Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

முக்கூடல் டவுன் பஞ்.,கூட்டம்

Print PDF

தினமலர்              24.08.2012

முக்கூடல் டவுன் பஞ்.,கூட்டம்

முக்கூடல்:முக்கூடல் டவுன் பஞ்.,கூட்டம் நடந்தது.முக்கூடல் டவுன் பஞ்., கூட்டம் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜெரால்டு, செயல் அலுவலர் சங்கரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டவுன் பஞ்., பயன்பாட்டிற்கு குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கும், மரக்கன்றுகள் நகர் முழுவதும் நட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் டேங்கர் வாங்க தீர்மானிக்கப்பட்டது.
 
சிங்கம்பாறை, அண்ணாநகர், லட்சுமிபுரம், சடையப்பபுரம், கலியன்குளம் ஆகிய பகுதிகளில் சிறு மின்விசைப்பம்பு அமைக்கவும், டவுன் பஞ்., பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சம்ப் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆற்றுக்கு செல்லும் சாலையின் ஓரத்திலும், நகர் சுற்றியுள்ள பகுதியிலும் மரக்கன்றுகள் நடவும் தீர்மானிக்கப்பட்டது.முதற்கட்டமாக டவுன் பஞ்., அலுவலகத்தை ஒட்டியுள்ள சிறுவர் பூங்காவில் தலைவர், உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
 

ரோட்டோரத்தில் அபாயகரமான கிணற்றை மூட தனியார் நிறுவனத்துக்கு பேரூராட்சி உத்தரவு

Print PDF

தினகரன்      24.08.2012

ரோட்டோரத்தில் அபாயகரமான கிணற்றை மூட தனியார் நிறுவனத்துக்கு பேரூராட்சி உத்தரவு

கோவை:கோவை-பாலக்காடு ரோட்டில், மதுக்கரை டோல் பிளாசா அருகில் உள்ள, அபாயகரமான தரைமட்ட கிணற்றை, உடனே மூடிவிடுமாறு, "எல் அண்ட் டி' நிறுவனத்துக்கு, பேரூராட்சி உத்தரவிட்டுள்ளது.கோவையில் இருந்து, பாலக்காடு செல்லும், எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில், மதுக்கரை டோல் பிளாசா உள்ளது. இதன் அருகில், ரோட்டை ஒட்டியவாறு அபாயகரமான தரைமட்ட கிணறு உள்ளது. இந்த கிணறு ரோட்டோரத்தில், எந்த தடுப்புச் சுவரும் இல்லாமல், தண்ணீர் நிரம்பி, புதர் சூழ்ந்து காணப்படுகிறது.

ரோட்டில் செல்லும் வாகனங்கள், சிறிது திசை மாறினாலோ, கிணற்றுக்குள் விழுந்து பெரும் விபத்துஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அபாயத்தை, சுட்டிக் காட்டி, கடந்த 21ம் தேதி, "தினமலர்' நாளிதழில், போட்டோ வெளியாகியிருந்தது.இது தொடர்பாக, மதுக்கரை பேரூராட்சி அதிகாரிகள், நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த தரைமட்ட கிணறு அமைந்துள்ள பகுதி, சரிவாக உள்ளதால், ஆபத்தான விபத்து பகுதியாக இருப்பதை, அதிகாரிகள் உறுதி செய்தனர்.கிணறு அமைந்துள்ள இடம், எல் அண்ட் டி டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிட்., நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு, மதுக்கரை பேரூராட்சி சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ்ராம் அனுப்பியுள்ள உத்தரவில், "கிணறு அமைந்துள்ள இடம், தங்களுக்கு சொந்தமான பகுதியாக இருப்பதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், தாங்களே அதற்கு முழு பொறுப்பு ஏற்க நேரிடும். சாலையோர கிணற்றை உடனே மூடி, விபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க, உரிய ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
 

நகர்புறங்களில் மக்கள் தொகை 10 ஆண்டுகளில் அதிகரிப்பு

Print PDF

தினமலர்     23.08.2012

நகர்புறங்களில் மக்கள் தொகை 10 ஆண்டுகளில் அதிகரிப்பு

 புதுடில்லி : இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில், நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த, 2001 ம் ஆண்டு நகரங்களில் 27.8 சதவீதமாக இருந்த மக்கள் தொகை, 2011ம் ஆண்டு 31.16 சதவீதமாக உயர்ந்துள்ளது. ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சவுகதா ராய், சில நாடுகளில், நகர்ப்புற மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விளக்கினார். இதன்படி, ""பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில், 33.1 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள் தொகை, 36.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில், 23.6 லிருந்து 28.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அண்டை நாடான இலங்கையில் மட்டும், 15.7 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக குறைந்துள்ளது,''இவ்வாறு சவுகதா ராய் கூறினார்.

 


Page 243 of 841