Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கவுன்சிலர் தரக்குறைவான பேச்சு மாநகராட்சி அதிகாரிகள் வெளிநடப்பு : மண்டல கூட்டத்தில் பரபரப்பு

Print PDF

தினகரன்                23.12.2010

கவுன்சிலர் தரக்குறைவான பேச்சு மாநகராட்சி அதிகாரிகள் வெளிநடப்பு:மண்டல கூட்டத்தில் பரபரப்பு

கோவை, டிச 23:

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் சுயேட்சை கவுன் சிலர் அதிகாரிகளை தரக்குறைவாக விமர்சித்ததை கண் டித்து அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் ராஜூ, உதவி நிர் வாக பொறியாளர் சசிகலா, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் துவங்கியதும் சுயேட்சை கவுன்சிலர் வேல்முருகன் பேசுகையில், "தடா கம் ரோட்டில் கழிப்பிடம் கட்டும் பணி பாதியில் நிற் கிறது.

இதற்கு அதிகாரிகள் தான் காரணம்," என்றார். அதிகாரிகள் இடம் மாற்றம் தொடர்பான ஒப்பீட்டு பேச் சில் பேய் போய் பிசாசு வந் தது என ஒட்டு மொத்தமாக விமர்சித்தார்.

இதற்கு கூட்டத்தில் பங் கேற்ற மாநகராட்சி அதிகாரி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கவுன்சிலரின் நாகரீகமற்ற பேச்சை கண்டித்து வெ ளியேறுவதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.

அவருக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் வெளியேறினார். பின்னர் மேற்கு மண்டல தலைவர் செல்வ ராஜ் அதிகாரிகளை சமரசம் செய்த தோடு வேல்முருகன் பேசியதற்கு கண்டனம் தெரிவித் தார். இதை தொடர்ந்து அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் பல்வேறு பணி கள் தொடர்பாக 70 தீர்மானங் கள் கொண்டு வரப்பட்டன. இதில் மேயர் மற்றும் அவரது மகள் காயத்ரி கவுன்சிலராக உள்ள வார்டுகளுக்கு மட்டும் ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

மற்ற வார்டுகளுக்கு ரூ. 5 லட்சம் கூட ஒதுக்கவில்லை எனக்கூறி அதிமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து மண்டல கூட்டத்தில் கோரம் இல்லாததால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.

 

குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு கழிவுநீரை அகற்றும் பயிற்சி

Print PDF

தினகரன்             23.12.2010

குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு கழிவுநீரை அகற்றும் பயிற்சி

சென்னை, டிச.23:

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் அடைப்பை நீக்குவதற்கோ, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கோ, நுழைவாயிலில் ஆள் இறங்குவதை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. தமிழக அரசும் இதற்கு தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கழிவுநீர் அடைப்புகளை நீக்கவும், தொட்டிகளை சுத்தம் செய்யவும் தேவையான அதிநவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, சம்பந்தமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் மூலமாகவும், துண்டுபிரசுரம் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கழிவுநீர் கட்டமைப்பை பராமரிப்பது, அடைப்பை நீக்குவது, முன் எச்சரிக்கை குறித்து டிசம்பர் 3ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 137 பணியாளர்கள் உள்ளிட்ட 5 குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி ஜனவரி 14ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சாலை புதுப்பிக்க டெண்டரை எதிர்த்த மனு தள்ளுபடி

Print PDF

தினகரன் 23.12.2010

சாலை புதுப்பிக்க டெண்டரை எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை, டிச.23:

200 சாலைகள் புதுப்பிக்க ரூ. 18 கோடிக்கு விட்ட டெண்டரை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

சென்னையில் உள்ள பாலாஜி ரோடுவேஸ் நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னையில் சுமார் 200 சாலைகளை புதுப்பிக்க மாநகராட்சி கடந்த 9ம் தேதி டெண்டர் விட்டது. டெண்டர் தொகை ரூ. 18 கோடி என்பதால், எங்களை போன்ற முதல் வகுப்பு காண்டிராக்டர்கள் கலந்து கொள்ள முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் கொடுக்க உள்நோக்கத்துடன் மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. எனவே, இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து, ‘தமிழக அரசின் கொள்கை முடிவை பின்பற்றி, விதிமுறைகளுக்கு உட்பட்டு மாநகராட்சி சாலை போட டெண்டர் விட்டுள்ளது. இதில் குறுக்கிட நீதிமன்றம் விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறேன்என்று தீர்ப்பு கூறினார்.

 


Page 278 of 841