Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மதுரை குப்பையை பார்வையிட்ட பஞ்சாப் உள்ளாட்சித்துறை செயலர்

Print PDF
தினமலர்                  07.03.2013

மதுரை குப்பையை பார்வையிட்ட பஞ்சாப் உள்ளாட்சித்துறை செயலர்


மதுரை: பஞ்சாப் மாநில உள்ளாட்சித்துறை செயலர் பாலமுருகன், நேற்று மதுரை மாநகராட்சி குப்பையை நேற்று பார்வையிட்டார். அவனியாபுரம் வெள்ளைக்கல்லில், ரூ.72.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அதே பகுதியில், ரூ.57 கோடி மதிப்பில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை பணி நடந்து வருகிறது. அவை, மத்திய அரசின் தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டவை.பஞ்சாப் மாநிலத்திலும், இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அது பற்றிய விபரங்களை அறியவும், செயல்முறையை பார்வையிடவும், அம்மாநில உள்ளாட்சித்துறை செயலர் பாலமுருகன், ஒரு நாள் பயணமாக நேற்று மதுரை வந்தார். வெள்ளக்கல் சென்ற அவர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை பார்வையிட்டார். கமிஷனர் நந்தகோபால், நகர் பொறியாளர்(பொறுப்பு) மதுரம், திடக்கழிவு மேலாண்மை திட்டத் தலைவர் பங்கஜ் ஜெயின் உடன் சென்றனர்.
 

மதுரை மாநகராட்சி ஆணையரின் பதவி உயர்வு ரத்துக்கு இடைக்காலத் தடை

Print PDF
தினமணி              07.03.2013

மதுரை மாநகராட்சி ஆணையரின் பதவி உயர்வு ரத்துக்கு இடைக்காலத் தடை


மதுரை மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபாலின் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து வழங்குவதற்காக 2009-ம் ஆண்டில் 10 மூத்த அதிகாரிகளின் பட்டியலை மத்தியப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அவர்களில் நந்தகோபால் உள்ளிட்ட 7 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து வழங்கி பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் தற்போது முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் மோகனசுந்தரம் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மாநில அரசு அனுப்பிய 10 பேர் பட்டியலில் எனது பெயர் இருந்தது. ஆனால் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு வழங்கப்பட்ட 7 பேர் பட்டியலில் எனது பெயர் இல்லை. ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்ட நந்தகோபால் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஆகவே, அந்த 7 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். எனது பெயரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மோகனசுந்தரம் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு, 2009-ம் ஆண்டு நந்தகோபால் துறை ரீதியான சில ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டிருந்தார். அவர் மீது சில குற்றச்சாட்டுகளை அரசு பதிவு செய்திருந்தது. எனினும் திடீரென அந்தக் குற்றச்சாட்டுகளை அரசு வாபஸ் பெற்றுள்ளது தெரிய வருகிறது. ஆகவே, நந்தகோபாலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து வழங்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என்று அண்மையில் உத்தரவிட்டது.

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகோபால் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு, நந்தகோபாலுக்கு வழங்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை ரத்து செய்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
 

குப்பைக் கிடங்கில் பஞ்சாப் அதிகாரி பார்வை

Print PDF
தினமணி              07.03.2013

குப்பைக் கிடங்கில் பஞ்சாப் அதிகாரி பார்வை

பஞ்சாப் மாநில உள்ளாட்சித்துறை செயலர் ஜே.எம். பாலமுருகன் புதன்கிழமை மதுரை மாநகராட்சி வெள்ளக்கல்லில் உள்ள குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

 இப்பணிகள் குறித்து ஆணையர் ஆர். நந்தகோபால், நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ.மதுரம் உள்ளிட்டோர் அவருக்கு விளக்கினர்.
 


Page 224 of 841