Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம்

Print PDF

தினகரன்             01.02.2014

கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம்

மஞ்சூர், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது.நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜெயாசந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் போஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மணிகண்டன் வரவேற்றார். முன்னதாக பேரூராட்சியின் வரவு, செலவினங்கள் மற்றும் பிறப்பு, இறப்பு விகிதங்கள் சரிபார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரும்பாலான உறுப்பினர்களும் தங்களது வார்டுகளில் தடையற்ற குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ளவும், தெருவிளக்குகள், தடுப்புசுவர்கள், நடைபாதை, சாலை வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தி பேசினர். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கவுன்சிலர் அர்ஜூணன் நன்றி கூறினார்.

 

மேலூர் நகராட்சியில் மின் கணக்கீட்டை எளிதாக்க ஏபிடிஆர் திட்டம் துவக்கம்

Print PDF

தினகரன்             01.02.2014

மேலூர் நகராட்சியில் மின் கணக்கீட்டை எளிதாக்க ஏபிடிஆர் திட்டம் துவக்கம்

மேலூர், :  மேலூர் நகராட்சியில் மின் கணக்கீட்டை எளிதாக்கும் வகையிலும், பழுது உள்ளிட்ட குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையிலும் ஏபிடிஆர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. நகராட்சி மின் இணைப்பின் எல்கை கிழக்கு அரசு கலைக் கல்லூரி, மேற்கு  ஆறுகண் பாலம், தெற்கு மில்கேட், வடக்கு நொண்டிக்கோவில்பட்டி வரை விரிந்துள்ளது. மின் உபயோகத்திற்கு பல டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின் இணைப்புகள் கொடுக் கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் மின் உபயோகிப்பாளர் வீடுகளுக்கு சென்று கணக்கொடுத்து அதன் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதில் காலதாமதம் ஏற்படுவதுடன் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஏபிடிஆர் என்ற புதிய முறை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த முறையில், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒவ்வொரு தெருவிலும் 9.14 அடி உயரம் உள்ள கம்பம் நடப்படுகிறது. அதில் சிறிய ரக டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு மின் வாரிய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். அந்த தெருவில் உள்ள மின் இணைப்புகள அனைத்தும் அந்த சிறிய டிரான்ஸ்பார்மரில் இணைக்கப்படும். உபயோகிப்பாளர் மின் அளவை அவ்வப்போது மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ‘‘மின் கணக்கீட்டாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று  மின் அளவை கணக்கிட்டு வந்தனர். தற்போது நடைமுறைப்படுத்த உள்ள புதிய முறையில் அலுவலகத்தில் இருந்து கொண்டே மின் உபயோகத்தை கணக்கிட முடியும். மேலும், மின் கட்டணம் குறித்து உபயோகிப்பாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மின் சப்ளையில் பழுது ஏற்பட்டால் எந்த மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.

தற்போது அலுவலகத்தில் இருந்தவாறு கம்ப்யூட்டர் மூலம் எந்த இடத்தில் என்ன பழுது ஏற்பட்டுள்ளது என்பதை எளிதாக கண்டறிந்து சரி செய்ய முடியும். இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றனர்.

 

ஓசூரில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை

Print PDF

தினத்தந்தி                30.01.2014

ஓசூரில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை

ஓசூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமு, கமிஷனர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 200 பேருக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் தணிகாசலம், கவுன்சிலர் நாராயணரெட்டி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 28 of 841