Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

முதன்மை மாவட்ட நீதிபதி தகவல் மாநகராட்சி-ஊராட்சி வரை விரைவில் சட்ட உதவி மையம்

Print PDF

தினகரன்             28.08.2012

முதன்மை மாவட்ட நீதிபதி தகவல் மாநகராட்சி-ஊராட்சி வரை விரைவில் சட்ட உதவி மையம்

திருச்சி, : தமிழகத்தில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை விரைவில் சட்ட உதவி மையம் தொடங்கப்பட உள்ளதாக முதன¢மை மாவட்ட நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

திருச்சி கலெக்டர் ஆபீ சில் மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழுவின் இல வச சட்ட உதவி மையம் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட நீதிபதி யும், மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழுவின் தலைவருமான வேல்முரு கன் சட்ட உதவி மையத்தை தொடங்கி வைத்தார். பின் னர் நீதிபதி வேல்முருகன் கூறியது:

தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி கலெக் டர் ஆபீசில் தான் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்படுகிறது. இந்த மையம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இங்கு ஒரு வக் கீலும், ஒரு சட்ட தன் னா ர்வ தொண்டரும் இருந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

சட்டம் அல்லாத துறை மனுக்களாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறைக்கு அழைத்து செல்லப்படுவர். மாநகராட்சி, கமிஷனர் ஆபீஸ், தாலுகா ஆபீஸ், பல்கலைக்கழகம், மற்றும் அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களில் விரை வில் சட்ட உதவி மையம் திறக்க முடிவு செய்துள் ளோம். எங்களுக்கு ஒரு அறை மட்டும் போதும். உச்சநீதிமன்ற உத்தரவின் படி அரசு அலுவலகங்க ளில் இலவச சட்ட உதவி மையங்கள் திறக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மையத்தில் முதன்முதலாக அரியமங்கலம் காட் டூரை சேர்ந்த செல்வி(50) அளித்த மனு:

எனது கணவர் ஆறுமு கம். டிரைவர். எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு கண வர் எங்களை பிரிந்து வேறு பெண்ணுடன் மதுரையில் வசிக்கிறார். எனது இரு மகள்களும் வளர்ந்து விட்டநிலையில் வீட்டு வேலை செய்து அவர்களை வளர்க்கிறேன். வசதியாக வாழும் எனது கணவர், எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என கூறியிருந்தார்.

விழாவில் மகிளா கோர்ட் நீதிபதி ரகுமான், முதன்மை சார்பு நீதிபதி திலகம், 2வது கூடுதல் சார்பு நீதிபதி ஜெயராஜ், ஊழல் தடுப்பு சிறப்பு நீதி மன்ற சிறப்பு நீதிபதி ஸ்ரீதர், முதன்மை மாவட்ட முன் சீப் பத்மநாபன், 2வது கூடு தல் மாவட்ட முன்சீப் வடி வேலு, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் இளங்கோவன் (முதலாவது), ராஜேந்திரன் (2வது), கிருபாகரன் மதுரம் (3வது), ராஜாராம் (4வது), நர்கீஸ் கரீம் (5வது) ஆகி யோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 28 August 2012 11:36
 

பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கக் கூட்டம்

Print PDF

தினமணி        27.08.2012

பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கக் கூட்டம்

போளூர், ஆக. 26: போளூரில், தமிழ்நாடு அரசு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

.பேரூராட்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனே நிரப்பவேண்டும், பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், கீழ்நிலைப் பணியாளர்களுக்கு 20 சதவீத பதவிஉயர்வினை நடைமுறைப்படுத்தவேண்டும், மாநில முன்னுரிமை பட்டியல் (எஸ்எல்பி) உடனே வெளியிட ஆவனசெய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். போளூர் பேரூராட்சிப் பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

மேலபாளையம் மண்டல துப்புரவுபணி தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

Print PDF

தினமலர்      27.08.2012

மேலபாளையம் மண்டல துப்புரவுபணி தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

திருநெல்வேலி:மேலப்பாளையம் மண்டலத்தில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு மற்றும் பொது சுகாதார பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நெல்லை மாநகராட்சிக்குட்பட பகுதிகளில் மொத்தம் 4.78லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினமும் 154.42 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகளை சேகரித்தல், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், பொதுக்கழிப்பிடங்களை பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள நெல்லை மாநகராட்சி அந்தஸ்து பெற்றதிலிருந்து இதுவரை 335 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அடிக்கடி கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவதாலும், துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லாததாலும் திடக்கழிவு மேலாண்மை பணி பாதிக்கப்படுகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தேக்கமடைவதை தவிர்க்க மேலப்பாளையம் மண்டலத்தின் திடக்கழிவு பணிகளை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 110 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 135 துப்புரவு பணியாளர்கள் மற்ற மண்டலங்களுக்கு மாற்றுவதன் மூலம் பொது சுகதார பணிகள் எவ்வித சிரமமும் இன்றி மேற்கொள்ள முடியும். மேலும் தனியார் நிறுவனம் மூலம் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்வதால் மாநகராட்சிக்கு ஆண்டிற்கு 136லட்சம் சேமிப்பாகிறது.

மேலப்பாளையம் மண்டல பொதுசுகாதார நலன் கருதி திடக்கழிவு மேலாண்மை பணியினை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதற்கான தீர்மானம் வரும் 30ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கவுள்ள மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.
 


Page 241 of 841