Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மேட்டுப்பாளையத்தில் துப்புரவு பணியாளருக்கு பயிற்சி

Print PDF

தினகரன்            04.08.2012

மேட்டுப்பாளையத்தில் துப்புரவு பணியாளருக்கு பயிற்சி

மேட்டுப்பாளையம்,: தேசிய நகர்ப்புற சுகாதார கொள்கை 2008ன்படி தமிழகத்தில் மேட்டுப்பாளையம் உள்பட 9 நகராட்சி யில் நகர்ப்புற சுகாதார திட்டம் துங்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது, நகர் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, நகரில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இத்திட்டத்தின்படி தன்னார்வ தொண்டு நிறுவனமாக எக்ஸ்னோரா, மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து  மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் பணியாற்றும் 200 துப்புரவு பணியாளர் களுக்கு அவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நகராட்சி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் ஆணையாளர் இளங்கோவன் ,துணை த்தலை வர் ரமாசெல்வி, நகர்நல அலுவலர் டாக்டர் பிரதீப் வி.கிருஷ்ணகுமார், நகர்நல அலுவலர்கள் நல்லுசாமி, செந்தில், செல்வராஜ் கவுன்சிலர்கள் சுப்பிரமணி, மூர்த்தி ,சலிமூநீசா, திட்ட அலுவலர் விஜயானந்த், பயிற்சியாளர் வேலியப்பன் உள்பட பலர் கலந்து  கொண்டனர். குப்பைகளை தரம் பிரித்து அப்புறப் படுத்துவது, குப்பைகளை எப்படி கையாள்வது, என்பது குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

 

தெருவிளக்குகள் பணி விரைவில் துவங்கும்: அதிகாரி தகவல்

Print PDF

தினமலர்    04.08.2012

தெருவிளக்குகள் பணி விரைவில் துவங்கும்: அதிகாரி தகவல்

கீழக்கரை: கீழக்கரை  நகராட்சியில்  ஒருங்கிணைந்த நகர்ப்புற  வளர்ச்சி  திட்டத்தின்  கீழ்  ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தெரு விளக்கு அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது.

அரசு நிர்ணயித்த தொகையை விட 21.05 சதவீதம் குறைவாக, நெல்லை தனியார் நிறுவனத்தினர் டெண்டர் அளித்தனர்.இதை தொடர்ந்து பணி ஆணை வழங்கப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன், மின்சாதன பொருட்களை, நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

ஐ. எஸ். ஐ.  முத்திரை  இல்லாததால்,  கவுன்சிலர்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால்  பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.நகராட்சிகளின் மண்டல  நிர்வாக  இயக்குனர்  குபேந்திரன் கூறியதாவது:

அரசு  விதிகளுக்கு  மாறாக ஐ.எஸ்.ஐ.,  முத்திரை  இல்லாத,  மின்சாதன பொருட்கள்  கீழக்கரை நகராட்சிக்கு  கொண்டு  வரப்பட்டன.  தகவலறிந்ததும்  ஒப்பந்ததாரரை  பொருட்களை  திரும்ப எடுத்து  செல்லுமாறு  உத்தரவிட்டுள்ளேன்.டெண்டர்  ஆணை  ரத்து  செய்யப்படவில்லை.  அரசு விதிகள்படி  குறிப்பிட்ட   நிறுவன தயாரிப்புகளை கொண்டு,  ஏற்கனவே  வழங்கப்பட்ட நிறுவனத்தினரால் விரைவில் தெருவிளக்குகள் அமைக்கும் பணி துவங்கும், என்றார்.

 

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு கலெக்டர் வேண்டுகோள்

Print PDF

தினகரன்             03.08.2012

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு கலெக்டர் வேண்டுகோள்

ஈரோடு, : ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் 1969ன்படி பிரிவு 12ல் பிறப்பு,

இறப்பு பதிவு செய்தவுடன் கட்டணம் ஏதுமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ் ஒரு பிரதி மடடும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் பிறப்பு சான்றில்குழந்தைகளின் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏதேனும் ஒரு குழந்தையின் பிறப்பானது பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தையின்பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் தங்கள் பகுதியில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளருக்கு வாய்மொழியாகவோ, எழுத்துமூலமாகவோ குழந்தையின் பெயரை பதிவு செய்து சான்று பெறலாம்.

ஓராண்டிற்கு பிறகு கால தாமத கட்டணமாக 5 ரூபாய் செலுத்தி 15ஆண்டுகளுக்குள் பெயர் பதிவு செய்யலாம். நகராட்சி பகுதிகளில் ஆணையாளரிடமும், பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலரிடமும், பஞ்சாயத்துபகுதிகளில் கிராம நிர்வாக அலுவலரிடமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளரிடமும் பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த 15 ஆண்டு என்பது தமிழ்நாடு பிறப்பு, இறப்பு விதிகள் 2000 தொடக்க தேதிக்கு முன்னர் அதாவது 1.1.2000ம் தேதிக்கு முன்னர் நிகழ்ந்த பதிவுசெய்யாத பிறப்புகளுக்கு 1.1.2000ம் ஆண்டில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் பெயர் பதிவு செய்ய விதிகளில வழி வகுக்கப்பட்டுள்ளது.

31.12.2014ம்ஆண்டு வரை மட்டுமே 2000ம் ஆண்டிற்கு முன்னர் பதிவு செய்த பிறப்புகளுக்கு பெயர் பதிவு செய்யப்படும். 31.12.2014க்கு இன்னும் இரண்டரைஆண்டுகளே உள்ள நிலையில் பொதுமக்கள் பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் 1.1.2000ம் ஆண்டிற்கு பிறகு பதிவுசெய்த பிறப்புகளுக்கு பதிவு செய்த தேதியில் இருந்து 15 ஆண்டுகள் வரை மட்டுமே பெயர் பதிவு செய்ய முடியும். எனவே பிறப்பு சான்றிதழில் பெயர்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிறப்பு, இறப்பு பதிவு செய்வதிலோ, சான்று பெறுவதிலோ ஏதேனும் இடையூறுகள் இருந்தால் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலு வலர்,சுகாதாரபணிகள் துண இயக்குர் ஆகியோரை பொதுமக்கள் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Page 257 of 841