Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மின்சாரம் தயாரிக்கும் வகையில் நவீன முறையில் குப்பைகள் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை

Print PDF
தினகரன்           31.08.2012

மின்சாரம் தயாரிக்கும் வகையில் நவீன முறையில் குப்பைகள் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை

திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றுவதில் நவீன தொழில்நுடபத்தை செயலாக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல், எரிசக்தி பொருள் தயாரித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

 தமிழகத்தில் உள்ள நகரங்களில் சுகாதாரமற்ற நகரங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது திருப்பூர் மாநகரம்.குப்பை பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி போடும் அனைத்து திட்டங்களும், தோல்வியில் தான் முடிந்துள்ளன.இடுவாயில் நவீன குப்பை கிடங்கு செயல்படுத்தப்படும் என்றும், உரத்தொழிற்சாலை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் என்றும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், இத்திட்டங்கள் செயல்வடிவம் பெறவில்லை. மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற இடுவாய் உரக்கிடங்கு திட்டத்துக்கான முதல்கட்ட பணிகள் கூட இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை.

 மாநகரின் குப்பை பிரச்னைக்கு தனியார் நிறுவன பங்களிப்புடன் தீர்வு காண உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இந்த திட்டமும் செயல்வடிவம் பெற முடியவில்லை. ஏற்கனவே, பழைய மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டவே இடமில்லாத நிலையில், தற்போது ஒருங்கிணைந்த மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளின் குப்பைகளை எப்படி அள்ளுவது, எங்கு கொட்டுவது என தெரியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. மாநகராட்சி பகுதியில் தின மும் 500 மெட்ரிக் டன்னுக்கும் குறையாமல் குப்¬ பகள் கொட்டப்படும் என கூறப்படும் நிலையில், அவற்றை அள்ள போதிய வாகனங்கள் இல்லாதது, குப்பைகளை கொட்ட கிடங்கு இல்லாதது; போதிய ஊழியர்கள் இல்லாதது என மிக மோசமான கட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி இருந்து வருகிறது.

 திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ள நிலையில், துப்புரவு தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. குறைந்தபட்சமாக 2 ஆயிரம் பேர் தேவைப்படும் திருப்பூர் மாநகராட்சியில், ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் கூட இல்லை. போதிய அளவு குப்பைத் தொட்டிகளோ, அதை எடுத்து வர போதிய அளவு வாகன வசதிகளோ இல்லை. 50 சதவீதத்துக்கும் குறைவான வாகனங்கள் தான் உள்ளன.

இந்நிலையில், மாநகரின் குப்பை பிரச்னைக்கு, நவீன தொழில்நுட்பத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஈரமான குப்பைகள், உலர்ந்த குப்பைகள், மக்காத குப்பைகள், பயனற்ற குப்பைகள் என 4 ஆக பிரித்து அதில் இருந்து மின்சாரம், எரிபொருள், பிளாஸ்டிக் மறுபயன்பாடு தயாரிக்கும் வகையில் நவீன திட்டங்களை திருப்பூரில் செயலாக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
 
இது தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் கூறுகையில், ‘திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னைக்கு நவீன முறையில் தீர்வு காண அரசு அறிவுறுத்தியுள்ளது
 
 

மாநகராட்சியில் 6 நகர்நல மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

Print PDF

தினகரன்           31.08.2012

மாநகராட்சியில் 6 நகர்நல மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

கோவை, : கோவை மாநகராட்சி ஆறு நகர்நல மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி சார்பில் மாநகர பகுதிகளில் 20 நகர்நல மையங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோ தனை, பிரசவங்கள், அறுவை சிகிச்சை, குடும்ப நல அறுவை சிகிச் சை, கருத்தடை வளையம் பொருத்துதல், தடுப்பூசி பணிகள், காய்ச்சல் மற்றும் தொற்று நோய் கண்காணிப்பு பணிகள், இசிஜி பரிசோதனை, ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை உள் ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இவற்றில், அறுவை சிகிச்சை அரங்குகளுடன்கூடிய சீதாலட்சுமி நகர்நல மையம், வி.வி.எம். நகர்நல மையம், சி.டி.எம் நகர்நல மையம், ஆர்.கே.பாய் நகர்நல மையம், மீனாட்சி நகர்நல மையம், சிங்காநல்லூர் நகர்நல மையம் ஆகிய 6 நகர்நல மையங்களின் சிறந்த சேவைக்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 
 
டி.யு.வி நார்டு நிறுவனம் ஆய்வுசெய்து இவற்றை தேர்வுசெய்துள்ளது. மேற்கண்ட 6 நகர்நல மைய தலைமை மருத்துவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கும் விழா மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. மே யர் செ.ம.வேலுசாமி சான்றிதழ்களை வழங்கினார்.விழாவில், மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் டாக்டர் அருணா உள்பட பலர் பங்கேற்றனர்.
 

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பூ மார்க்கெட் வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை

Print PDF

தினகரன்           31.08.2012

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பூ மார்க்கெட் வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை

கோவை, :  கோவை பூ வியாபாரம் செய்வதற்கு அமைக்கப்பட்ட புதிய மார்க்கெட்டுக்கு இடம் பெயரவேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அவர்களை அப்புறப்படுத்துவது என்று அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநகராட்சி வளர்ச்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகர மேம்பாடு மற்றும், மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மேயர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், துணை கமிஷனர்கள் செந்தில்குமார், ஹேமா கருணாகரன், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மண்டல மேலாளர் சுப்பிரமணியன், வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆர்.டி.ஓ முனுசாமி, மின்வாரியம் சார்பில் சாந்தி, மாநகராட்சி தலைமை பொறியாளர் கருணாகரன், நகரமைப்பு அலுவலர் வரதராஜன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது பற்றி இரண்டு மணி நேரம் விவாதிக்கப்பட்டது.

பின்னர், ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:

* சத்திரோடு கணபதி பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

* மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் பகுதியில் நெரிசலை குறைக்க புதிதாக பூமார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும், இதை பயன்படுத்தாமல் பழைய மார்க்கெட் பகுதியிலேயே வியாபாரிகள் உள்ளனர். இவர்களை புதிய இடத்துக்கு அப்புறப்படுத்துவது. மீறினால் போலீஸ் துணையுடன் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது.

 


Page 239 of 841