Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உசிலம்பட்டி நகராட்சியில் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் புதிய ஆணையாளர் தகவல்

Print PDF

தினகரன்     11.08.2012

உசிலம்பட்டி நகராட்சியில் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் புதிய ஆணையாளர் தகவல்

உசிலம்பட்டி, : அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உசிலம்பட்டி நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள பாப்பம்மாள் தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டி நகராட்சியில் ஆணையாளராக இருந்த கிருஷ்ணநந்தன் பணி ஓய்வு பெற்றார். இதனால் பொறியாளர் சரவணக்குமார் ஆணையாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சியில் மேலாளராக இருந்த பாப்பம்மாள் பதவி உயர்வு பெற்று உசிலம்பட்டி நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பு ஏற்றார். இவருக்கு நகர் மன்ற தலைவர் பஞ்சம்மாள், நகர்மன்ற துணைத் தலைவர் பூமாராஜா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆணையாளர் பாப்பம்மாள் கூறுகையில், ‘‘உசிலம்பட்டி நகராட்சியில் அடிப்படை தேவைகளுக்கு முன்னிரிமை அளிக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்,’’ என்றார்.

 

உசிலை. நகராட்சி ஆணையர் பதவி ஏற்பு

Print PDF

தினமணி              11.08.2012

உசிலை. நகராட்சி ஆணையர் பதவி ஏற்பு

உசிலம்பட்டி, ஆக. 10: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குப் புதிய ஆணையர் பதவி ஏற்றார்.இந்த நகராட்சியில் கடந்த 10 மாதங்களாக ஆணையர் நியமிக்கப்படாமல் இருந்தது. பொறியாளர் தங்கப்பாண்டி ஆணையாளர் (பொறுப்பு) வகித்து வந்தார். இதனால் பணிகள் நடைபெறுவதில் சிரமம் ஏற்பட்டது.பொதுமக்கள் கோரிக்கையைத் தொடர்ந்து புதிய ஆணையராக ஏ.ஆர்.பாப்பமாள் நியமிக்கப்பட்டார்.

இவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.இவர் இதற்கு முன் பொள்ளாச்சி சிறப்பு நிலை நகராட்சி மேலாளராக வேலை பார்த்து வந்தார். 

இவரை நகர்மன்றத் தலைவர் யூ.பி.ஆர்.பஞ்சம்மாள், துணைத் தலைவர் பூமா கே.ஆர்.ராஜா, நுகர்வோர் பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் சின்னக்கண்ணன், ஐ.ராஜா,ஜெயபால்தேவநேசன் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்தினர்.

 

செங்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி                10.08.2012

செங்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

செங்கம், ஆக. 9: செங்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் சென்னம்மாள் முருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார். தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் திட்ட நிதியிலிருந்து அளிக்கப்பட்ட தொகை ரூ.10 லட்சத்தில் செங்கத்தில் பூங்கா அல்லது விளையாட்டு மைதானம் அமைக்க பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அவர்களின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்

செங்கம் பழைய காவல் நிலையம் அருகில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க வேண்டும். செங்கம் தளவாநாய்கன்பேட்டையில் தெருவிளக்குகள் அமைப்பது, குடிதண்ணீர் பற்றாக்குறையைச் சரி செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 255 of 841