Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சங்ககிரி பேரூராட்சி கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Print PDF
தினமணி                   31.08.2012

சங்ககிரி பேரூராட்சி கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சங்ககிரி, ஆக.30: சங்ககிரி பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி மன்றக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதற்கு பேரூராட்சித் தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் எஸ்.வேதமணி முன்னிலை வகித்தார். இதில், துணைத் தலைவர் எஸ்.வெண்ணிலா செல்வம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சங்ககிரி பேரூராட்சியின் பொது சுகாதாரத்திற்கு திடக்கழிவு மேலாண்மை திட்ட பயன்பாட்டிற்கு பொது நிதியிலிருந்து புதிதாக 10 தள்ளுவண்டிகள் மற்றும் கொசு மருந்து அடிக்கும் புகைப் போக்கி இயந்திரம் ஒன்று வாங்குதல், 4-வது வார்டு ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள தெப்பக் குளத்தின் நான்கு புறமும் உள்ள சுற்றுப்புறச் சுவர்களை புதுப்பித்தல், 3-வது வார்டு பவானி பிரதான சாலையிலிருந்து செக்கல்காடு புதுவளவு மாரியம்மன் கோயில் வரை சேதமடைந்துள்ள சாலையை தார்சாலையாக அமைத்து சாக்கடை கட்டுதல், பேரூராட்சி பொதுநிதியிலிருந்து பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்களை சுற்றி கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 

மாநகராட்சி மக்கள் புகார் செய்ய ஃபோன்

Print PDF

தினமலர்         31.08.2012

மாநகராட்சி மக்கள் புகார் செய்ய ஃபோன்

வேலூர்: வேலூர் மாநகராட்சி பகுதி பொதுமக்கள், குறைகளை தெரிவிக்க, கட்டணமில்லா டெலிஃபோன் வசதி செய்யப்பட்டுள்ளது.வேலூர் மாநகராட்சி பகுதி பொதுமக்கள், குறைகளை தெரிவிக்கும் வகையில், மாநகராட்சி அலுவலக வரவேற்பு பகுதியில், இலவச டெலிஃபோன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 18004254464 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். காலை 8 மணி முதல், இரவு 9 மணி வரை, பொதுமக்கள் இந்த ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டு, குறைகளை தெரிவிக்கலாம். நேற்று முதல் செயல்படும் இந்த கட்டணமில்லா டெலிஃபோனில், முதல் நாளில், 35 புகார்கள் வந்துள்ளது.""புகார்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று மேயர் கார்த்தியாயினி கூறினார்.
 

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்

Print PDF

தினமணி                     30.08.2012

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்

விழுப்புரம், ஆக. 29: விழுப்புரம் நகராட்சி சார்பில் 2012-க்கான வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணியை நகராட்சித் தலைவர் ஜி.பாஸ்கரன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

 ÷இப்பணியை வாக்காளர் பணி மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன், வாக்குச்சாவடி அலுவலர் கோவிந்தன், உதவியாளர் இளங்கோவன் ஆகியோர் மேற்கொண்டனர்.

  ÷இதில் 18 வயது நிறைவடைந்தவர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் படிவம் 6 மூலம் சேர்ப்பது, தவறான பெயர் மற்றும் முகவரியைச் சரி செய்வது என அனைத்தும் மேற்கொள்ளப்படுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
 


Page 240 of 841