Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகரங்களில் வார்டு வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்                10.12.2010

நகரங்களில் வார்டு வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

விழுப்புரம், டிச. 10: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிலரங்கம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடாசலம், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடாஜன் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்ட கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், நகராட்சி கமிஷ்னர்கள் மற்றும் பிறதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இப்பயிலரங்கத்தை தொடங்கி வைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:

வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு அட்டவணை வழங்கப்படும். கணக்கெடுப்பு படிவத்தில் அமைவிடங்கள் பற்றிய விவரம் இருக்கும். நகரங்களில் வார்டு வாரி யாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். கிராமத்திற்கு வார்டு நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் ஒரு பக்கத்திற்கு 8 வரிகள் உள்ளது.

மக்கள் தொகை சார்ந்த கணக்கெடுப்பு என்பது வருவாய்த்துறையை சார்ந்த கிராமங்களை கொண்டு தான் கணக்கெடுக்க வேண் டும். நீலம் மற்றும் கருப்பு மைகொண்ட பேனாவால் எழுத வேண்டும். வேறு மையினால் எழுதினால் ஸ்கேன் செய்தாலும் கணினியில் தெளிவாக பார்க்க முடியாது. ஒரு பக்கத்தில் எட்டு பேருக்கு பதிலாக கூடுதலாக ஒரு நபரை சேர்த்து எழுதினால் கணினியில் முழுவதுமாக தெரியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக ஒவ்வொரு மாவட்டத்தி லும் ஒரு மைக் செட் நாங் கள் வழங்கி வருகிறோம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடக்கும்போது படம் மூலம் காட்டும் வசதி இருக்க வேண்டும். இதை 7 மணிநேரம் படமெடுத்து ஒவ்வொரு வகுப்பிற்கும் டிவிடி மூலம் வழங்குகிறோம். பணியினை விளக்குவதற்கு இரண்டு டிவிக்களை வைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தமாக படத்தை போட்டு அனைவருக்கும் விளக்க வேண்டும். இதற்கு உண்டான உபகரணங்கள் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பேரூராட்சிகளில் உள்ளது. இக்கணக்கெடுப்பு பணிக்கு ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

கோவை மீன் மார்க்கெட் மூடல் மாநகராட்சிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

Print PDF

தினகரன்                    10.12.2010

கோவை மீன் மார்க்கெட் மூடல் மாநகராட்சிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

கோவை, டிச. 10: புதிய மீன் மார்க்கெட்டில் கடை ஒதுக் கீடு தொடர்பான விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. உக்க டம் மீன் மார்க்கெட்டை வியாபாரிகள் மூடினர். கோவை உக்கடத்தில் மாநகராட்சி கட்டடத்தில் மீன் மார்க்கெட் 60 கடையு டன் செயல்படுகிறது.இந்த கடைகளுக்கு மாற்றாக உக்க டம் செல்வபுரம் பைபாஸ் ரோட்டில், 1.37 கோடி ரூபாய் செலவில் புதிதாக மீன் மார்க் கெட் கட்டப்பட்டுள்ளது. ஏசி, இறைச்சி கழிவு நீர் சுத்திகரிப்பு வசதியுடன் இந்த மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டது. 68 கடை கொண்ட இந்த மீன் மார்க்கெட் கடை களை ஒதுக்கீடு செய்ய மின் ஏலம் (இ ஆக்ஷன்) விடப்பட்டது. இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். முறைப்படி கடை ஒதுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

ஆனால், இதை மீன் மார்க்கெட்டில் ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகள் ஏற்கவில்லை. மின் ஏல முறை கூடாது, ஏற்கனவே கடை நடத்தும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடை ஒதுக்கவேண்டும்.

இல்லாவிட்டால், கடை கள் பெற, முன் வைப்பு தொ கைக்காக தாங்கள் செலுத்திய வரைவோலை யை திரும்ப தரவேண்டும் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தை நேற்று 2வது நாளாக முற்றுகையிட்டனர். எதிர்ப் பை மீறி நடந்த முற்றுகை காரணமாக, மீன் வியாபாரிகள் 120 பேர் கைது செய்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மின் ஏலம் நடந்தது.ஆன் லைன் மூலம் 120 பேர் கடை கேட்டு விண்ணப்பம் கொடுத் திருந்தனர். டெண்டர் பெட்டி யில்,19 பேர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர். மின் ஏலத் தில் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க, மாநகராட்சி அலு வலக வளாகம் நேற்று போ லீஸ் கட்டுபாட்டில் விடப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் தவிர மற்றவர்கள் மாநகராட்சி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. 70 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, மாநகர மீன் வியாபாரிகள் உக்கடம் மீன் மார்க்கெட்டை மூடி போராட்டத் தில் இறங்கினர். மார்க்கெட் டில் மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி கடைகள் மூடப்பட்டது.

கோவை மாநகர மீன் வியாபாரிகள் சங்க தலைவர் சுபேர் கூறுகையில், " உக்கடம் மீன் மார்க்கெட் ஒரு நாள் மூடப்பட்டது. சுமார் 20 டன் மீன் விற்பனை நடக்கவில் லை. சுமார் 50 லட்ச ரூபாய் க்கு விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடை நடத்தும் வியாபாரிகளுக்கு புதிய மார்க்கெட்டில் மின் ஏலமின்றி முன்னுரிமை கொடு த்து கடை ஒதுக்கவேண்டும். இதை நாங்கள் வலியுறுத்தி வந்தோம். ஆனால், மாநகரா ட்சி நிர்வாகம் ஏற்கவில்லை. எங்களுக்கு முன்வைப்பு தொகையை திரும்ப கேட்டிருக்கிறோம். பழைய மார்க்கெட்டில் தொடர்ந்து கடைநடத்த திட்டமிட்டிருக்கிறோம், " என்றார்.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், " மின் ஏலம் திறக்கப்பட்டது. விண்ணப்பங்களை வரும் 13ம் தேதி இறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இடைதரகர்களை தவிர்க்கவே மின் ஏல முறை கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகள், தங்களுக்கு புதிய மீன் மார்க்கெட்டில் முன் பகுதியில் கடை கேட்கிறார்கள்.

அதுவும் மின் ஏல முறை கூடாது என்கிறார்கள். நியாயப்படி அப்படி கடை ஒதுக்க முடியாது. பழைய மீன் மார்க் கெட் கட்டடம் பழுதடைந்து விட்டது. சமீபத்திய மழையில் 4 கடை சரிந்து விட்டது. கட்டடத்தால் உயிர் அபாயம் ஏற்படும் நிலை இருக்கிறது. எனவே பாதுகாப்பு கருதி இடிக்கவேண்டியிருக்கிறது. இருப்பினும் உடனடியாக அதை செய்ய முடியாது. பழைய மீன் மார்க்கெட் இடிக்கப்படும் போது அங்கே காய்கனி மார்க்கெட் கொ ண்டு வரும் யோசனை பரிசீலனையில் இருக்கிறது, " என்றார். புதிய ஏலத்தை எதிர்த்து மின் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு செய்தனர், இதில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள்.

மீனுக்கு கிராக்கி

மீன் மார்க்கெட் மூடப்பட்டதால் மீனுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. பொதுமக்கள், ஓட்டல் கடை நிர்வாகத்தி னர் மீன் வாங்க முடியாமல் தவித்தனர். வஜ்ஜிரம், சச் கரா, கிழங்கா, மத்தி, கட்லா, ரோகு, பாற, வாளை, மொய் மீன்கள் பொதுமக்களுக்கு மிக குறைவாகவே கிடைத்தது. கிராக்கி காரணமாக மீன் விலை 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது. உக்கடம் ஒட்டு மொத்த மீன் மார்க்கெட் வழக்கம் போல் இயங்கியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள் வியாபாரிகள் மீன்களை அதிகளவு பெற்று சென்றனர்.

 

நிறுத்தி வைத்த ஊதியம் பட்டுவாடா நகராட்சி ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி

Print PDF

தினமலர்             09.12.2010

நிறுத்தி வைத்த ஊதியம் பட்டுவாடா நகராட்சி ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம், கடந்த ஒரு வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறித்து, "காலைக்கதிர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து, நேற்று மாலையே ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டதால், ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் நகராட்சியில் குடிநீர் வழங்கல், இன்ஜினியரிங் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவற்றில் 70க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், 130க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். அனைத்து ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 1ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டு விடும். இம்மாதம் 7ம் தேதி ஆகியும் நவம்பர் மாதத்துக்கான ஊதியம் துப்புரவு பணியாளர்கள் நீங்கலாக, பிற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. வரி வசூலை காரணம்காட்டி ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் இந்நடவடிக்கையால் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து "காலைக்கதிர்' நாளிதழில் விரிவான செய்தி நேற்று வெளியானது. அதையடுத்து, நேற்று மாலை நகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், நவம்பர் மாத ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டது. அதனால் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 


Page 284 of 841