Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஓய்வு பெற்ற 13 பணியாளர்களுக்கு ரூ.6.40 லட்சம் வழங்கல்

Print PDF

தினமலர்     23.08.2012

ஓய்வு பெற்ற 13 பணியாளர்களுக்கு ரூ.6.40 லட்சம் வழங்கல்

தஞ்சாவூர்: தஞ்சை நகராட்சியில் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் 13 பேர்களுக்கு ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான செக்குகளை நகராட்சி தலைவர் சாவித்திரி வழங்கினார்.தஞ்சை நகராட்சியில் பொது சுகாதார பிரிவில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் 13 பேர்கள் கடந்த மே மாதம் 30ம் தேதியன்று, பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து இவர்களுக்கு விடுப்பு ஊதியமாக ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான செக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடந்தது.இதில், நகராட்சி ஆணையர் ஜானகி முன்னிலை வகித்தார். 13 துப்புரவு பணியாளர்களுக்கும் விடுப்பு ஊதிய செக்குகளை நகராட்சி தலைவர் சாவித்திரி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
 

சென்னையில் 15 மண்டலங்களில் 5000 நவீன பிளாஸ்டிக் கழிவறைகள் டெண்டர் கோரியது மாநகராட்சி

Print PDF

தினகரன்     22.08.2012

சென்னையில் 15 மண்டலங்களில் 5000 நவீன பிளாஸ்டிக் கழிவறைகள் டெண்டர் கோரியது மாநகராட்சி

சென்னை, : சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வாறு வருபவர்கள் அவசரமாக கழிப்பிடம் செல்ல வேண்டும் என்றால் தனியார் கழிவறைகளை தான் நாட வேண்டியது உள்ளது.

தனியார் கழிவறைகளில் கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வரிசையில் நின்று கழிப்பிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், கட்டண கொள்ளையை தடுக்கும் வகை யிலும்,  மக்களுக்கு அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் புதிதாக 5000 நவீன பிளாஸ்டிக் கழிப்பறைகள் அமைக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னைக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மண்டலம் 1 முதல் 7 வரை 2000 நவீன கழிப்பறையும், மண்டலம் 8 முதல் 15 வரை 3000 கழிப்பறை வீதம் 5000 நவீன கழிப்பறைகள் அமைக்கப்படுகிறது. நவீன கழிப்பறைகள் பாலி எத்திலின், பாலி கார்பனேட் அல்லது அதற்கு இணையான பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் 4 முதல் 5 கழிப்பறை வரை வைக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிறுத்தம், வணிக வளாகம், சந்தைகள், வழிப்பாட்டு தலங்கள், மருத்துவமனை, வியாபார பகுதிகளில் கூடுதலாக கழிப்பறைகள் வைக்கப்படும். ஒவ்வொரு  கழிப்பறையும் மின்வசதி, தண்ணீர் வசதியுடன் காற்றோட்டமாக இருக்கும் வகையில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் என்ற முறையில் கழிப்பறைகள் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். கழிப்பறைகள் அமைப்பதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி மாலை 3 மணி வரை டெண்டர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.அன்று மாலை 3 மணிக்கு மேல் டெண்டர் திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கழிவறைகளில் நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Last Updated on Wednesday, 22 August 2012 11:11
 

நகராட்சி அனுமதி இல்லாமல் டிஜிட்டல் போர்டு வைக்கக்கூடாது

Print PDF

தினமலர்              22.08.2012

நகராட்சி அனுமதி இல்லாமல் டிஜிட்டல் போர்டு வைக்கக்கூடாது

தேனி: தேனி நகராட்சி அனுமதி இல்லாமல், டிஜிட்டல் போர்டு வைக்ககூடாது, என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தேனி நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் நடத்தும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களாலும், டிஜிட்டல் போர்டு வைப்பது, மேடை அமைத்து ஒலி பெருக்கி பயன்படுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகிறது.

பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், தேனி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. டி.எஸ்.பி., புஷ்பம் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் கோபி, பாண்டி செல்வம் முன்னிலை வகித்தனர். அனைத்து கட்சிகளின் நகர செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேனியில் கனரா வங்கி அருகே பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டத்திற்கு, பெரியகுளம் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி அருகிலும், அல்லிநகரம் பஸ் ஸ்டாப் அருகிலும்,இடம் ஓதுக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே டிஜிட்டல் போர்டுகள் வைக்க வேண்டும். கண்டிப்பாக கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

மீறுவோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் கூட்டங்கள் நடத்த வேண்டும். இதை அனைத்து அரசியல் கட்சிகளும், பின்பற்றுவது, என முடிவு செய்யப்பட்டது.

Last Updated on Wednesday, 22 August 2012 06:27
 


Page 244 of 841