Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திரதின விழா கோலாகலம்

Print PDF

தினமலர்               16.08.2012

மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திரதின விழா கோலாகலம்

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மேயர் விஜிலா தேசியக்கொடி ஏற்றினார்.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு மேயர் விஜிலா தேசியக்கொடி ஏற்றினார். துணை மேயர் ஜெகநாதன், கமிஷனர் மோகன், மண்டல தலைவர்கள் மாதவன், எம்.சி.ராஜன், ஹைதர்அலி, மோகன், நகர பொறியாளர் ஜெய்சேவியர், உதவி செயற்பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ், பாஸ்கர், கருப்பசாமி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பாளை. மண்டலத்திற்கு உட்பட்ட 2 பயனாளிகளுக்கு 45 ஆயிரம் ரூபாய், தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட 5 பேருக்கு 54 ஆயிரம் ரூபாய், நெல்லை மண்டலத்தை சேர்ந்த 4 பேருக்கு 90 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 11 பேருக்கு 1.89 லட்சம் ரூபாய் மானியத்தை மேயர் வழங்கினார்.
ரத்ததானம் வழங்கிய கவுன்சிலர்கள் உமாபதிசிவன், டேனியல் மற்றும் சுப்புலட்சுமிக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சிப்பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற கல்லணை பள்ளி மாணவி பாத்திமா நஸ்ரின், இரண்டாம் இடம் பெற்ற ஜாஸ்மின், மூன்றாம் இடம் பெற்ற சங்கரகோமதி, எஸ்.எஸ்.எல்.சி.,யில் முதலிடம் பெற்ற கல்லணை பள்ளி மாணவி முத்துமாலை, இரண்டாம் இடம் பெற்ற விஜயலட்சுமி, மூன்றாம் இடம் பெற்ற இசக்கியம்மாளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.மண்டல வார்டு அலுவலகங்களில் அந்தந்த மண்டல தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றினர்.

 

"தூய்மைமிகு திருப்பூர்' உருவாக...சபதம் ஏற்க அழைப்பு : மனசாட்சியோடு பாடுபட அறிவுரை

Print PDF

தினமலர்               16.08.2012

"தூய்மைமிகு திருப்பூர்' உருவாக...சபதம் ஏற்க அழைப்பு : மனசாட்சியோடு பாடுபட அறிவுரை

திருப்பூர் : ""நாட்டுக்கு சுதந்திரம் பெற்ற இந்நாளில், திருப்பூர் மாநகராட்சியில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை ஒழிக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும். சுத்தமான, சுற்றுப்புறச்சூழலை பேணிக்காக்கும் தேசம் அமையவும், "தூய்மைமிகு திருப்பூர்' அமையவும், மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளர்களும், ஊழியர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மனசாட்சி யோடு பாடுபடுவோம் என்று உறுதி ஏற்க வேண்டும்,'' என மேயர் விசாலாட்சி அறிவுறுத்தினார்.கோலாகலம்திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், சுதந்திர தின விழா, சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. முன்னதாக, கலெக்டர் மதிவாணன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

எஸ்.பி., ஆஸ்ரா கர்க் மற்றும் கலெக்டர் ஆகியோர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டனர். தொடர்ந்து, போலீசாரின் பேண்ட் வாத்தியம் முன் செல்ல அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.தேசியக்கொடியின் மூவர்ணங்களை சித்தரிக்கும் வகையில் பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. பின், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் குடும்பத்தினர் 12 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

துறை வாரியாக சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.போலீஸ் துறையில் டி.எஸ்.பி., - எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் எட்டு பேருக்கும், அரசுத்துறையில் வருவாய், ஊரக வளர்ச்சி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் தாசில்தார் முதல் துப்புரவு பணியாளர் வரை மொத்தம் 48 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.நலத்திட்ட உதவிபல்வேறு துறைகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறை சார்பில் 77 பேருக்கு ஓய்வூதியம்; உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் 46 பேருக்கும், பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 4 பேருக்கு துணி தேய்க்கும் பெட்டி; ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 91 பேருக்கும், வருவாய்த்துறை சார்பில் 33 பேருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி துறை சார்பில் 130 பேருக்கு பசுமை வீடு மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் பணி உத்தரவு; மகளிர் திட்டத்தில் 63 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 1.70 கோடி ரூபாய் சுழல் நிதி; மாவட்ட தொழில் மையம் சார்பில் 10 பேருக்கு சுய தொழில் துவங்க வங்கி கடன்; தாட்கோ நிறுவனம் சார்பில்2 பேருக்கு வாகன கடன் வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 29 பேருக்கு உபகரணங்கள், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகியன சார்பில் மானியங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 520 பேருக்கு 3.89 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.கலை நிகழ்ச்சிசுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. லிட்டில் பிளவர் பள்ளி, உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி, தாயம்பாளையம் வி.எம்.சி.டி.வி., மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் காது கேளாதோர் பள்ளி, கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாராபுரம் விவேகம் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

வண்ணமயமாக நடந்த இந்நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.மாநகராட்சியில்...திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஜெய்வாபாய் பள்ளி மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மேயர் விசாலாட்சி, தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக, மேயர், கமிஷனர் செல்வராஜ், துணை மேயர் குணசேகரன் ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேயர் பேசியதாவது:திருப்பூர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெருக்கவும், சுகாதாரத்தை பேணிக்காக்கவும்,மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.ஒருவர் வீட்டு குப்பையை, அடுத்தவர் வீட்டுக்கு முன் கொட்டுவது சாதாரணமாகி விட்டது. வாழை பழத்தோல் சிதைந்து மக்கிப்போக நான்கு வாரமாகிறது. காகித பை சிதைய ஐந்து வாரங்கள் ஆகின்றன. கந்தல் துணி சிதைய ஐந்து மாதங்கள், பெரிய மரம் சிதைந்துபோக 15 ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் சிதைய, 10 லட்சம் ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது என மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.நீரில் கரையாமல், நெருப்பால் மறையாமல், மண்ணில் மக்கிப்போகாமல் பயமுறுத்திக் கொண்டிருக் கும் பிளாஸ்டிக் அசுரனை அழிக்க, அனைவரது ஒத்துழைப்பும் தேவை. இன்றைய நிலவரப்படி, திருப்பூரில் தேங்கியுள்ள மக்காத பாலித்தீன் குப்பைகள், மக்களை மக்காக மாற்றிவிடும் ஆபத்துள்ளது.நாட்டுக்கு சுதந்திரம் பெற்ற இந்நாளில், திருப்பூர் மாநகராட்சியில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை ஒழிக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும்.

சுத்தமான, சுற்றுப்புறச்சூழலை பேணிக்காக்கும் தேசம் அமையவும், "தூய்மைமிகு திருப்பூர்' அமையவும், மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளர்களும், ஊழியர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மனசாட்சியோடு பாடுபடுவோம் என்று உறுதி ஏற்க வேண்டும்.இவ்வாறு, மேயர் பேசினார்.முன்னதாக, பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில், இரண்டு பயனாளிகளுக்கு 2.50 லட்சம் ரூபாய் கடன் தொகையும், மூன்று மகளிர் குழுக்களுக்கு 6.10 லட்சம் ரூபாய் கடன் தொகையும் வழங்கப்பட்டது. மேயரின் சொந்த செலவில், ஏழை பெண்கள் இருவருக்கு இலவச தையல் மெஷின், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அதன்பின், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, குமரன் நினைவு இடத்திலும், குமரன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Last Updated on Thursday, 16 August 2012 09:36
 

துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல்

Print PDF

தினமலர்               16.08.2012

துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல்

சேலம்: சேலம் மாநகராட்சியில், ஏழு துப்புரவு பணியாளர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டது.சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலத்தில், துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்த, பழனிசாமி, பெருமாள், அருக்காணி, பாலா, ராஜாமணி, பழனியம்மாள், பரிமளாதேவி ஆகிய, ஏழு பேருக்கு, ஓய்வூதியமாக, 10 லட்சத்து, 15 ஆயிரத்து, 225 ரூபாய்க்கான காசோலையையும், இரண்டு பயனாளிகளுக்கு தலா, 2, 500 ரூபாய் வீதம், 5,000 ரூபாய் ஈமச்சடங்கு மானியத்தொகையினையும், மேயர் சவுண்டப்பன் வழங்கினார்.அவருடன், மாநகராட்சி கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Last Updated on Thursday, 16 August 2012 06:35
 


Page 252 of 841