Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் போட்டியின்றித் தேர்வு

Print PDF
தினமணி      04.01.2011

காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் போட்டியின்றித் தேர்வு

வேலூர், ஜன. 3: காவேரிப்பாக்கம் பேரூராட்சி, 5-வது வார்டு உறுப்பினராக திமுக வேட்பாளர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

 வேலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 1 பேரூராட்சி வார்டு உறுப்பினர், 6 ஊராட்சித் தலைவர்கள், 28 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான இடைத் தேர்தல் இம்மாதம் 10-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

  இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 22-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை நடைபெற்றது. 30-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற கடைசி நாளாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

மனு தாக்கல் இல்லை:

  இவற்றில், மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சி 4,5,6-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், திமிரி ஒன்றியம், செய்யாத்துவண்ணம் ஊராட்சிக்கும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வார்டு உறுப்பினர் பதவிக்கான காலியிடங்களில் 8 இடங்களுக்கு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

தேர்தல்:

 காவேரிப்பாக்கம் 5-வது வார்டுக்கு திமுகவை சேர்ந்த எம். சரளா மட்டுமே மனு தாக்கல் செய்திருந்ததால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 புங்கம்பட்டுநாடு, சாத்துப்பாளையம், விண்ணம்பள்ளி, சேக்கனூர், பல்லேரி ஆகிய 5 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 32 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.  20 ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு  34 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

  புங்கம்பட்டுநாடு ஊராட்சித் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்த 8 பேரில் 7 பேர் திங்கள்கிழமை தங்கள் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டதால், ஊராட்சித் தலைவராக அ. விஜயா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  சாத்துப்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 6 பேரில் 2 பேர் மனுவை திரும்பப் பெற்றதால், 4 பேர் களத்தில் உள்ளனர்.

  விண்ணம்பள்ளி ஊராட்சித் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்த 9 பேரில் 3 பேர் மனுவை திரும்பப் பெற்றதால், 6 பேர் களத்தில் உள்ளனர்.  சேக்கனூர், பல்லேரி ஊராட்சியில் தலா ஒருவர் தங்களது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இப்போது சேக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 3 பேரும், பல்லேரி ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4 பேரும் களத்தில் உள்ளனர்.

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்: ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்தவர்களில் 7 பேர் தங்கள் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து 15 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5 இடங்களுக்கு நடைபெறும் போட்டியில் 12 பேர் களத்தில் உள்ளனர்.  
 

மாநகராட்சி பூங்காக்களில் யோகா பயிற்சி

Print PDF

தினமலர்      04.01.2011

மாநகராட்சி பூங்காக்களில் யோகா பயிற்சி

சென்னை : "பொங்கல் பண்டிகைக்கு பின், மாநகராட்சி பூங்காக்களில், பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.போக்குவரத்து நெரிசல் மிக்க ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காட்டுதாங்கல் பாலம் அருகில், 80 லட்ச ரூபாய் செலவில், அகலப்படுத்தி, மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் சுப்ரமணியன் ஆகியோர் இப்பகுதியை நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது மேயர் சுப்ரமணியன் கூறும் போது, "சென்னையில், பனகல் பூங்கா, டவர் பூங்கா, நடேசன் பூங்கா, நேரு பூங்கா, மைலேடிஸ் பூங்கா போன்று, 22 பூங்காக்களில் யோகா மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களில், பொங்கல் பண்டிகை முடிந்த பின், பகுதி நேர யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

 

மாநகராட்சியின் 93-வது வார்டு உறுப்பினராக எஸ். அருண்மொழி போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி      04.01.2011

மாநகராட்சியின் 93-வது வார்டு உறுப்பினராக எஸ். அருண்மொழி போட்டியின்றித் தேர்வு

சென்னை, ஜன. 3: சென்னை மாநகராட்சியின் 93-வது வார்டு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எஸ்.அருண்மொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 சென்னை மாநகராட்சியின் 93-வது வார்டு உறுப்பினர் சேரன் மறைவைத் தொடர்ந்து, உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

 கடந்த மாதம் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் எஸ்.அருண்மொழி வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

 இதைத்தொடர்ந்து, மாநகராட்சியின் 93-வது வார்டுக்கான உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையாளருமான தா. கார்த்திகேயன் அறிவித்தார்.

 இதையடுத்து, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் சி.விஜயராஜ்குமார் முன்னிலையில், எஸ்.அருண்மொழிக்கு வேட்பாளருக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்.

 மண்டலக்குழுத் தலைவர் எம். தனசேகரன் (எ) காமராஜ், வார்டு உறுப்பினர்கள் ஆர்.துரை, எம்.லலிதா, பா.தீபா ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 273 of 841