Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் புதிய அலுவலர்கள் நியமிக்கவில்லை

Print PDF

தினமலர்                  06.12.2010

தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் புதிய அலுவலர்கள் நியமிக்கவில்லை

ஆத்தூர் : தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் இதுவரை அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்நாடு நகராட்சிகள் விதிகள்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நகராட்சிகளை தரம் பிரித்து அரசு அறிவித்தது. அதன்படி 10 கோடி ரூபாய் வருவாய் கொண்ட நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சியாகவும், ஆறு முதல் 10 கோடி ரூபாய் வரை வருவாய் உள்ள நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சியாகவும், நான்கு முதல் ஆறு கோடி ரூபாய் வருவாய் கொண்டவை முதல் நிலை நகராட்சியாகவும், நான்கு கோடி ரூபாய்க்கு குறைவான வருவாய் கொண்டவை இரண்டாம் நிலை நகராட்சிகளாகவும் தரம்பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள 49 மூன்றாம் நிலை நகராட்சிகளில் 36 நகராட்சிகளை தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனுடன் 2006 முதல் 2009ம் ஆண்டு வரையிலான வரவு - செலவு கணக்கு விவரங்களும் நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. அதை பரிசீலனை செய்த அரசு, 36 நகராட்சிகளை தரம் உயர்த்த முடிவு செய்தது. அதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் அசோக் வரதன் ஷெட்டி வெளியிட்டார்.

அந்த உத்தரவில் மறைமலை நகர், குறிச்சி ஆகியவை சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பம்மல், திருவேற்காடு, இனாம்கரூர், கவுண்டம்பாளையம், குனியமுத்தூர், வால்பாறை ஆகியவை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மூன்றாம் நிலை நகராட்சிகளான பூந்தமல்லி, கள்ளக்குறிச்சி, தாந்தோணி, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், பல்லடம், திருத்தங்கல் ஆகியவை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் நரசிங்கபுரம், பள்ளிப்பாளையம், அரியலூர், ஜெயம்கொண்டம், துவாக்குடி, ஜோலார்பேட்டை, அனகாபுத்தூர் உள்ளிட்ட 21 மூன்றாம் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன. தரம் உயர்த்திய நகராட்சிகளில் நான்கு மாதத்துக்கு மேலாக கமிஷனர், பில் கலெக்டர், இன்ஜினியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் புதிதாக நியமிக்கப்படாமல் உள்ளது. மூன்றாம் நிலை நகராட்சியில் பணிபுரிந்து வந்த செயல் அலுவலர்களே, அலுவலக பணிகளை செய்து வருகின்றனர்.

 

மழை பாதிப்புகள் மாநகராட்சி தீவிரம்

Print PDF

தினமலர்           06.12.2010

மழை பாதிப்புகள் மாநகராட்சி தீவிரம்

சென்னை : தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக மேயர் சுப்ரமணியன் கூறினார்.கடந்த இரண்டு நாட்களாக, தொடர்ந்து மழை பெய்வதால், நகரில் பல்வேறு இடங்களில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. புளியந்தோப்பு கன்னிகாபுரம், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது.பங்கிங்காம் கால்வாய் ஓரமுள்ள குடிசை பகுதிகள், தரமணி மற்றும் கோடம்பாக்கம் ராஜ்பிள்ளை தோட்டம் ஆகிய குடிசை குடியிருப்பு பகுதிகளில், தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்களை வெளியேற்ற, மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தி.நகர் பசுல்லா சாலை, உஸ்மான் சாலை, ராகவையா ரோடு, கீழ்பாக்கம் மில்லர் சாலை, புரசைவாக்கம் அவதான பாப்பையா சாலை, எல்டாம்ஸ் சாலை, ஒயிட்ஸ் ரோடு, திருமலை பிள்ளை சாலை ஆகிய இடங்களில் முக்கால் அடி முதல், ஒரு அடி அளவிற்கு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.நகரில் உள்ள பெரும்பாலான வாகன சுரங்கப் பாதைகளில், தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி கணேசபுரம், சுரங்கப்பாதை அருகே அளவுக்கதிகமாக மழைநீர் தேங்குவதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அந்த இடத்தில், மாநகராட்சியின் மூன்று மோட்டார் பம்புகள் தண்ணீரை இரைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.நகரில் பல்வேறு இடங்களில், சிறியதும், பெரியதுமாக 20 மரங்கள் முறிந்து விழுந்தன. அவைகளை, பூங்கா துறை ஊழியர்கள் மின்சார ரம்பம் உபயோகித்து, அறுத்து அப்புறப்படுத்தினர்.

சென்னை மேயர் சுப்ரமணியன், கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று காலை, நகரில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து, மழை தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தினர்.அப்போது மேயர் கூறியதாவது: கடந்த, இரண்டு நாட்களாக சென்னையில் 10 செ.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணிக்கு "பைபர்' படகுகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை நிவாரண மையங்களுக்கு கொண்டு செல்ல வசதியாக, மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைந்து, நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டால், அவர்களுக்கு உணவு வழங்க, மாநகராட்சியில் நான்கு உணவு தயாரிப்பு கூடங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தற்போது, ஓட்டேரி, தரமணி மற்றும் கோடம்பாக்கம் ராஜ்பிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு, உணவு வழங்க 20 ஆயிரம் உணவு பொட்டலங்கள், தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில், தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த 150 மோட்டார் பம்ப்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்தால், பாதிப்புகளை தடுக்கவும் பொதுமக்களை காப்பாற்றி நிவாரண பணிகள் செய்யவும், மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.

 

சாலைகள் சீரமைப்பு சிறப்புத் திட்டத்தில் திருவொற்றியூர் புறக்கணிப்பு: துணை முதல்வரிடம் முறையிட நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமணி               02.12.2010

சாலைகள் சீரமைப்பு சிறப்புத் திட்டத்தில் திருவொற்றியூர் புறக்கணிப்பு: துணை முதல்வரிடம் முறையிட நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

திருவொற்றியூர், டிச. 1: சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த சாலைகள் சீரமைப்புத் திட்டத்தில் திருவொற்றியூர் நகராட்சி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து துணை முதல்வர் மு..ஸ்டாலினை சந்தித்து முறையிடுவது என நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருவொற்றியூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன் (மார்க்சிஸ்ட்) தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி.இராமநாதன் (தி.மு.) முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் எஸ்.கலைச்செல்வன், பொறியாளர் கவுதமன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:

எம்.டி.சேகர் (.தி.மு.): குப்பைகளைக் அகற்ற சேவைக் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.

தன.ரமேஷ் (.தி.மு.): பிறப்பு பதிவேட்டில் பதிவு இல்லை என சான்றிதழ் அளிக்க வழக்கறிஞர் உறுதிமொழிச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தப்படுகிறது. இதற்கு ரூ.500 வரை பொது மக்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த நடைமுறையை நீக்கி எளிதில் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

தமிழ்ச்செல்வன் (தி.மு.): திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலின் மதில் சுவர்களை ஒட்டி லாரிகள் நிறுத்தப்படுகின்றன. மேலும் சிறுநீர் கழிக்குமிடமாகவும் மாறி துர்நாற்றம் வீசுகிறது. எனவே லாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.தனியரசு (தி.மு.): திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் நீண்ட நாள்களாக சாலைகளே போடப்படவில்லை என தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. இதுவரை அப்பகுதியில் என்ன வேலைதான் நடந்துள்ளது?

தலைவர் ஜெயராமன்: திருவொற்றியூர் மேற்கு பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் போடப்படவில்லை.

ஆனால் இதுவரை பாதாளச் சாக்கடை பணிகள் நிறைவடைந்த பகுதிகள், முக்கியச் சாலைகள் என ரூ.5 கோடிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன.

.கருணாநிதி (தி.மு.): சமீபத்தில் நகராட்சி சாலைகளைச் சீரமைக்க தமிழக அரசு ரூ.ஆயிரம் கோடியில் சிறப்புத் திட்டத்தை அறிவித்தது. திருவொற்றியூர் நகரில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இது குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லாததால்தான் சிறப்புத் திட்டத்தில் நிதி கிடைக்கவில்லை.

இப்போதாவது மோசமான நிலையில் உள்ள சாலைகளைச் சீரமைப்பதற்கான மதிப்பீடுகளைச் தயார் செய்ய வேண்டும். பின்னர் நகர்மன்றத் தலைவர் தலைமையில் துணை முதல்வரைச் சந்தித்து சாலைகளைச் சீரமைக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என முறையிடலாம் என்றார்.

தலைவர் ஜெயராமன்: உடனடியாக இதற்கான ஆயத்த வேலைகளைச் செய்கிறேன். அனைவரும் விரைவில் துணை முதல்வரைச் சந்திக்கலாம். இதை நகர்மன்றத்தின் முடிவாக எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நடந்த விவாதங்களை அடுத்து பல்வேறு பணிகள் குறித்த 102 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரே ஒரு தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டது.

சென்னை, டிச. 1: சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் காசிமேடு துறைமுகத்தில் தேங்கியிருந்த குப்பைகளை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் குப்பைகள் தேங்கி, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து குப்பைகளை அகற்ற சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியனுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அதன்படி 36 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், 2 லாரிகள், பாப்காட் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு 30 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. மழைக்காலம் என்பதால் தொற்றுநோய் பரவாமல் இருக்க கொசு மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் இந்தப் பகுதியை தொடர்ந்து தூய்மையாக வைத்திருக்க மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


Page 290 of 841