Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பராமரிப்புப் பணி: பஸ் வழித்தடத்தை மாற்ற முடிவு

Print PDF

தினமணி            08.12.2010

பராமரிப்புப் பணி: பஸ் வழித்தடத்தை மாற்ற முடிவு

அருப்புக்கோட்டை, டிச. 7: நெடுஞ்சாலைத் துறையின் திருச்சுழி சாலையில் 10-ம் தேதி முதல் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், பஸ் வழித்தடத்தை மாற்ற அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

திருச்சுழி மார்க்கமாக வரும் பஸ்கள் வாழவந்தம்மன் கோயில் வழியாக வெள்ளக்கோட்டையிலிருந்து பந்தல்குடி சாலையை வந்தடைந்து, தெற்கு தெரு வழியாக பழைய, புதிய பஸ் நிலையங்களுக்குச் செல்ல வேண்டும். அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி, கமுதி செல்லும் பஸ்கள் எஸ்.பி.கே பள்ளி, கல்லூரி வழியாக புறவழிச் சாலைக்குச் செல்ல வேண்டும்.

ஆத்திபட்டிக்கு வந்து செல்லும் மினி பஸ்கள் வாழவந்தம்மன் கோயில் வழியாக வெள்ளக்கோட்டை வந்து பந்தல்குடி சாலையைச் சென்றடைய வேண்டும். கனரக வாகனங்கள், லாரிகள் புறவழிச் சாலை வழியாக வந்து செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கபட்டது.

நாடார் சிவன் கோயில் பஸ் நிறுத்ததில், நகராட்சியால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிழற்குடையின் முன்தான் அனைத்து பஸ்களையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கபட்டது.

கூட்டத்தில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுப்பாராஜ், நகர் மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜானகிராமன், நகர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டி, அருப்புக்கோட்டை போக்குவரத்துக் கழக மேலாளர் பாலசுப்பிரமணியன மற்றும் தனியார் பஸ் உரிமையளர்களும் கலந்து கொண்டனர்.

 

அரியலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம்

Print PDF

தினமலர்                08.12.2010

அரியலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம்

அரியலூர்: அரியலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவி விஜயலெக்ஷ்மி செல்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர்(பொ) மோகன், துணைத் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கிளர்க் குமரன் வரவேற்றார்.அரியலூர் நகராட்சி பகுதியில் ஆளிறங்கு கிணறுகள் மற்றும் தனியார் மனித கழிவு தொட்டிகளில், பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணி மேற்கொள்ளும் போது, திடீர் மரணம் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது என்பதை வலியுறுத்தி, அரசிடம் வந்த கடிதம் பார்வைக்கு வைக்கப்பட்டது. கவுன்சிலர் குணா பேசுகையில், ""நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் மண்டியுள்ள கருவையை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

 

இரு ஆண்டாக ஏலம் போகாத தாராபுரம் பஸ்ஸ்டாண்ட் ஹோட்டல்

Print PDF

தினமலர்                 08.12.2010

இரு ஆண்டாக ஏலம் போகாத தாராபுரம் பஸ்ஸ்டாண்ட் ஹோட்டல்

தாராபுரம்: தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் உணவுக்காக பஸ்கள் நின்று செல்லாததால், போதிய வியாபாரமாகாத ஹோட்டலை, குத்தகைக்கு எடுக்க யாரும் முன் வர மறுக்கின்றனர். தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பஸ்களில் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் ஹோட்டலில் தொலை தூர பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்ஸை நிறுத்தி உணவு சாப்பிட்டுச்செல்வதுவழக்கம். சில ஆண்டுகளுக்கு முன் தாராபுரம் - மதுரை மார்க்கத்தில் தாராபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இரு ஹோட்டல்கள் துவக்கப்பட்டன.

அங்கு பஸ்களை நிறுத்துவதை டிரைவர், கண்டக்டர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அனைத்து அரசு பஸ்களும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அங்கு நின்று செல்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் அதிகரிக்க, பஸ் ஸ்டாண்டு குத்தகை இனங்கள்தான் வழிவகுக்கும். பஸ் ஸ்டாண்டில் பஸ்களுக்கு நுழைவு வரி வசூல், இளநீர், கட்டணக் கழிப்பிடம், வணிக வளாக கடைகள் என பல்வேறு குத்தகை இனங்களை, பொதுமக்கள் போட்டி போட்டு அதிக தொகைக்கு ஏலம் கோருவர். நகராட்சி வருவாயை அதிகரிக்க இது உதவும்.

தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் உணவுக்காக அரசு பஸ்கள் நிறுத்தப்படாததால், பஸ் ஸ்டாண்டு ஹோட்டல் வியாபாரமின்றி நஷ்டம் ஏற்பட்டது. நகராட்சிக்கு வாடகை கூட கட்ட முடியாத நிலை ஹோட்டல் உரிமையாளருக்கு ஏற்பட்டது. அவரும், கடையை பூட்டிச் சென்றார். அதன் பின், இரண்டு ஆண்டுகளாக எவரும் ஹோட்டல் இனத்தை ஏலம் எடுக்க முன் வரவில்லை. நகராட்சி சார்பில் பல முறை டெண்டர் கோரியும் பயனில்லை.தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் ஹோட்டல் ஏலம் போகாமல், வெள்ளரி மற்றும் பல்வேறு சிறு கடைகள் அங்கு தோன்றியுள்ளன. நகராட்சிக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 


Page 287 of 841