Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மண்டல குறை தீர்க்கும் கூட்டம் : மாநகராட்சியில் அறிமுகம்

Print PDF

தினமலர்      22.12.2011

மண்டல குறை தீர்க்கும் கூட்டம் : மாநகராட்சியில் அறிமுகம்

மதுரை :மதுரை மாநகராட்சியில் முதன்முறையாக, மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.

மாநகராட்சியில் மண்டலம் குறைதீர்க்கும் கூட்டம், மண்டலத்தலைவர்கள் தலைமையில் நடப்பது வழக்கம். குறைகளை நேரடியாக தீர்க்க, மேயர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மண்டலம் 2 புதூரில் முதல் மண்டல குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது.

கமிஷனர் நடராஜன் தலைமை வகித்தார். மேயர் ராஜன்செல்லப்பா, துணை மேயர் கோபாலகிருஷ்ணன் மனுக்களை பெற்றனர். போஸ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மண்டலத்தலைவர் ஜெயவேல், கவுன்சிலர்கள் அபுதாஹிர்,மாரி, சாலினி தேவி பேசினர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நகர் பொறியாளர் மதுரம், முதன்மை நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், உதவி அலுவலர் பிரியா, நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் பங்கேற்றனர்.

 

 

 

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம் : மேயரிடம் 30 பேர் புகார் மனு வழங்கல்

Print PDF

தினமலர்           20.12.2011

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம் : மேயரிடம் 30 பேர் புகார் மனு வழங்கல்

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து 30 பேர் மேயர் ஜெயாவிடம் மனு அளித்தனர். திருச்சி மாநகராட்சி மேயராக ஜெயா பொறுப்பேற்றது முதல் வாரந்தோறும் திங்கட்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த நான்கு வாரங்கள் நடந்த குறைதீர் கூட்டத்தில் 130க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை, மேயரின் உத்தரவுப்படி கடிதம் மூலம் புகார்தாரர்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமையான நேற்று காலையும் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கிய குறைதீர் கூட்டத்தில் மேயர் ஜெயா, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சந்திரன், நகர்நல அலுவலர் சேரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

நேற்றைய குறைதீர் கூட்டத்தில் குப்பை, தேங்கிக்கிடக்கும் சாக்கடையை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல், சாலை வசதி, குடிநீர் வசதி, ஆக்ரமிப்புகளை அகற்றுதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 பேர் மனு அளித்தனர். சாக்கடை அடைப்பை நீக்குதல், தெரு விளக்குகளை மாற்றுதல் உள்ளிட்ட சிறிய அளவிலான பிரச்னைகள் குறித்து புகார் அளித்தவர்களுக்கு இரண்டு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெயா உறுதி அளித்தார்.

முன்னதாக திருச்சி மாநகராட்சி வளாகத்திலிருந்து, எக்ஸ்னோரா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திடக்கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மேயர் ஜெயா கொடியசைத்து துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணைமேயர் ஆசிக்மீரா, பொன்மலை கோட்டத்தலைவர் மனோகரன், கவுன்சிலர் ஹேமா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

மாநகராட்சி வளர்ச்சிப்பணி : திருச்சி மேயர் ஆலோசனை

Print PDF

தினமலர்        20.12.2011

மாநகராட்சி வளர்ச்சிப்பணி : திருச்சி மேயர் ஆலோசனை

திருச்சி: திருச்சி மாநகரில் வளர்ச்சிப்பணிகள் குறித்து கோட்டத்தலைவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயர் ஜெயா ஆலோசனை நடத்தினார். அப்போது, குடிநீர், குப்பை அகற்றுதல் தெருவிளக்கு ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் மேயர் ஜெயா, துணை மேயர் ஆசிக்மீரா, கோட்டத் தலைவர்கள் லதா, மனோகரன், சீனிவாசன், செயற்பொறியாளர்கள் சந்திரன், அருணாச்சலம், நகர்நல அலுவலர் சேரன், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் ராஜம்மா, பாஸ்கரன், தனபாலன் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், புதிதாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் புதிய பணிகள் துவங்கும் முன், சம்மந்தப்பட்ட பகுதியின் கவுன்சிலர், கோட்டத்தலைவரின் ஆலோசனையை கேட்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா அறிவுறுத்தினார். அதேபோல், குடிநீர், குப்பை அகற்றுதல், தெருவிளக்கு சீரமைத்தல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளை மேயர் கேட்டுக் கொண்டார்.

 


Page 264 of 841