Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி கமிஷனர் தகவல் எரிவாயு தகனமேடையில் "1003' சடலங்கள் எரிப்பு

Print PDF

தினமலர்             30.06.2011

மாநகராட்சி கமிஷனர் தகவல் எரிவாயு தகனமேடையில் "1003' சடலங்கள் எரிப்பு

சேலம்: ""சேலம் மாநகராட்சி நவீன எரிவாயு தகனமேடையில், 1,003 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி கமிஷனர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம் மாநகராட்சிக்க சொந்தமான காக்காயன் சுடுகாடு வளாகத்தில், இரண்டு கோடியே, 34 லட்சத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 8 ம் தேதி தகனமேடை திறக்கப்பட்டது. இதை "அமைதி அறக்கட்டளை' என்ற தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இதுவரை(ஜூன் 28) வரை தகன மேடையில் 1,003 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

நவீன எரிவாயு தகனமேடை காலை, 7 மணி முதல் இரவு, 7 மணி வரை இயக்கப்படுகிறது. பொதுமக்கள் முன்பதிவு செய்யவும், இதர விபரங்கள் அறியவும் 241 6663 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். வளாகத்தில், இரண்டு தகன மேடை, ஒரு அஞ்சலி மண்டபம், முடி எடுக்கும் இடம், கழிப்பிட வசதி, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. சுற்று சூழல் பதுகாப்புக்காக உலக தரசான்று பெறப்பட்டுள்ளது. சடலத்தை எரிக்க விரும்புவோர் தக்க மருத்துவ சான்றிதழை பெற்று தகன மேடை அலுவலக வளாகத்தில் கேட்கும், இதர சான்றிதழ்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு முறை எரிவாயு தகனமேடை உபயோகத்துக்கு நன்கொடையாக, 100 ரூபாயும், எரியூட்ட பொருள் நான்கொடை, 800 ரூபாய், அமரர் ஊர்தி வாடகை, 600 ரூபாய் ஆக மொத்தம், 1, 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எரியூட்டப்பட்ட பிறகு, தகனமேடை அலுவலகத்தில் வழங்கப்படும் 4() சான்றிதழை பெற்று மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளாலம். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது எரிவாயுதகனமேடையாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

 

மாநகராட்சி ஊழியரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் அமலாகிறது பழைய பணி விதிகள்

Print PDF

தினமலர்                    29.06.2011

மாநகராட்சி ஊழியரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் அமலாகிறது பழைய பணி விதிகள்

மாநகராட்சியின் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பணி விதிகள், மீண்டும் அமலுக்கு வருகிறது. இதற்கான தீர்மானம் இன்று நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது. சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடக்கிறது. இக்கூட்டத்தில் ஊழியர்களுக்கான விதிமுறைகள், கான்கிரீட் வீடு திட்ட பயனாளி தேர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மாநகராட்சி ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலுக்கு புதிய விதிகள் அமல் செய்யப்பட்டன. இதன்படி, ஒரு துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர், பதவி உயர்வு பெற்று வேறு துறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு, ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

வருவாய் பிரிவில் பணியாற்றியவரை, சுகாதாரத்துறைக்கு மாற்றுவதால் பெரும் குழப்பங்கள் ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று, ஏற்கனவே இருந்த பணி விதிகளை அமல் செய்ய முடிவு செய்து, அதற்கான தீர்மானம், இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது. சென்னை மாநகராட்சி உள்ள ரிப்பன் பில்டிங் மற்றும் விக்டோரியா ஹால் ஆகியவற்றின் நுழைவாயிலில், பூமிக்கடியில் மெட்ரோ பாதை செல்வதால், அங்குள்ள ரிப்பன் பிரபு, சென்னை முன்னாள் மேயர்கள் சத்தியமூர்த்தி, தியாகராயர் ஆகியோர் சிலைகளை அப்புறப்படுத்தி, மீண்டும் அதே இடத்தில் அமைக்கவும் இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்ற, ஜவகர்லால் நேரு நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், தேர்வு செய்யப்பட்டு பங்குத் தொகையை செலுத்த முடியாத பயனாளிகளுக்கு பதிலாக, புதிய பயனாளிகளை தேர்வு செய்தல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் மாநகராட்சி கூட்டம் முடிவுகளை மேற்கொள்கிறது.

Last Updated on Wednesday, 29 June 2011 07:20
 

வாக்காளர் அடையாள அட்டைகள் மாநகராட்சியில் முடக்கம்

Print PDF

தினமலர்                   29.07.2011

வாக்காளர் அடையாள அட்டைகள் மாநகராட்சியில் முடக்கம்

சேலம் : தமிழக தேர்தல் ஆணையத்திடம் இருந்து, "ஹாலோகிராம்' முத்திரை வர, தாமதம் ஏற்படுவதால், சேலம் மாநகராட்சியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், வழங்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும், ஒரு ஆண்டாக, புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய வாக்காளர்கள், துணைப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே, வழங்கப்பட்ட பெரும்பாலான வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், வயது, பாலினம் மற்றும் முகவரி ஆகியவற்றில் குளறுபடிகள் காணப்பட்டது.

எனவே, பிழை திருத்தம் செய்வதற்கான, 001சி படிவம் விநியோகம் செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சியில், 15 ரூபாய் கட்டணம் செலுத்தி, பிழையை திருத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சேலம் மாநகராட்சியில் ஆயிரக்கணக்கானோர், 001சி படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். ஆனால், சட்டசபை தேர்தல் நெருங்கியதால், தேர்தல் பிரிவு அதிகாரிகளின் கவனம் தேர்தலில் திரும்பியது. எனவே, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், லைசென்ஸ் உள்ளிட்ட தேர்தல் கமிஷன் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்த ஆவணங்களை காட்டி ஓட்டு போட்டனர். சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன், வாக்காளர் அட்டையில் பிழை திருத்தம் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டது. சேலம் மாநகராட்சியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில், குளறுபடிகள் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அட்டையில் ஒட்டப்படும், "ஹாலோகிராம்' முத்திரை இல்லாததால், வாக்காளர்களுக்கு வழங்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கேட்டு தினமும், மாநகராட்சிக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தமிழக தேர்தல் ஆணையத்தின் மூலம், சேலம் மாநகராட்சிக்கு ஹாலோகிராம் முத்திரை அனுப்பி வைக்கப்படவில்லை. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்குள் வாக்காளர் அடையாள அட்டையை பெற வேண்டும் என்று வாக்காளர்கள் கருதுகின்றனர். மீண்டும் புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியானால், உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் பணிச்சுமை அதிகரித்து விடும். வாக்காளர்களுக்கு துரிதமாக அட்டை வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Last Updated on Friday, 01 July 2011 06:19
 


Page 266 of 841