Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்          07.12.2010

நகராட்சி கூட்டம்

அரியலூர், டிச. 8: அரியலூர் நகராட்சி நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் தலை மை வகித்தார். நகராட்சி ஆணையர்(பொ) மோகன் முன்னிலை வகித்தார். நகராட்சி அலுவலர் குமரன் தீர்மானம் பற்றி விளக்கி கூறினார். பாதாள சாக் கடை திட்டம் ஆளிறங்கு கிணறுகள் மற்றும் தனியார் மனிதக்கழிவு தொட்டிகளில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கி பணிகளை மேற்கொண்டு திடீர் மரணம் ஏற்படாமல் தடுப்பது. மனித கழிவுகளை மனிதனே அகற்றக்கூடாது என்ற சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் இருந்து வரப்பெற்ற அரசாணையின்படி மனித கழி வுகளை மனிதரை கொண்டு அகற்றுவதை தடை செய் வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மீன் மார்க்கெட் ஏலம் விட எதிர்ப்பு மாநகராட்சியில் பரபரப்பு

Print PDF

தினகரன்               07.12.2010

மீன் மார்க்கெட் ஏலம் விட எதிர்ப்பு மாநகராட்சியில் பரபரப்பு

கோவை, டிச. 8: கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் செல்வபுரம் ரோட்டில் 1.37 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஒருங் கிணைந்த மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் கூடிய இந்த கட்டடத்தில் 68 கடை அமைந்துள்ளது. இந்த கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய நேற்று மின் ஏலத்திற்கான விண்ணப்ப பதிவு நடந் தது. நேற்று மாலை வரை 150க்கும் மேற் பட்ட வியாபாரிகள் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தற்போது உக்கடம் மீன் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலர், மின் ஏலம் கூடாது. மொத்தமாக 68 கடை தான் இருக்கி றது. இந்த கடைகள், தற்போது கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கே போ தாது. மின் ஏலம் விட்டால் வெளி நபர் கள், குறிப்பாக வியாபாரிகள் அல்லாதவர்கள் கடைகளை கையகப்படுத்தும் நிலை உருவாகும் என தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மின் ஏலத்திற்கான பதிவை நிறுத்துமாறு கூறினர். மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் இன்ஸ்பெக் டர் ஸ்ரீராமச்சந்திரன் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து, மின் ஏலம் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், "தற்போது செயல் பட்டு வரும் உக்கடம் மீன் மார்க்கெட் டில் உள்ள கட்டடங்கள் பழுதடைந்து விட்டது. 60க்கும் மேற்பட்ட கடை இருந் தாலும் 18 கடை மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. முறைப்படி புதிய மீன் மார்க்கெட் மின் ஏல முறையில் வியாபாரிகளுக்கு ஒப்படைக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகளவு பதிவு செய்து வருகிறார்கள். முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு கடைகளை வழங்கவேண்டும் என ஏற்கனவே உக்கடத்தில் மீன் கடை நடத்தி வரும் வியாபாரிகள் கேட்டனர்.

அப்படி கடை தர முடியாது. விதிமுறைப்படி தான் கடைகளை ஒப்படைக்க முடியும். வரைவோலை, மின் ஏலம் முடிந்த பின்னரே கடை ஒதுக்காத நபர்களுக்கு திருப்பி வழங்க முடியும். தரை கடை வியாபாரிகளுக்கு, மார்க்கெட்டின் ஒரு பகுதியில் கடை ஒதுக்க முடிவு செய்திருக்கிறோம். ஆனால், கட்டணம் குறித்து விரைவில் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்," என்றார்.

மாநகர மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகி சுபேர் கூறுகையில், " கடந்த 21 ஆண்டுகளாக உக்கடத்தில் மாநகராட்சி கட்டடத்தில் கடை நடத்தி வருகிறோம். கட்டடம் இல்லாதபோதே இங்கே பல தலைமுறையாக மீன் கடை நடத்தப்படுகிறோம். மின் ஏலம் மூலம் காலம் காலமாக கடை நடத்தி வந்தவர்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது. புதிய மீன் மார்க்கெட்டில் 68 கடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 2 கடை மீன் வளர்ச்சி கழகத்திடம் விடப்படவுள்ளது. 10 ஆட்டிறைச்சி கடை, 10 கருவாடு கடை, 46 மீன் கடை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் புதிய கடை கேட்டு 50 ஆயிரம் ரூபாய்க்கு வரைவோலை வழங்கியிருக்கிறோம். மாநகராட்சி நிர்வாகம், மின் ஏலம் மூலம் அதிக நபர்களை வரவழைக்க முடிவு செய்து விட்டது. இது ஏற்புடையதல்ல. பழைய கடையில் 60க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இருக்கிறோம். மின் ஏலம் வந்தால் கடை கிடைக்காது. எனவே நாங்கள் கொடுத்த வரைவோலையை திருப்பி கேட்டிருக்கிறோம். கடை கிடைக்காவிட்டால் ஏற்கனவே உள்ள இடத்தில் மீன் கடை நடத்து வோம், " என்றார்.

 

தேனி நகர் மையப் பகுதியில் ரூ24 லட்சத்தில் மின் விளக்குகள்

Print PDF

தினகரன்               07.12.2010

தேனி நகர் மையப் பகுதியில் ரூ24 லட்சத்தில் மின் விளக்குகள்

தேனி, டிச. 7: தேனி நகரின் மையப்பகுதியில் ரூ.24 லட்சம் செலவில் உயர்மின் அழுத்த மின் விளக்குகள் பொருத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தேனி நகரின் முக்கிய சாலைகளான மதுரை சாலை, கம்பம் சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டு சாலையின் நடுவே கான்கிரீட்டினால் ஆன தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சாலையினை ஒட்டியிருந்த மின் கம்பங்கள் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டன. பெரியகுளம் சாலையிலும் சாலை அகலப்படுத்தி மின் கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

சாலை அகலப்படுத்தி மின் கம்பங்கள் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டதால் மின் ஒளி சாலையின் மையப்பகுதியில் கிடைக்காமல் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. நகரின் சாலையை இரண்டாக பிரித்து அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சுவற்றில் மின் விளக்குகளை அமைத்தால் மின் ஒளி சாலையின் இருபுறமும் நன்கு பரவும் என தேனி&அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து சாலையின் நடுவே உயர்அழுத்த மின் விளக்குகள் பொருத்த உள்ளது. இதற்கான சர்வே பணி நடந்து வருகிறது.

இதற்காக ரூ.24 லட்சம் நிதி பொது நிதியில் இருந்து ஓதுக்கவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தேனி நகரில் கம்பம் சாலையில் கொட்டக்குடி ஆற்று பாலம் வரையிலும், மதுரை சாலையில் பங்களா மேடு வரையிலும், பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் வரையிலும் சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பங்களாமேடு பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் தாண்டி கருவேல்நாயக்கன்பட்டி வரை சாலை யின் இருபுறமும் தெரு மின்விளக்குகள் பொருத்த ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 


Page 288 of 841