Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மின் மயானம் பராமரிப்பு பணி "ஈஷா'விடம் ஒப்படைக்க ஒப்புதல்

Print PDF

தினமலர்      11.01.2011

மின் மயானம் பராமரிப்பு பணி "ஈஷா'விடம் ஒப்படைக்க ஒப்புதல்

கோவை : கோவை மாநகராட்சி சார்பில் நஞ்சுண்டாபுரத்தில் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மின் மற்றும் எரிவாயு மயானத்தை பராமரிக்கும் பொறுப்பை "ஈஷா'பவுண்டேஷன் நிறுவனத்துக்கு வழங்க மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.கோவை மாநகராட்சி சார்பில் பாப்பநாயக்கன்பாளையம், சொக்கம்புதூர், ஆத்துப்பாலம் ஆகிய பகுதிகளில் மின் மற்றும் எரிவாயு மயானம் இயங்கி வருகிறது. இவற்றை தனியார் அறக்கட்டளையினர் பராமரித்து வருகின்றனர். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மின் மயானம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறதென்றும், மற்ற இரு மயானங்களும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் புகார் கூறி வருகின்றனர். இச்சூழலில் புதிதாக நஞ்சுண்டாபுரத்தில் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மின் மற்றும் எரிவாயு மயானத்தை வெள்ளிங்கிரி மலையடிவாரம் பூண்டிக்கு அருகே அமைந்துள்ள ஈஷா பவுண்டேஷன் அமைப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளவதற்கு அனுமதிப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எந்த கவுன்சிலரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆதரவு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினர். இதையடுத்து ஈஷா பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள, நகராட்சி நிர்வாக இயக்குனரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தின் அடிப்படையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டபின், ஈஷா அறக்கட்டளை நிறுவனம் மயானத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

 

 

புழல் பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்

Print PDF

தினகரன்       10.01.2011

புழல் பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்

புழல், ஜன. 10:

புழல் பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் நவநீதகுமார், கவுன்சிலர்கள் அறிவழகன், ராணி, இளங்கோ, சீனு நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, கன்னடபாளையம், புனித அந்தோணியார் நகர், அண்ணா நினைவு நகர், சிதம்பரம் நகர், சக்திவேல் நகர், புழல் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் தொட்டிகளில் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது, சாலையில் குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை போடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

புழல் தமிழ்ச்சங்க தலைவர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் வக்கீல் முருகேசன், கிருபாகரன், மங்கையர்க்கரசி, தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

துப்புரவு பணியாளர்கள் மேஸ்திரி தம்பிதுரை நன்றி கூறினார்.

 

சாலை சீரமைப்பு பணி முதன்மை செயலாளர் நள்ளிரவில் நேரில் ஆய்வு

Print PDF

தினகரன்       07.01.2011

சாலை சீரமைப்பு பணி முதன்மை செயலாளர் நள்ளிரவில் நேரில் ஆய்வு

சென்னை, ஜன.7:

சிறப்பு சாலை திட்டத்தின்படி, மழையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அரசு ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 146 கி.மீ. நீளமுள்ள சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் ரூ. 20 கோடியில் 100 கி.மீ. நீள உட்புறச்சாலைகளுக்கான பணிகளும் நடக்கிறது.

இந்த பணிகளை தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் அசோக் வர்தன் ஷெட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நேரில் ஆய்வு செய்தார்.

எருக்கஞ்சேரி எத்திராஜ் சாமி சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை உள்ளிட்ட சாலை பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் ருக்மணி லட்சுமிபதி சாலை பணியையும், டாக்டர் முத்துலட்சுமி சாலையில் சாலை அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி ஆணையர் முனைவர் கார்த்திகேயன், துணை ஆணையர் (பணிகள்) டாக்டர் தரேஸ் அகமது, தலைமைப்பொறியாளர் முருகேசன், மேற்பார்வைப் பொறியாளர் ராமமூ£ர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 271 of 841