Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

செவ்வாய்க்கிழமைகளில் "அம்மா' திட்ட முகாம்கள்

Print PDF
தினமணி               18.03.2013

செவ்வாய்க்கிழமைகளில் "அம்மா' திட்ட முகாம்கள்


தமிழக முதல்வர் அறிவித்த அம்மா திட்டத்தின்படி மார்ச் 19-ம் தேதி முதல் சென்னை மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக முதல்வர் தொடங்கிய "அம்மா' திட்டத்தின்படி "அம்மா' திட்ட முகாம்கள் மார்ச் 19-ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படும். இந்த முகாம்களில் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதி வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை கோரும் மனுக்கள், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை உள்ளிட்டவை தொடர்பான மனுக்களை அளிக்கலாம்.

இந்த முகாம்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களிலும் உள்ள கோட்டங்களில் சுழற்சி முறையில் வாரத்துக்கு 5 கோட்டங்கள் என்ற முறையில் நடத்தப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முடிவு செய்ய முடியாத மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும்.

பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகம், வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில் சிவன் கோயில் வடக்கு மாட வீதியில் உள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகம், நுங்கம்பாக்கம் குட்டி தெருவில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகம், தேனாம்பேட்டை கே.பி. தாசன் சாலையில் உள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகம் மற்றும் ஜாபர்கான்பேட்டை ராகவ ரெட்டி 2-வது குறுக்குத் தெருவில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றில் மார்ச் 19-ம் தேதி இந்த முகாம்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

மாநகராட்சி டிரைவர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

Print PDF
தினகரன்     14.03.2013

மாநகராட்சி டிரைவர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

மதுரை: மதுரை மாநகராட்சியில் ஆயிரத்து 500 பணியிடம் காலியாக உள்ளது. இதில் 232 பணியிடம் வாரிசு பணிக்கானது. இந்த பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை பணிக்கான ஆணை வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று மாநகராட்சியில் காலியாக உள்ள 80 டிரைவர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்புக்காக 360 தேர்வர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் சான்றிழை மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அவர்களிடம் சான்றிதழ் நகல் பெறப்பட்டது. இந்த பணியில் கீழ்மட்ட பணியாளர்கள் மட்டும் இருந்தனர். மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
 

வார்டு அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்

Print PDF
தினமணி         12.03.2013

வார்டு அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்


பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை மாநகராட்சி வார்டு அலுவலகங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விவரம்:  சென்னை மாநகர மக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்த முறையை எளிமைப்படுத்தும் விதமாக மாநகராட்சியின் 200 வார்டுகளில் அமைந்துள்ள வார்டு அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பிறப்பு, இறப்பு பதிவேடுகளில் திருத்தம் மற்றும் பெயர் சேர்ப்பது தொடர்பான விஷயங்களுக்கு மண்டல அலுவலகம், மாநகராட்சி தலைமை அலுவலகத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை. திருத்தங்கள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களை பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை அணுகலாம் என திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 222 of 841