Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

துப்புரவுப் பணியாளர்: நகராட்சியில் நேர்முகத் தேர்வு

Print PDF
தினமணி         05.03.2013

துப்புரவுப் பணியாளர்: நகராட்சியில் நேர்முகத் தேர்வு


பண்ருட்டி நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணி இடங்களைப்  பூர்த்தி செய்வதற்காக நேர்முகத் தேர்வு நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடந்தது.

பண்ருட்டி நகராட்சியில் போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால், 33 வார்டு பகுதிகளில் துப்புரவுப் பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நாடுனர் பட்டியல் பெறப்பட்டு திங்கள்கிழமை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.ராதா நேர்முகத் தேர்வு நடத்தினார்.
 

மலிவு விலை உணவகங்கள்: மேலும் 40 வார்டுகளில் நாளை திறப்பு

Print PDF
தினமணி         05.03.2013

மலிவு விலை உணவகங்கள்: மேலும் 40 வார்டுகளில் நாளை திறப்பு


சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 40 மலிவு விலை உணவகங்கள் புதன்கிழமை (மார்ச் 6) திறக்கப்படுகின்றன.

சென்னையில் 200 வார்டிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல்கட்டமாக 15 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. பின்னர் முதல்வர் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி 24 வார்டுகளில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மேலும் 40 வார்டுகளில் மலிவு விலை உணவகங்கள் புதன்கிழமை திறக்கப்படவுள்ளன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில், தாழக்குப்பம் கத்திவாக்கம் நெடுஞ்சாலை (வார்டு 1), திருவொற்றியூர் வடக்கு மாதா தெரு (வார்டு 10), மணலி பாடசாலை தெரு (வார்டு 21), மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெரு (வார்டு 31), வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 3-வது பிரதான சாலை (வார்டு 37), வியாசர்பாடி மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் (வார்டு 45), கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 4-வது தெரு (வார்டு 47), சிங்கார தோட்டம் 4-வது தெரு (வார்டு 49), பழைய வண்ணாரப்பேட்டை (வார்டு 51), கடற்கரை சாலை 3-வது சந்து (வார்டு 60), எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை (வார்டு 61), சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூடம் சாலை (வார்டு 62), ராயப்பேட்டை பாரதி சாலை (வார்டு 63), கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெரு (வார்டு 76), புளியந்தோப்பு கே.பி.பூங்கா (வார்டு 77), சூளை குரவன் குளம் (வார்டு 78), அம்பத்தூர் வெங்கடாபுரம் தெற்கு பூங்கா தெரு (வார்டு 81), பாடி சி.டி.எச். சாலை (வார்டு 87), அண்ணா நகர் 2-வது பிரதான சாலை கே பிளாக் (வார்டு 101), கீழ்ப்பாக்கம் சிமெட்ரி சாலை (வார்டு 102), எம்.எம்.டி.ஏ. காலனி (வார்டு 108), கோபாலபுரம் சீனிவாச பெருமாள் சன்னதி 2-வது தெரு (வார்டு 118), ராயப்பேட்டை பேகம் சாகிப் 5-வது தெரு (வார்டு 119), சாரதாபுரம் (வார்டு 124).

மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு (வார்டு 135), கே.கே. நகர் 10-வது செக்டர் (வார்டு 137), மேற்கு ஜாபர்கான் பேட்டை அய்யாவு தெரு (வார்டு 138), ஆர்.ஆர். காலனி 2-வது தெரு (வார்டு 139), நொளம்பூர் 4-வது பிரதான சாலை (வார்டு 143), போரூர் ஆஞ்சநேயர் கோயில் தெரு (வார்டு 151), ராமாபுரம் பஜனை கோயில் தெரு (வார்டு 155), முகலிவாக்கம் (வார்டு 156), ஆலந்தூர் புதுதெரு (வார்டு 160), மேற்கு வேளச்சேரி ஐ.சி.டி.எஸ். கட்டடம் (வார்டு 177), வேளச்சேரி பிரதான சாலை (வார்டு 178), புழுதிவாக்கம் பேருந்து நிலையம் (வார்டு 169), மடிப்பாக்கம் பஸ் டெர்மினஸ் (வார்டு 188), ஜல்லடம்பேட்டை ரைஸ் மில் சாலை (வார்டு 191), நீலாங்கரை (வார்டு 192), ஈஞ்சம்பாக்கம் (வார்டு 196) ஆகிய இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated on Tuesday, 05 March 2013 10:26
 

பச்சை மையை யார் பயன்படுத்தலாம்?

Print PDF
தினமலர்          04.03.2013

பச்சை மையை யார் பயன்படுத்தலாம்?


கோவை:பச்சை மையில் கையெழுத்திட தகுதியானவர்கள் யார்? மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் பச்சை மையை பயன்படுத்தலாமா? என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், வக்கீல் கேட்ட கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரி, அதிகாரிகள் பெறும் ஊதியத்தை தெரிவித்துள்ளார்.கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் சுரேஷ்; வக்கீலான இவர் கோவையில் பணியாற்றுகிறார். மாநகராட்சியில் மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை அனைவருமே பச்சை மையினால் கையெழுத்திடுவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பச்சை மையில் கையெழுத்திட தகுதிகளாக எவை இருக்க வேண்டும் என்பதை அறிய முற்பட்டார். இதற்காக, கடந்த 2012ம் ஆண்டு, ஜன.,13ம் தேதி தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 6(1)ன் கீழ் உரிய பதில் கேட்டு, கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு(பொது தகவல் அலுவலர்) விண்ணப்பம் அனுப்பினார்.கடிதத்தில், மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகளில் யாரெல்லாம் பச்சை மையினால் கையொப்பம் இடலாம்? அவர்களின் பதவியுடன் வகைப்படுத்தவும்.

மேயர், துணைமேயர், மண்டல தலைவர்கள், குழுத்தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் பச்சை மையினால் கையெழுத்து போடலாமா?பதவியுடன் தெரியப்படுத்த வேண்டும். அப்படி கையழுத்திட தகுதி பெற்றவர், பெறாதவர் என்றால் இதன் சட்ட விதிகள் என்ன? இதற்கான நகல்கள் தர வேண்டும்.மேற்காணும் சட்டவிதிகள் இல்லாதபோது கையெழுத்திடும் நபர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்கள், மனுவில் கேட்கப்பட்டிருந்தன.

ஆனால், மாநகராட்சி பொதுதகவல் அலுவலர் மற்றும் உதவிஆணையாளர்(நிர்வாகம்) துரைராஜ் தெரிவித்த பதிலில்,"" 9300 -34 ஆயிரத்து 800 + தர ஊதியம் 4,800 ரூபாய் என்ற ஊதிய ஏற்ற முறையில் ஊதியம் பெறும் அலுவலர்கள் மற்றும் 4,800 ரூபாய்க்கு அதிகமாக தர ஊதியம் பெறும் அனைத்து அலுவலர்களும், பச்சை மையில் கையெழுத்திடலாம்'' என, தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால் தகவல் உரிமை அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியான மேயர், குழுதலைவர்கள், கவுன்சிலர்கள் பச்சை மையில் கையெழுத்து போடுவது குறித்துதான். ஆனால், உதவி ஆணையாளர் பதிலில், அதிகாரிகள் வாங்கும் ஊதியம் தரப்பட்டுள்ளது. மீண்டும் கேட்டபோது, அரசிடம் கேட்டுச் சொல்வதாக தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டுகாலம் ஆகியும் இதுவரை பதில் இல்லை.கேள்வி கேட்கும் வக்கீலுக்கே பதில் தர ஒரு ஆண்டுகாலம் எடுத்துக் கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம், சாதாரண மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருமா என்பது சந்தேகம் தான்.
Last Updated on Monday, 04 March 2013 11:19
 


Page 226 of 841