Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பாதாள சாக்கடை திட்டம் கழிவுநீர் சேமிப்பு டேங்க் அமைக்க மக்கள் எதிர்ப்பு

Print PDF

தினகரன்              07.12.2010

பாதாள சாக்கடை திட்டம் கழிவுநீர் சேமிப்பு டேங்க் அமைக்க மக்கள் எதிர்ப்பு

ஈரோடு, டிச. 7:ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவு சிங் யூனிட் அண்ணாநகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

தற்போது பெரியசேமூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கட்டும் பணி நடந்து வரு கிறது. இந்நகராட்சிக்குட்பட்ட 9 மற்றும் 10ம் வார்டுக்குட்பட்ட பகுதிகள் மற் றும் அருகாமையில் உள்ள வீரப்பன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை அண்ணாநகர் ரிசர்வ் சைட் பகுதியில் சேமித்து வைக்கும் வகையில் திட்டம் தயாரித்துள்ளனர். இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு திறந்தவெளி கிணறும், ஆழ்குழாய் கிணறும் உள்ளன. ஏற்கனவே சாயப்பட்டறைகளால் இங்குள்ள ஆழ்துளை கிணறுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ரிசர்வ் சைட்டுக்கான தொகையை வீட்டு உரிமையாளர்களால் வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்தப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பூங்கா கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான டேங்க் அமைக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், தற்போது எங்களது உபயோகத்தில் உள்ள திறந்தவெளி கிணற்று நீரும், ஆழ்குழாய் கிணற்றுநீரும் கடுமையாக பாதிக்கும். சுற்றுச்சூழலை பாதிப்பதுடன், துர்நாற்றமும் ஏற்பட்டு, நீர்வளத்தையும் இந்த பாதாள சாக்கடை சேமிப்பு டேங்க் பாதிப்படைய செய்யும். எனவே வேறு இடத்திற்கு பாதாள சாக்கடை திட்ட டேங்க்கை அமைக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே இரண்டு முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை சீரமைக்க ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி                    06.12.2010

நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை சீரமைக்க ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு

தேனி, டிச. 5:தேனி நகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகளை சீரமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தேனியில், பெரியகுளம் சாலை, கம்பம் சாலை, மதுரை சாலை ஆகிய மாநில நெடுஞ்சாலைகளில் தார் தளம் அகலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சாலையோரங்களில் இருந்த தெருவிளக்குகள், மின் கம்பங்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாத வகையிலும், போதுமான வெளிச்சம் கிடைக்கும் வகையிலும், மின் விளக்குகளை சாலையின் மையப் பகுதியில் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இதன்படி நேரு சிலையை மையமாக கொண்டு பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கிராஸ், கம்பம் சாலையில் உள்ள கொட்டகுடி ஆற்றுப் பாலம், மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு ஆகிய பகுதிகள் வரை சாலைகளின் மையப் பகுதியில் தடுப்பு மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

விரைவில் இங்கு மின் கம்பங்கள் அமைத்து 150 வாட்ஸ் மெட்டல் ஹைடு விளக்குகள் பொருத்தப்படும். இதற்கென நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுரைச் சாலையில் பங்களா மேடு பகுதியில் இருந்து கருவேல்நாயக்கன்பட்டி வரை நெடுஞ்சாலை ஓரத்தில் புதிததாக தெருவிளக்குகள் அமைப்பதற்கு ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என நகராட்சிப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

 

6 அடி உயரத்தில் சிமென்ட் சாலை

Print PDF

தினமணி         06.12.2010

6 அடி உயரத்தில் சிமென்ட் சாலை

இந்நிதியில் ஆற்று மட்டத்திலிருந்து சுமார் 6 அடி உயரத்தில் 215 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலம் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக பக்கவாட்டுச் சுவர்கள் கட்டி முடிக்கப்பட்டு, ஒன்றரை மாதங்களாகின்றன.

இப்பணி தொடங்கும்போதே சாலையின் குறுக்கே உள்ள சில மின்கம்பங்களை அகற்றுமாறும், இவற்றை மாற்றியமைக்க கட்ட வேண்டிய கட்டணத்தை செலுத்தத் தயாராக உள்ளதாகவும் மின்வாரியத்துக்கு நகராட்சி அதிகாரிகள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்துள்ளனர்.

ஆனால் இன்று வரை இதற்கு உரிய பதில் இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மின்வாரியம் அலைக்கழிப்பதாகப் புகார் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்துக்கு பைல் அனுப்பியுள்ளோம் என்கிறார்களாம். அங்கு கேட்டால் குடியாத்தம் அலுவலகத்துக்கு பைலை அனுப்பி விட்டோம் என்கிறார்களாம்.

மின்கம்பங்களை மாற்றியமைக்க ஆகும் செலவினத்தை செலுத்தத் தயாராக இருப்பதாக நகராட்சி நிர்வாகம் 6 மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பியுள்ளது. மின்வாரியம் பதில் அளிக்காததால் பக்கவாட்டுச் சுவர் அமைத்தும் கடந்த ஒன்றரை மாதமாக பணி முடங்கிக் கிடக்கிறது. இதற்கு அரசு ஒதுக்கிய நிதியும் வங்கியில் உறங்குகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு சாலையை அமைத்து போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 


Page 289 of 841