Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

முன்னாள் பேரூராட்சி தலைவர்களுக்கு சலுகைகள்

Print PDF

தினகரன்            13.12.2010

முன்னாள் பேரூராட்சி தலைவர்களுக்கு சலுகைகள்

தக்கலை, டிச.13: குமரி மாவட்ட முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் பி.டி.எஸ் மணி குமரி மாவட்டம் வந்த துணை முதல்வரிடம் நேரில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

குமரி மாவட்டத்தில் 1970 முதல் இன்று வரை பெரும்பான்மையான பஞ்சாயத்து தலைவர் வறுமையால் வாடுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது போன்ற சலுகைகள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிடைப்பது இல்லை.

முன்னாள் பேரூராட்சி தலைவர்களுக்கு பென்சன், இலவச பஸ்பாஸ், மருத்துவ அலவன்ஸ், எல்லா நோய்களுக்கும் சிசிச்சை பெற காப்பீடு திட்ட வசதி, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை உள்பட சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

லஞ்சம்: நந்தம்பாக்கம் பேரூராட்சி அதிகாரிகள் இருவர் கைது

Print PDF

தினமணி                 10.12.2010

லஞ்சம்: நந்தம்பாக்கம் பேரூராட்சி அதிகாரிகள் இருவர் கைது

சென்னை, டிச. 9: சென்னை நந்தம்பாக்கத்தில் கட்டட அனுமதி வழங்க ரூ 6,000 லஞ்சம் வாங்கும்போது, பேரூராட்சி செயல் அலுவலரும் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்த விவரம்:

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவர் நந்தம்பாக்கத்தில் தனக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் 2 மாடி கட்டடம் கட்ட அனுமதி கோரி நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தை அணுகினார்.

இவரது விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ், அனுமதி வழங்க ரூ6,000-ஐ லஞ்சமாக தர வேண்டும் என நிர்பந்தித்தாராம்.

இது குறித்து ஸ்ரீதர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôரிடம் புகார் அளித்தார். இதன்படி, ரூ6 ஆயிரத்துடன் தேவதாûஸ சந்திக்க ஸ்ரீதர் வியாழக்கிழமை காலையில் சென்றார். அப்போது தனது உதவியாளர் நவநீதத்தை பணம் வாங்குவதற்கு தேவதாஸ் அனுப்பினாராம்.

இதையடுத்து ஸ்ரீதரிடம் இருந்து ரூ 6 ஆயிரத்தை வாங்கும் போது நவநீதமும் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் செயல் அலுவலர் தேவதாஸýம் கைது செய்யப்பட்டனர்.

 

திருவொற்றியூர் நகராட்சி டெண்டர் வழங்குவதில் தொடரும் சிண்டிகேட்!

Print PDF

தினமணி            10.12.2010

திருவொற்றியூர் நகராட்சி டெண்டர் வழங்குவதில் தொடரும் சிண்டிகேட்!

திருவொற்றியூர், டிச. 9: திருவொற்றியூர் நகராட்சி ஒப்பந்தப் பணிகளில் தொடர்ந்து சிண்டிகேட் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு முறையான வகையில் கிடைக்க வேண்டிய ஒப்பந்தங்கள் கிடைக்காமல் போவதுடன் நகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

முக்கிய நகராட்சிகளில் ஒன்று திருவொற்றியூர் நகராட்சி. ஆண்டுக்கு சுமார் ரூ25 கோடி வரை நிதி வருவாய் உள்ளது.

இந்த நகராட்சியில் டெண்டர் விடுவதில் நீண்ட நாள்களாகவே பிரச்னை உள்ளது. அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் சிண்டிகேட் அமைத்து டெண்டரில் பங்கேற்று வந்தனர். சிண்டிகேட்டை மீறி டெண்டரில் பங்கேற்றால் அவர்களின் படிவங்கள் கிழித்தெரிந்ததும், டெண்டர் பெட்டியில் தண்ணீரை ஊற்றிய சம்பவங்களும் நகராட்சியில் நடந்து வந்தன.

மேலும் டெண்டர் பணிகளுக்கு சுமார் 30 சதவீதம் வரை கமிஷன் வழங்க வேண்டியிருப்பதாகவும் தகுதியான ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை உள்ளதாகவும் துணை முதல்வரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. திருவொற்றியூர் நகராட்சிக்கான அனைத்து டெண்டர்களும் இனிமேல் செங்கல்பட்டில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலத்தில் மட்டுமே நடைபெறும் என இரு மாதங்களுக்கு முன்பு அரசு உத்தரவிட்டது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கை ஒப்பந்ததாரரின் சிண்டிகேட்டினை ஒழிக்க இயலாத நிலையே தொடர்கிறது என ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.

அடி, உதை: இந்நிலையில் கடந்த டிச.3-ல் திருவொற்றியூர் நகராட்சியில் சாலைகள் சீரமைப்பதற்கான 20 பணிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டிற்கு செங்கல்பட்டில் டெண்டர் தேர்வு நடைபெற்றது. இதில் சிண்டிகேட் காரணமாக பெரும்பாலான பணிகளுக்கு இரண்டு பேர் வீதமே விண்ணப்பித்திருந்தனர். இதில் திருவொற்றியூர் துலுக்கானம் தெருவைச் சேர்ந்த பி.முத்தையா என்ற ஒப்பந்ததாரர் சுமார் ரூ.9 லட்சத்திற்கான வேலைகளுக்கு டெண்டர் போட வந்துள்ளார். அவரை வழி மறித்த ஒரு கும்பல் சிண்டிகேட்டினை மீறி டெண்டர் போடக்கூடாது என மிரட்டியுள்ளனர். ஆனாலும் அடையாளம் தெரியாத வேறு ஒருவர் மூலம் பெட்டியில் படிவத்தை முத்தையா போட்டுவிட்டார்.

இந்நிலையில் டெண்டர் பிரிக்கப்பட்டதில் குறைவான மதிப்பீடு காரணமாக அந்த வேலை முத்தையாவிற்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியாணையை வாங்குவதற்காக முத்தையா திருவொற்றியூர் நகராட்சி அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்துள்ளார். அப்போது முத்தையாவை கும்பலாகச் சேர்ந்து சிலர் தாக்கி உள்ளனர்.

இது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் முத்தையா வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார். முத்தையா தாக்கப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் ஒப்பந்ததாரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


Page 283 of 841