Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் திருவொற்றியூர் நகராட்சி

Print PDF
தினகரன்       29.12.2010

அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் திருவொற்றியூர் நகராட்சி



திருவொற்றியூர்

நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. நகராட்சியின் தலைவராக உள்ள ஆர்.ஜெயராமன், துணைதலைவராக உள்ள வி.ராமநாதன் ஆகியோர் கவுன்சிலர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

நகராட்சியின் ஆணையர் எஸ்.கலைச்செல்வன், பொறியாளர் கே.முருகேசன் ஆகியோர் நகராட்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திவருகின்றனர்.

இந்த நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கனவான பாதாள சாக்கடை திட்டம் ரூ. 88 கோடியில் நடைபெற்று வருகிறது. தடையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ. 88 கோடியில் குடிநீர் திட்ட பணியும் முழு வீசுசில் நடைபெறுகிறது.

ரூ. 30 லட்சம் செலவில் சிறுவர் பூங்காவுடன் கூடிய நவீன நீச்சல் குளம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ. 1.04 லட்சத்தில் அமரர் ஊர்தியுடன் கூடிய நவீன எரியூட்டு தகன மேடை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.

ரூ. 20 லட்சம் செலவில் இறைச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

சட்ட மன்ற உறுப்பினர் நிதியின் மூலம் சாலை, வகுப்பறை, அழகிய பூங்கா போன்ற பணிகள் ரூ. 90.33 லட்சத்திலும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ரூ. 15 லட்சம் செலவில் திட்ட பணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம்ன் ரூ. 105.48 லட்சம் செலவில் மக்களின் அடிப்படை வசதிக்கான பணிகள் நடைபெற்றுள்ளன. சாலை வசதி, குடிநீர், மழைநீர் கால்வாய், பள்ளி கட்டிடம் என எண்ணற்ற பணிகளை திருவொற்றியூர் நகராட்சி செய்து வருகிறது.

ரூ. 5 கோடிக்கு மகப்பேறு நிதியும் வழங்கப்பட்டுள்ளது. தெருவிளக்கு, உயர் கோபுர விளக்கு, நகராட்சி மருத்துவமனை சீரமைப்பு, போன்ற பணிகளில் திருவொற்றியூர் நகராட்சி சிறந்து விளங்குகிறது.

தற்போது மழைகாலத்தில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க ரூ. 4 கோடி செலவில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் திட்டத்தை திருவொற்றியூர் நகராட்சி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

நகராட்சி தலைவர் ஜெயராமன் கூறுகையில், ‘மக்களின் தேவைகளை கண்டறித்து அதை முழுமையாக செய்து முடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பல புதிய திட்டங்ளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். மேலும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கவும் திட்ட மிட்டுள்ளோம்.

திருவொற்றியூரில் அரசு கல்லூரி தேவை என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கனவாகும். அதை நிறை வேற்றி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளளோம்’ என்றார்.
 

உள்ளாட்சி இடைத்தேர்தல் : வேட்பு மனு தாக்கல் இன்று கடைசிநாள்

Print PDF

தினகரன்     29.12.2010

உள்ளாட்சி இடைத்தேர்தல் : வேட்பு மனு தாக்கல் இன்று கடைசிநாள்

சென்னை, டிச. 29:

மதுரை மாநகராட்சி வார்டு 45, சென்னை மாநகராட்சி வார்டு 93, ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 5 உள்பட தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 523 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களுக்கான தேர்தல் ஜனவரி 10ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக கடந்த 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு வார்டிலும் சுயேட்சைகள் அதிக அளவில் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர்.

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், அதிகமானோர் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேட்புமனுக்கள் அனைத்தும் நாளை பரிசீலனை செய்யப்படுகின்றன. ஜனவரி 10ம் தேதி வாக்குபதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் 12ம் தேதி எண்ணப்பட்டு 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். குறிப்பாக, சென்னை, மதுரை வார்டுகளுக்கு மட்டும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரியும், ஈரோடு மாநகராட்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவரையும் தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. 
 

சிக்குன் குன்யா விழிப்புணர்வு கூட்டம்

Print PDF

தினகரன்                  27.12.2010

சிக்குன் குன்யா விழிப்புணர்வு கூட்டம்

ஊட்டி, டிச. 27:

ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர் மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி சுகாதார அலுவலர் பானுமதி பேசுகை யில், குடியிருப்புக்கள் மற்றும் குடியிருப்புக்களின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கி குட்டையாக நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக் காலங்களிலோ அல்லது வேறு காரணங்களினால் தண்ணீர் தேங்கி நின்றால், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளிடம் சொல்லி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

அப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகமால் பார்த்துக் கொள்ள வேண்டும். நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க நகராட்சி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரநிதிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மாவட்ட மலேரியா ஒழிப்பு அதிகாரி கபாலி பேசுகையில், மலேரியா நோய் உட்பட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் முறைகள் மற்றும் அதனை அழிக்கும் முறைகள் குறித்து விளக்கினார். இதில், சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 276 of 841