Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மின் இணைப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமணி             01.02.2014

மின் இணைப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் தீர்மானம்

தொல்லியல் துறையின் தடையை நீக்கி மாமல்லபுரத்தில் மின் இணைப்பு வழங்க ஆணை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து  பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாமல்லபுரம் சிறப்புநிலைப் பேரூராட்சியில் மன்ற கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் எம்.கோதண்டபாணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் என்.எம். முருகன், கவின்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் 2010 தொல்லியில் சட்டவிதிப்படி மாமல்லபுரத்தில் மின் இணைப்பு வழங்க தொல்லியல் துறை தடை விதித்திருந்தது.

இதையடுத்து தொல்பொருள் துறை சட்டத்தில் ஆட்சேபனை இல்லாத விதியினைத் தளர்த்தி ஆய்வு செய்த முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்பட தமிழகம் முழுவதும்  தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ள பகுதிகளில் மின் இணைப்பு வழங்கலாம் என்று ஆணை பிறப்பித்தார். அதையடுத்து தற்போது மாமல்லபுரத்தில் கடந்த 4 ஆண்டகளாக நிறுத்தி வைக்கப்பட்ட மின் இணைப்பு, விண்ணப்பிக்கும் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த முதல்வருக்கு  பாராட்டு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மாமல்லபுரம் மக்களின் நலன் கருதி வரும் கோடைகாலத்தில்  குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைப்பது என்றும், 2 சிமென்ட் சாலை விரிவாக்கம் என ரூ.21 லட்சம் இப்பணிகளை செயல்படுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது கோவளம் சாலையில்  மீன் இறைச்சி, காய்கறி கடைகள், பல்பொருள் அங்காடி கடைகள் கட்டுவதற்கு ரூ.80 லட்சத்தில் பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம்: 25-ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி             01.02.2014

பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம்: 25-ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் பிறந்த நாளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சென்னை மாநகராட்சி வழங்கும் ரூ. 10 ஆயிரத்தை பெற பிப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாள் வரும் பிப். 24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு 66 வகையான முகாம்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.

இதில் முதல்வர் பிறந்த நாளில் பிறந்த மற்றும் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் பிப்ரவரி 24-ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைகளுக்கும், வரும் 24-ஆம் தேதி பிறக்கும் பெண் குழந்தைகளுக்கும், அவர்களுடைய பெயரில் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். இந்தப் பரிசுத் தொகையை பெறுவதற்கு உரிய பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் பிப். 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் (குடும்பநலம்) துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்             01.02.2014

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம்

திருக்காட்டுப்பள்ளி, : தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம் தலைவர் மங்கையற்கரசி தலைமையில் நேற்று நடந்தது.

துணைத் தலைவர் இளவரசி, செயல் அலுவலர் சாந்தகுமார் முன்னிலை வகித்தனர். திமுக உறுப்பினர்கள் திவ்யா, தனலெட்சுமி, மாரியப்பன், சரவணகுமார், சங்கர் அதி முக உறுப்பினர்கள் பிரபு, ராஜேஷ்கண்ணன், செல்வப்பிரியா, நல்லேந்திரன், நக்கீரன், பொன்னரும்பு, தன்ராஜ், முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண் டனர். கூட்ட பொருட்களை இளநிலை உதவியாளர் வைரக்கண்ணு வாசித்தார். கூட்டத்தில் குடமுருட்டி லயன் கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையின் தென்பகுதியில் தரை தளம் சிமெண்ட் பிளாக் அமைப்பது, பேரூராட்சி 15 வார்டுகளில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அமரர் ஊர்தி வாகனம் வாங்குவது, ஒன்பத்து வேலி தைக்கால் தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 


Page 27 of 841