Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு பரிசு

Print PDF

தினத்தந்தி                30.01.2014

மாநகராட்சியில் 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு பரிசு

வேலூர் மாநகராட்சி சார்பில், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கமிஷனர் ஜானகி தலைமை தாங்கினார். மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு, 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய, மாநகராட்சி ஓட்டுனர் சங்க செயலாளர் சுரேந்திரனுக்கு தங்கப்பதக்கம், ரூ.500 மதிப்புள்ள சேமிப்பு பத்திரத்தை வழங்கினார். அத்துடன் 15 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய 14 டிரைவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் தருமலிங்கம், மண்டலக்குழு தலைவர் குமார், என்ஜினீயர் பாஸ்கரன், ஓட்டுனர் சங்க தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் திருமலைவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

ஆதார் அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்க அழைப்பு

Print PDF

தினமலர்                30.01.2014

ஆதார் அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்க அழைப்பு

குமாரபாளையம்: "தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பணி, இன்று (ஜன., 30) முதல் துவங்குகிறது' என, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சங்கரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

குமாரபாளையம் நகராட்சி பகுதியில், இன்று (ஜன., 30) தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பணி துவங்குகிறது. இப்பணி முதல் கட்டமாக, ஒன்றாவது வார்டுக்கு, சின்னநாயக்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 18வது வார்டுக்கு, ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியிலும் நடக்கிறது. காலை, 10 மணி முதல், மாலை, 5 மணி வரையும் அனைத்து நாட்களிலும், (விடுமுறை நாட்கள் உள்பட) ஃபோட்டோ எடுக்கப்படும்.

ஃபோட்டோ எடுக்கவரும், ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள், 2010ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி கணக்கு பாஸ் புத்தகம் போன்ற ஆவணங்களை எடுத்து வரவேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மற்ற வார்டுகளுக்கு, ஃபோட்டோ எடுக்கும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

குமாரபாளையத்தில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று முதல் தொடக்கம்

Print PDF

தினமணி                30.01.2014

குமாரபாளையத்தில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று முதல் தொடக்கம்

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை (ஜன. 30) தொடங்குகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் என்.சங்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமாரபாளையம் நகரில் தேசிய அடையாள அட்டைக்கு முதல்கட்டமாக ஒன்றாவது வார்டு மக்களுக்கு சின்னப்பநாய்க்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 18-ஆவது வார்டு மக்களுக்கு ஹோலிகிராஸ் பள்ளியிலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் புகைப்படம் எடுக்கும் பணிக்கு 5 வயதுக்கு மேற்பட்டோர் 2010-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகைச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் வந்து தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

விடுமுறை நாள்களிலும் இந்தப் பணி நடைபெறும். பிற வார்டுகளில் புகைப்படமெடுக்கும் நாள், விவரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு நகராட்சி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 


Page 29 of 841