Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சி புதிய அலுவலகம் எதிரே பூங்கா அமைக்க முடிவு:ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்

Print PDF
தினமணி                   03.08.2012

நகராட்சி புதிய அலுவலகம் எதிரே பூங்கா அமைக்க முடிவு:ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்


பெரம்பலூர், ஆக. 2: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள நகராட்சி புதிய அலுவலகம் எதிரே பூங்கா அமைக்கப்படும் என்றார் நகர்மன்றத் தலைவர் சி.ரமேஷ்.பெரம்பலூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:

நகராட்சிக்குள்பட்ட 11-வது வார்டில் டாக்டர் குணகோமதி தெருவில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சிறு பாலமும், மழைநீர் கால்வாயும் அமைக்கப்பட உள்ளது. 20- வது வார்டில் உள்ள நூலகத்தில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் மின்வசதி மற்றும் டைல்ஸ் ஒட்டப்பட உள்ளது. 9 -வது வார்டில் உள்ள ஒüவையார் தெருவில், ரூ. 2 லட்சம் மதிப்பில் சிறுபாலமும், மழைநீர் கால்வாயும், ரூ. 4 லட்சம் மதிப்பில் மூன்று சாலையில் உள்ள கிழக்கு பகுதியில் புதியதாக பைப்லைன் விஸ்தரிப்பு செய்து, சின்டெக்ஸ் டேங்க் அமைத்து மின் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. தீரன் நகரில் ரூ. 4 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து, சின்டெக்ஸ் டேங்க் வைத்து மின் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. 15- வது வார்டில் ரூ. 2 லட்சம் செலவில் புதிய ஆழ்குழாய் அமைத்து மின் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட உள்ளது.

நகராட்சி புதிய அலுவலக கட்டடத்தில் காலியாக உள்ள பகுதியில் சிறிய பூங்காவும், ரூ. 4 லட்சம் மதிப்பிட்டில் புதிய பேருந்து நிலையத்தின் உள் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள மின் விளக்குகளில், பழுதானவைகள் சீரமைக்கப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. வார்டு 8, 10, 11 ஆகிய பகுதிகளில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் அமைத்து, மின் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட உள்ளது. ரூ. 7.50 லட்சம் மதிப்பில் 5 புகை மருந்து தெளிக்கும் இயந்திரம் வாங்கப்பட உள்ளது என்றார் அவர்.

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துக் கூறினர்.இதில், நகர்மன்ற துணைத்தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஆணையர் பி. குருசாமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

சுகாதாரப் பணியாளருக்குப் பதவி உயர்வு: பேரூராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி                   03.08.2012

சுகாதாரப் பணியாளருக்குப் பதவி உயர்வு: பேரூராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக. 2: சுகாதாரப் பணியாளருக்குப் பதவி உயர்வு வழங்குமாறு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இளையான்குடி பேரூராட்சியில் சுகாதாரப் பணியாளராகப் பணிபுரியும் எஸ்.சங்கர் தாக்கல் செய்த மனு விவரம்:

இளையான்குடி பேரூராட்சியில் 1988 செப்.1-ல் சுகாதாரப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். எனக்கு அடுத்த நிலையில் உள்ள சுகாதார மேற்பார்வையாளர் பணியிடம் 2001-ல் காலியானது.

அப்பணியிடத்துக்கான பணி மூப்பு இருந்தபோதும், நேரடி நியமனத்தில் வேறொருவர் நியமிக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்து 2002-ல் மேலும் ஒரு மேற்பார்வையாளர் காலிப்பணியிடம் ஏற்பட்டது.

இப்பணியிடத்துக்கு பதவி உயர்வில் நியமனம் செய்ய பரிசீலிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தேன், எனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் பணி நியமன தடைச் சட்டத்தைக் காரணம்கூறி எனக்குப் பதவி உயர்வில் சுகாதார மேற்பார்வையாளர் பணியிடத்தில் நியமிக்க மறுக்கப்பட்டது. இதற்கிடையே 2011-ல் மீண்டும் ஒரு காலிப்பணியிடம் உருவானதையடுத்து அப்பணியிடத்துக்கு எனது பெயரைப் பரிசீலிக்க உத்தவிடுமாறும், வேறு நபர்களை நியமிக்கத் தடை விதிக்குமாறும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதன்படி, ஜூலை 15-ல் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.

இந்நிலையில், தடை உத்தரவு பெறப்பட்ட தேதிக்கு முன்தேதியிட்டு மற்றொரு நபரை சுகாதார மேற்பார்வையாளராக பேரூராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது. இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன், பேரூராட்சி நிர்வாகத்தின் நியமன உத்தரவை ரத்து செய்ததோடு, மனுதாரருக்கு சுகாதார மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டார்.

 

சிவகாசி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

Print PDF

தினமணி                                 02.08.2012

சிவகாசி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

சிவகாசி, ஆக. 1: சிவகாசி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகாசி  நகர்மன்றக்  கூட்டம்,  தலைவர் வெ.க. கதிரவன்   தலைமையில்  செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றறது.

துணைத்தலைவர் கே.ஏ.ஏ. அசன்பத்ருதீன்முன்னிலை வகித்தார்.முதல்நிலை நகராட்சியாகஇருந்த சிவகாசி நகராட்சி 1998-ம் ஆண்டு தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது. 

நகராட்சியின்ஆண்டு வருமானம் ரூ. 10 கோடிக்கு மேல் இருந்தால், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திக் கொள்ளலாம்,  என அரசாணை உள்ளது.தற்போது, சிவகாசி நகராட்சிக்கு ஆண்டு வருமானம்  ரூ. 16.77 கோடியாகும். 

எனவே  சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை   பிறப்பிக்க வேண்டும்  என்ற தீர்மானம் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசுக்கு இதன் கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.நகராட்சிக்குள்பட்ட ப குதியில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத்    திட்டம்   2012-2013-படி, நகராட்சி வார்டுகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு  செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகராட்சிப் பொறியாளர் முருகன்,  சுகாதார அலுவலர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 02 August 2012 09:54
 


Page 258 of 841