Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பட்டுக்கோட்டையில் ரூ. கோடியில் சாலைப்பணி நகராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன்       28.01.2011

பட்டுக்கோட்டையில் ரூ. 2 கோடியில் சாலைப்பணி நகராட்சி கூட்டத்தில் முடிவு

பட்டுக்கோட்டை ஜன.28:

பட்டுக்கோட்டையில் ரூ. 2 கோடியில் சாலைப்பணிகள் மேற்கொள்வதென நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை நகராட்சி அவசர கூட்டம் தலைவர் பிரியா இளங்கோ தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையர் (பொ) ராமலிங்கம், துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு; பானுமதி (தி.மு.க):

இலவச கியாஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை சிலிண்டர் வழங்க வேண்டும். ஆனால் 3 மாதமாகியும் கிடைக்கவில்லை என்றார்.

தலைவர் : இதுபற்றி சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

சாமிநாதன் (காங்): பெரிய கடைத்தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் சாலை அமைக்க வேண்டும். மார்க்கெட் ரோட்டை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்றார். ஸ்ரீதர் (தி.மு.க) : ஏழை, எளிய மக்களிடம் நெருக்கடி கொடுத்து வரி வசூலிக்கிறார்கள். ஆனால் வசதி படைத்தவர்கள் செலுத்தாமல் இருந்தாலும் அவர்களிடம் வசூல் செய்யப்போவதில்லை என்றார்.

சீத்தாலட்சுமி (அ.தி.மு.க) : 1வது வார்டில் புதிய வீடுகளுக்கு வரி விதிக்கப்படாததால் மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறமுடியவில்லை.எனவே வரி விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

ஜோதிமணி (அ.தி.மு.க) : எனது வார்டில் கழிவுநீர் வடிகால் கட்டவேண்டும் என்றார்.

சீனிஅண்ணாதுரை (தி.மு.க) : பட்டுக்கோட்டையில் மொழிப்போர்தியாகி அழகிரிசாமிக்கு மணிமண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர், துணைமுதல்வர், முயற்சிகள் மேற்கொண்ட மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். செல்லநாகராஜன் (அ.தி.மு.க) : போக்குவரத்து நிறைந்த சாலைகளை தடுத்து பொதுக்கூட்டங்கள் நடத்துவதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அண்ணா அரங்கில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நாடிமுத்து (காங்) : அறந்தாங்கி சாலையில் டிரான்ஸ்பார்மருக்கு அடியில் தண்ணீர் ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நகராட்சி துணைத்தலைவர் கண்ணன் : திருமணமண்டபம், ஹோட்டல்களில் எச்சில் இலைகள் கொட்டுவதற்கு நகராட்சி வசதி செய்து கொடுக்க வேண்டும். நகராட்சி காந்திபூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது. இதேபோல் கவுன்சிலர்கள் வீரையன், கைலாஷ்குமார், கோவி.ரவி ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் இயற்கை இடர்பாடு வடகிழக்கு பருவமழை நிரந்தர நிவாரண நிதியின் கீழ் நகரில் ரூ.2 கோடியில் மெண்ட் சாலை, தார்ச்சாலை அமைப்பது. மேலும் நகராட்சி பொது நிதியிலிருந்து 80 லட்சம் செலவில் மழைநீர் வடிகால், அங்கன்வாடி, சுடுகாட்டு கொட்டகை, தெருவிளக்கு, சிமெண்ட் சாலை, தார்ச்சாலை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

சிதம்பரத்துக்கு மேயர் கடிதம் நகராட்சி கவுன்சிலர்களுக்கு ம்பளம் வழங்க வேண்டும்

Print PDF

தினகரன்      27.01.2011

சிதம்பரத்துக்கு மேயர் கடிதம் நகராட்சி கவுன்சிலர்களுக்கு ம்பளம் வழங்க வேண்டும்

புதுடெல்லி, ஜன.27;

டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்று கூறி மத்திய உள்துறை ப.சிதம்பரத்தக்கு மேயர் பிரிதிவிராஜ் சகானி கடிதம் எழுதியுள்ளார்.

இது பற்றி அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்குவது போல் தங்களுக்கு மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்று டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். மும்பை, அகமதாபாத் மாநராட்சிகளில் கவுன்சிலர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதுபோல், டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். அத்துடன் கூட்டத்தில் கலந்து கொள்வ தற்கு வழங்கபடும் படியை ரூ.300 லிருந்து ரூ.1000மாக உயர்த்த வேண்டும். மும்பை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும், அகமதாபாத் மாநகராட்சியில் மாதம் ரூ.3,ஆயிரமும் கவுன்சிலர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் எம்.எல்.ஏ.க்களுக்கு சிகிச்சை பெற சலுகை அளிக்கப்படுகிறது. அதேபோல், கவுன்சிலர்களுக்கும் வழங்க வேண்டும். அத்துடன் கவுன்சிலர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டமும் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் மேயர் சகானி கூறியுள்ளார்.
 
சகானி
 

மாநகராட்சியில் குடியரசு தினவிழா மேயர் தேசியகொடி ஏற்றினார்

Print PDF

தினகரன்        27.01.2011

மாநகராட்சியில் குடியரசு தினவிழா மேயர் தேசியகொடி ஏற்றினார்

திருச்சி, ஜன.27:

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மேயர் சுஜாதா தேசியக்கொடியேற்றி, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தினவிழா நடந்தது. கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். மேயர் சுஜாதா தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில், 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணியாற்றிய 5 பேருக்கு பாராட்டு சான்றிதழ், ரூ.500க்கான கிஷான் விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டது.

அதேபோல், விபத்தில்லாமல் 20 ஆண்டுகள் வாகனம் ஓட்டிய 2 டிரைவர்களை பாராட்டி சான்றிதழும், தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

பின்னர் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள காந்தி அஸ்திக்கு மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, காந்தி சந்தையிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் அங்கு மேயர் சுஜாதா தேசியக்கொடி ஏற்றினார். இவ்விழாவில் மண்டல குழு தலைவர்கள், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நகர பொறியாளர் ராஜாமுகமது வரவேற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

 


Page 269 of 841