Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காரைக்குடியில் நவீன மயானம்: எரிவாயுத் தகனமேடை சோதனை

Print PDF

தினமணி          09.08.2012

காரைக்குடியில் நவீன மயானம்: எரிவாயுத் தகனமேடை சோதனை

காரைக்குடி, ஆக. 8: காரைக்குடி சந்தைப்பேட்டைப் பகுதியில் ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள நவீன மயானத்தின் எரிவாயுத் தகனமேடையில் புதன்கிழமை சடலம் வைத்து எரியூட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடி நகராட்சி 30-வது வார்டு சந்தைப் பேட்டைப் பகுதியில் எரிவாயுத் தகன மேடை அமைக்கும் பணி தொடங்கி, பணி நிறை வுற்று துவக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ, இதனை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகை யில் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அதற்காக முதலில் எரிவாயு தகன மேடை செயல் பாடு குறித்து சடலம் ஒன்று எரியூட்டி சோதனை நடத்தப்பட்டது.

இதில் காரைக்குடி நகர்மன்ற துணைத் தலைவர் சோ. மெய்யப்பன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மாரியப்பன், காரைக்குடி தொழில் வணிகக் கழகச் செயலாளர் சாமி. திராவிடமணி, அரிமா சங்க பிரமுகர் எஸ். கண்ணப்பன், 30-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராஜன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த எரிவாயுத் தகன மேடை விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதையடுத்து தனியார் அறக்கட்டளையினருக்கு ஒப்படைக்கும் ஆலோசனைக் கூட்டம் ஆக. 16-ம் தேதி நடைபெறுகிறது.

அதன்பின் நவீன மயானம் செயல்படும் விதம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

கூடலூர் நகராட்சி புதிய ஆணையாளர் பதவியேற்பு

Print PDF

தினமணி                        07.08.2012

கூடலூர் நகராட்சி புதிய ஆணையாளர் பதவியேற்பு

கம்பம்,ஆக. 6: கூடலூர் நகராட்சியில் புதிய ஆணையாளராக ராஜேந்திரன் திங்கட்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார்.

கூடலூர் நகராட்சியில் ஆணையாளராக  பணிபுரிந்த  கண்ணன்  கடந்த  3  மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து  ஓய்வு  பெற்றார்.  இதனால்,  நகராட்சி  ஆணையாளர்  பணி  காலியாக இருந்தது.

அந்த பொறுப்பை கூடுதலாக கம்பம் நகராட்சி பொறியாளர் மணிமாறன் கவனித்து வந்தார். இந்தநிலையில் நாகர்கோவில் மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் மாறுதலாகி திங்கட்கிழமை கூடலூர் நகராட்சி ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

இவருக்கு நகர்மன்ற தலைவர்ஆர்.அருண்குமார்  மற்றும்  கவுன்சிலர்கள்,  ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்

Print PDF

தினகரன்   07.08.2012

மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி,: திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில்  பொதுமக்கள் 26 பேர்  மனுக்களை   கொடுத்தனர்.  அதில்  ஆக்கிரமிப்பு  அகற்றம் செய்யவேண்டும்.  குடிநீர்  வழங்க  வேண்டும்,  சாக்கடை  கழிவுகள் அகற்றம் செய்ய வேண் டும் என்பது  உட்பட  பல்வேறு  கோரிக்கைகள்  வழியுறுத்தி  மனு  கொடுக்கப்பட்டது.  பொதுமக்கள் கொடு த்த மனுக்கள் மீது உடனடி  நடவடிக்கை  எடுக்க  வேண்டுமென அதிகாரிகளுக்கு  மேயர் ஜெயா உத்தரவிட் டார்.  மாநகர  கமிஷனர்  தண்டபாணி,  மாநகர  பொறியாளர்  ராஜாமுகமது, செயற்பொறியாளர்கள் சந்திரன், அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 256 of 841