Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோபி நகராட்சிப் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை: நகர்மன்றத் தலைவர்

Print PDF
தினமணி                30.07.2012

கோபி நகராட்சிப் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை: நகர்மன்றத் தலைவர்


கோபி, ஜூலை 29: கோபி நகராட்சி ஆண்கள் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி தெரிவித்தார்.

÷கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி தலைமை வகித்தார். ஆணையாளர் பா.ஜான்சன், நிர்வாக பொறியாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பேசியது:

கோபி நகராட்சிக்கு உள்பட்ட 24, 26, 28, 29, 30 ஆகிய 5 வார்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பையைச் சேகரிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் 30 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

÷தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் தொலைநோக்கியின் மூலம் வீடுகள் அளவெடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் முன்னோடியாக கோபிசெட்டிபாளையம், ராஜபாளையம் ஆகிய 2 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது தொலைநோக்கியின் மூலமாக அளவீடு செய்யப்படுகிறது. மற்றபடி வரிகள் எதுவும் உயர்த்தப்படாது.

÷கோபி நகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் திறக்கப்படுகின்றன. இதனால், ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

 இது குறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
 
÷தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
இதற்காக அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், கோபி நகராட்சி ஆண்கள் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

÷கூட்டத்தில், விவாதத்திற்கு வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் செல்வராஜ், சுகாதார அதிகாரி சக்திவேல் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
 

டவுன் பஞ்சாயத்தில் 97 பேருக்கு உதவி தொகை

Print PDF

தினமலர்                        30.07.2012

டவுன் பஞ்சாயத்தில் 97 பேருக்கு உதவி தொகை

சென்னிமலை: சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் முதியவர்கள், முதியோர் உதவி தொகை கோரி பலர் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பங்கள் ஆய்வு செய்து, தகுதியான, 97 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை மாதம் ஆயிரம் வீதம் வழங்க உத்தரவிடப்பட்டது.டவுன் பஞ்சாயத்தில் நடந்த விழாவில், தலைவர் ஜம்பு என்ற சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தனபாக்கியம் வரவேற்றார்.முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ் வழங்கினார்.மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் மணிமேகலை, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கோபாகிருஷ்ணன், யூனியன் தலைவர் கருப்புசாமி, துணை தலைவர் துரைசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் சேலையப்பன், டவுன் பஞ்சாயத்து துணை தலைவர் தெய்வசிகாமணி, செயல் அலுவலர் தெய்வசிகாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

பேரூராட்சி ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்

Print PDF

தினமலர்                       30.07.2012

பேரூராட்சி ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்

தர்மபுரி: தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் நடந்தது.சதீஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட துணை தலைவர் சுந்தர்ராஜன், பேரூராட்சி ஊழியர் சங்க விழுப்புரம் மாவட்ட தலைவர் தங்கவேல் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.இதையடுத்து, தர்மபுரி மாவட்ட பேரூராட்சி ஊழியர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், மாவட்ட தலைவராக சதீஸ், செயலாளராக முருகேசன், பொருளாளராக ராஜ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், மாநில செயற்குழு உறுப்பினராக ஸ்ரீதர் மற்றும் மூன்று துணை தலைவர்கள், மூன்று இணை செயலாளர்கள், 10 மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

"மாநில மற்றும் மாவட்ட அளவில் முடங்கியுள்ள பதவி உயர்வு பணி மூப்பை பட்டியலை விரைந்து முடிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் ஊழியர்களை அலுவலகங்களில் பணி செய்ய நிர்பந்திக்கும் கலாச்சாரத்தை கைவிட வேண்டும். ஒரே பணியில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தால் அதை தகுதியாக கொண்டு பதவி உயர்வு மற்றும் அதற்கான ஊதியம் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 


Page 261 of 841