Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கண்காட்சி, பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா

Print PDF

தினமணி             17.08.2012

கண்காட்சி, பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா

பண்ருட்டி, ஆக. 16: பண்ருட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடந்தது.

÷பண்ருட்டி நகராட்சி சார்பில் நகர எல்லைப் பகுதியில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் வணிக நிறுவனம், வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பிளாஸ்டிக் ஒழிப்பில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

÷மேலும் நகராட்சி சார்பில் நகரில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு தலைமைப்புகளின் கீழ் கண்காட்சி, பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது.

÷இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி கண்காட்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், கேடயத்தையும் வழங்கி பாராட்டினார்.

÷இதில் ஜான்டூயி மெட்ரிக்குலேஷன் பள்ளி, புனித அன்னாள் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, மேத்தா பள்ளி, சுப்புராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பள்ளிகள் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றன. கண்காட்சியில் புனித அன்னாள் பள்ளி, ஜான்டூயி பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை முதல் 3 இடங்களைப் பெற்றன.

÷விழாவில் ஆணையர் க.உமாமகேஸ்வரி, பொறியாளர் ராதா, சுகாதார அலுவலர் குமார், ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜதுரை, முருகன், கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 17 August 2012 10:46
 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கண்விழித்திரை போட்டோ எடுக்கும் பணி

Print PDF

தினமலர்              17.08.2012

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கண்விழித்திரை போட்டோ எடுக்கும் பணி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கண்விழித்திரை, கைரேகையுடன் கூடிய அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்திய குடிமகன் என்பதற்கு அடையாளமாக அனைத்து விபரம் அடங்கிய அடையாள அட்டை வழங்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. வருங்காலத்தில் இந்த அø டயாள அட்டை தான் ரேஷன்கார்டு உள்ளிட்ட அனைத்திற்கும் பய ன்படும் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளிலும் இதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடக்கும். பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் விடுபடாமல் கண்விழித்திரையுடன் கூடிய போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் மதுமதி கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் 20ம் தேதி வரை தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுந்தரராமபுரம், நந்தகோபாலபுரம், அழகேசபுரம் தெரு, அழகேசபுரம் சந்து ஆகிய பகுதி மக்களுக்கு போட்டோ எடுக்கப்படுகிறது.அதே போல் மாநகராட்சி சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளியில் வரும் 20ம் தேதி வரை முனியசாமிபுரம் 2ம் தெரு, சிவந்தாகுளம் ரோடு, முனியசாமிபுரம் 1 தொடர்ச்சி, முனியசாமிபுரம் 2 தொடர்ச்சி, பங்களா தெரு, பக்கிள்புரம், பக்கிள்புரம் தொடர்ச்சி, முனியசாமிபுரம் மேற்கு, லெவஞ்சிபுரம் சால்ட் வேன்டூவிபுரம் டி.என்.டி.டி.ஏ தொடக்கப்பள்ளியில் அண்ணாநகர் 1வது தெரு, டூவிபுரம் 3வது தெரு, பாளையங்கோட்டை ரோடு, டூவிபுரம் 1வது தெரு, டூவிபுரம் 2வது தெரு, ஏ.ஏ.னு ரோடு, மணிநகர், வி.வி.டி ரோடு, ஹவுசிங்போர்டு மக்களுக்கு போட்டோ எடுக்கப்படுகிறது.

லெவஞ்சிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வரும் 25ம் தேதி வரை பிரையன்ட்நகர் 11, 12, சிவந்தாகுளம் 1, 2ம் தெரு, லெவஞ்சிபுரம் 1ம் தெரு, லெவஞ்சிபுரம் 2, முனியசாமிபுரம் 1ம் தெருசத்திரம் தெரு சத்துணவு மையத்தில் (பழைய பள்ளி கட்டடம்) வரும் 30ம் தேதி வரை சந்திவிநாயகர் சந்து, சந்திவிநாயகர் தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு, முத்துதெரு, கருப்பசாமிகோயில் தெரு, சுப்பையா தெரு, சத்திரம் தெரு, வண்டிமரிச்சியம்மன் கோயில் தெரு, வி.எம்.தெரு, எஸ்.எஸ். தெரு, கீழரதவீதி தொடர்ச்சி, ஆண்டாள் தெரு, நம்மாழ்வார் தெரு, கதிரேசன் கோவில் தெரு, பாண்டுரங்கன் தெரு, சாரங்கபாணி தெரு, சத்திரம் தெரு ஆகிய பகுதி மக்களுக்கு போட்டோ எடுக்கப்படுகிறது.கண்விழித்திரை, கைரேகை, போட்டோ எடுக்கும் பணிக்கு செல்வோர் ரேஷன்கார்டு ஜெராக்ஸ், 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.

இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தூத்துக்குடி மாநகராட்சி போன் எண் 2326901, மாநகராட்சி அலுவலக போட்டோ எடுக்கும் பணி பொறுப்பாளர் ஞானசேகரன் செல் போன் எண் 94433-55064 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

 

திண்டிவனம் நகராட்சிக்கு பாராட்டு சான்று

Print PDF

தினமலர்              17.08.2012

திண்டிவனம் நகராட்சிக்கு பாராட்டு சான்று

திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சியின் சிறப்பான செயல்பாட்டுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.சாதி வாரி கணக்கெடுப்பு பணியில் மாவட்ட அளவில் சிறப்பாக பணி புரிந்த நகராட்சியாக திண்டிவனம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழை நகராட்சி ஆணையர் அண்ணாதுரையிடம், கலெக்டர் சம்பத் வழங்கினார்.

 


Page 248 of 841