Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதியில் 100 புதிய பூங்காக்கள்: ரூ.30 கோடி செலவில் அமைகிறது

Print PDF

மாலை மலர்              16.08.2012

சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதியில் 100 புதிய பூங்காக்கள்: ரூ.30 கோடி செலவில் அமைகிறது

 சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதியில் 100 புதிய பூங்காக்கள்: ரூ.30 கோடி செலவில் அமைகிறது

சென்னை, ஆக. 16-சென்னை மாநகராட்சியுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக விரிவாக்கப்பகுதிகளில் 100 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய பூங்காக்கள் அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. ரூ. 30 கோடி மதிப்பில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. இதில் மரங்கள், புல் வெளிகள், விளையாட்டு பொருட்கள், யோகா மேடை உள்பட அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறுகிறது.
 

மாநகராட்சியில் சுதந்திர தின விழா மாநகர் சுத்தமாக இருக்க மனசாட்சியோடு பாடுபட வேண்டும்

Print PDF
தினகரன்    16.08.2012
 
மாநகராட்சியில் சுதந்திர தின விழா மாநகர் சுத்தமாக இருக்க மனசாட்சியோடு பாடுபட வேண்டும்
 
திருப்பூர், :  ‘’சுற்றுப்புறச்சூழலை நம் தன்னலத்தாலும், விழிப்புணர்வின்மையாலும் அவமதித்து வருகிறோம். சுத்தமான, சுகாதாரமான, சுற்றுப்புறச் சூழலைப் பேணிக் காக் கின்ற தேசம் அமைந்திட வும், ‘தூய்மை மிகு திருப்பூர்’ அமைந்திடவும், நாம் அனைவரும் மனசாட்சியோடு பாடுபட வேண் டும்,’’ என திருப்பூர் மாநகராட்சியில் தேசிய கொடியேற்றி வைத்த மாநகராட்சி மேயர் அ.விசட்சி பேசினார்.
 
இந்திய நாட்டின் 66வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச்சிலைக்கு திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், ஆணையாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்த மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி பேசியதாவது.

 இன்று அறிவியலோடு சேர்ந்து நம் அன்னை தேசமும் வளர்ந்திருக்கிறது. ஆனால் சந்தி, தெருப்பெருக்கும் சாத்திரத்தை மட்டும் கற்காமலேயே விட்டுவிட்டோம்.

தன் வீட்டைத் தன் குடும்பத்தினரை தன் வளாகத்தைச் சுத்தமாக வைத்திருக்க நினைக்கும் நாம், நம் நாட்டின் சுத்தத்தைப் பற்றி ஒரு போதும் கவலைப்படுவதோ, வருந்துவதோ இல்லை.
 தாள்கள், பிளாஸ்டிக் பைகள், டின்கள், மூடிகள், டின்கள், பேக்கட்டுகளும் வீட்டு வாசலில் குவிந்து கிடக்கின்றன. நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள் என அத்தனை கழிவுகளும் நடுரோட்டில் எரியப்படுகின்றன. வேண்டாத கலாச்சாரத்தின் விளைவாய் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. வாழைப் பழத்தோல் சிதைய 4 வாரங்களும், காகிதப் பை சிதைய 5 வாரங்களும், கந்தல் துணி சிதைய 5 மாதங்களும், மரம் சிதைய 15 வருடங்களும் ஆகும். ஆனால் பிளாஸ்டிக் சிதைய 10 லட்சம் ஆண்டுகள் ஆகும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சொல்கிறது. மக்காத பிளாஸ்டிக் நம்மை மக்காகி விட்டது.

 இயந்திரங்கள் பெருக்கத்தால் காற்று மாசடைந்து வருகிறது. நச்சுக்காற்றால் காய்ந்து போன எலும்பு கூடாக பூமி மாறி வருகிறது. கட்டட காடுகளில் உலவும் விலங்குகளாக மனிதன் மாறிப் போய் விட்டனர். நம் முன்னோர் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையினால் பாதுகாத்து வந்த சுற்றுப்புறச்சூழலை, நம் தன்னலத்தால், விழிப்புணர்வின்மையால் அவமதித்து வருகிறோம்.

ஆகவே சுத்தமான, தூய்மையான, சுகாதாரமான, சுற்றுப்புறச் சூழலைப் பேணிக் காக்கின்ற தேசம் அமைந்திடவும், ‘தூய்மை மிகு திருப்பூர்’ அமைந்திடவும், நாம் அனைவரும் மனசாட்சியோடு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவ, மாணவியர்கள் அணிவகுக்க மாநகராட்சி மேயர், ஆ¬ ணயாளர், துணை மேயர் உள்ளிட்டோர் மாணவர்களுடன் சுதந்திர விழா பேரணியில் பங்கேற்றனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி குமரன் சாலை வழியாக குமரன் நினைவிடத்தை அடைந்தது. அப்போது திருப்பூர் குமரன் நினைவகம் மற்றும் அவர் அடிபட்ட இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்விரு இடங்களிலும் மேயர் விசாலாட்சி தேசிய கொடியேற்றினார். குமரன் நினைவிடத்தில் இருந்த குமரன் சிலைக்கு மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, குமரன் நினைவகத்தில் தியாகி மற்றும் தியாகிகள் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா, கவுன்சிலர்கள் முருகசாமி, கீதா, நஜிமுதீன், சுபா, பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 16 August 2012 10:36
 

மாநகராட்சி விரிவாக்கப்பகுதிகளில் புதிதாக 4 ஆயிரம் தெருவிளக்குகள் சுதந்திர தின விழாவில் மேயர் அறிவிப்பு

Print PDF

தினகரன்    16.08.2012

மாநகராட்சி விரிவாக்கப்பகுதிகளில் புதிதாக 4 ஆயிரம் தெருவிளக்குகள் சுதந்திர தின விழாவில் மேயர் அறிவிப்பு

மதுரை, : மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பகுதிகளில் ரூ.19 கோடியில் 4 ஆயிரம் புதிய தெருவிளக்குகள் அமைக்கப்படும் என மேயர் ராஜன் செல்லப்பா கூறினார்.

மாநகராட்சி வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மேயர் ராஜன் செல்லப்பா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கமிஷனர் நந்தகோபால், துணை கமிஷனர் சாம்பவி, நகரமைப்புப் பொறியாளர் மதுரம், உதவி ஆணையர்கள் தேவதாஸ், ரவீந்திரன், சின்னம்மாள், சுகாதாரத்துறை அலுவலர் பிரியா, மண்டலத் தலைவர்கள் ராஜலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் மேயர் பேசுகையில், ‘‘மாநகராட்சியின் விரிவாக்கப்பகுதியில் 177 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட உள்ளது. மேலும், 25 லாரிகள் மூலம் தினந்தோறும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரமைப்பு கட்டமைப்பு வசதியின் கீழ் ரூ.14 கோடியே 55 லட்சத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும். மண்டலம் 1ல் ரூ.75 லட்சத்தில் தெருவிளக்குகள் தானியங்கி மூலம் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடலழகர் பெருமாள் கோயில், சிம்மக்கல், தமிழ்ச்சங்கம் சாலை, மகாத்மா காந்தி நகர் ஆகிய பகுதிகளில் ரூ.16 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. விரிவாக்கப்பகுதிகளில் ரூ.19 கோடியில் 4 ஆயிரம் புதிய தெருவிளக்குகள் அமைக்கப்படும்,’’ என்றார்.
Last Updated on Thursday, 16 August 2012 10:08
 


Page 249 of 841