப்பாத்தி வழங்கவில்லை.

சப்பாத்திக்கு மாவு பிசையும் எந்திரம் மற்றும் அதற்கான பொருட்கள் அனைத்தும் தற்போது தயாராக உள்ளது. எனவே, இந்த மாதம் அம்மா உணவகங்களில் சம்பாத்தி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகிற 19–ந் தேதி அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு 1 ஆண்டு ஆகிறது. இந்த நாளில் சப்பாத்தி வழங்கலாமா? அல்லது முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24–ந் தேதி சப்பாத்தி வழங்கலாமா? என்றும் ஆலோசிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்டான்லி ஆஸ்பத்திரி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேரு மருத்துவமனை, எழும்பூர் குழந்தை நல ஆஸ்பத்திரி ஆகியவற்றிலும் அம்மா உணவகங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

 

ஆம்பூர் நகராட்சி சத்துணவு மையங்களுக்கு மிக்சி நகரசபை தலைவர் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி              07.02.2014

ஆம்பூர் நகராட்சி சத்துணவு மையங்களுக்கு மிக்சி நகரசபை தலைவர் வழங்கினார்

ஆம்பூரில் நகராட்சி மூலம் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு அரசின் விலையில்லா மிக்சி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகரசபை தலைவர் சங்கீதா தலைமை தாங்கி சத்துணவு மையங்களுக்கான மிக்சியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆணையாளர் (பொறுப்பு) எல்.குமார், மேலாளர் ஜெயபிரகாஷ், பிரேம், நிஷாத்துன்னிசா மற்றும் நகரசபை உறுப்பினர் பி.கே.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

சேலம், வேலூர், ஈரோட்டை சேர்ந்த மாநகராட்சி மேயர்கள், கவுன்சிலர்களுக்கு திறனூட்டு பயிற்சி முகாம் தொடங்கியது

Print PDF

தினத்தந்தி              07.02.2014

சேலம், வேலூர், ஈரோட்டை சேர்ந்த மாநகராட்சி மேயர்கள், கவுன்சிலர்களுக்கு திறனூட்டு பயிற்சி முகாம் தொடங்கியது

சேலம், வேலூர் மற்றும் ஈரோடு மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான 2 நாள் திறனூட்டு பயிற்சி முகாம் சேலத்தில் தொடங்கியது.

திறனூட்டு பயிற்சி முகாம்

தமிழ்நாடு நகரவியல் பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம், வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாநகராட்சிகளை சேர்ந்த மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சிக்கான ‘திறனூட்டுப்பயிற்சி‘ முகாம் சேலத்தில் நேற்று தொடங்கியது. பயிற்சி முகாமை சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

முகாமில், 74–வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டத்தின் சிறப்பம்சங்கள், மாமன்றத்தின் அதிகாரங்கள், பங்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள், மேயர் மற்றும் துணைமேயர் அதிகாரங்கள், பங்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள், மாமன்ற கூட்டம் நடத்துதல் ஆகியவை பற்றி ஓய்வு பெற்ற நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் எஸ்.நாராயணசாமி பயிற்சி அளித்தார். தொடர்ந்து நிலைக்குழுக்கள் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள், வார்டு குழுக்கள் அமைத்தல், அவற்றின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள், மனித உறவுகள், உள்ளாட்சியும் உறவுகளும், தேவை மற்றும் முக்கியத்துவம், தலைமைப்பண்பு, சுய ஊக்கம், நன்னெறிகள், முரண்பாடுகளை தீர்த்தல், பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகள், தகவல் தொடர்பு, ஆகியவை குறித்து முனைவர் மனவழகன் பயிற்சி அளித்தார்.

மேயர் அறிவுரை

முன்னதாக சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன் பேசுகையில், ‘‘மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் தலைவராக இருந்து, மக்களோடு மக்களாக பழகி சேவை செய்துதான், நாட்டின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்கள். ஆகவே, ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் தங்களின் கடமையையும், நிர்வாக முறைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்‘‘ என்றார்.

நேற்றைய பயிற்சி முகாமில் வேலூர் துணை மேயர் தர்மலிங்கம் மற்றும் 3 மாநகராட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

இன்றும்...

இன்று(வியாழக்கிழமை) 2–வது நாளாகவும் திறனூட்டு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி தணிக்கைத்துறை துணை இயக்குனர்நடராஜன், நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் ஆர்.ரகுநாதன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்அலுவலக உதவி திட்ட இயக்குனர் இளம்பருதி ஆகியோர் பயிற்சி வழங்குகிறார்கள்.

நாளை(வெள்ளிக்கிழமை) 3–வது நாள் முகாமில் பெண் மக்கள் பிரதிநிதிகளுக்கான மனவளக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது.

 


Page 23 of 841